நடிகர் சூர்யா தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் மாஸ் என்ற படத்தில் நடித்து வருகிறார்.
இந்த படத்தை தொடர்ந்து சூர்யா, பாண்டிராஜ் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். குழந்தைகளின் வாழ்க்கை முறையை அடிப்படையாக கொண்டு உருவாகும் இந்த படத்தில், சூர்யாவுக்கு ஜோடியாக அமலா பால் நடிக்கிறார்.
சூர்யாவின் 2D எண்டர்டேயின்மென்ட் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது. இந்நிலையில், இந்த படத்திற்கு ஹைக்கூ எனப் பெயர் வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் சூர்யா, அமலாபால் தவிர பிந்து மாதவியும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
|