LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    தமிழ் நூல்கள் Print Friendly and PDF
- சமூக அறிஞர்களின் வாசகங்கள் - ஏற்காடு இளங்கோ

சூசன் பி.அந்தோணி

Women must not depend upon the protection of man,

but must be taught to protect herself.


எந்த உரிமையும் பெண்களுக்கு எளிதில் கிடைத்ததில்லை . ஆண்களுக்கு ஓட்டுரிமை இருப்பதுபோல் தங்களுக்கும் ஓட்டுரிமை வழங்க வேண்டும் எனப் போராடிய பெண்களில் முக்கியமானவர் சூசன் பி . அந்தோணி ( Susan Brownell Anthony ) ஆவார் . இவர் 1820 ஆம் ஆண்டு பிப்ரவரி 15 அன்று அமெரிக்காவில் ஆடம்ஸ் நகரில் பிறந்தார் . இவரது குடும்பம் தீவிரமாக அரசியலில் ஈடுபட்டு வந்தது . அடிமை முறை ஒழிப்பு இயக்கத்தில் தீவிரமாக ஈடுபாடு காட்டி வந்தார் . லிங்கன் நிர்வாகத்திற்கு ஆதரவாக பெண்கள் ஆதரவு சங்கத்தை சூசன் உருவாக்கி செயல்பட்டு வந்தார் . மது ஒழிப்புக் கூட்டத்தில் இவருக்கு பேச அனுமதி மறுக்கப்பட்டது . பெண்களுக்கு ஓட்டு அளிக்கும் உரிமை இல்லாததாலேயே அவரை பேச அனுமதிக்கவில்லை .

பெண்கள் உரிமைக்கான பேரவை என்ற அமைப்பை உருவாக்கிப் போராடினார் . இதேபோல் தேசியப் பெண்கள் வாக்குரிமைச் சங்கத்தை 1864 இல் உருவாக்க காரணமாக இருந்தார் . பெண்கள் உரிமைகளை வலியிறுத்தி புரட்சி என்ற வார இதழை எலிசபெத் காடி ஸ்டாண்டன் என்பவருடன் இணைந்து நடத்தினார் . இவர் உலகம் முழுவதும் சென்று பெண்கள் வாக்குரிமை பிரச்சாரம் செய்தார் .1872 ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலில் சட்டத்தை மீறி வாக்களித்தார் . இதனால் கைது செய்யப்பட்டார் . மேலும் பலத் தடைகளை மீறி ஒரே ஆண்டில் 20000 கிலோமீட்டர் பயணம் செய்து 170 இடங்களில் சொற்பொழிவு ஆற்றினார் . இவர் 1906 இல் காலமானார் . இவர் இறந்து 14 ஆண்டுகள் கழித்து பெண்களுக்கு வாக்களிக்கும் உரிமை கிடைத்தது .

by Swathi   on 02 Dec 2015  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
சென்னை புத்தகத் திருவிழாவில்   சென்னை புத்தகத் திருவிழாவில் "தமிழர் உணவு" நூல் வெளியீடு
சிந்தனை தொழில் செல்வம்  -டாக்டர் எம் எஸ் உதயமூர்த்தி வானதி பதிப்பகம் சிந்தனை தொழில் செல்வம்  -டாக்டர் எம் எஸ் உதயமூர்த்தி வானதி பதிப்பகம்
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 26-27 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 26-27
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 22-25 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 22-25
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 17-21 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 17-21
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 14-17 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 14-17
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 9-13 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 9-13
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 5-8 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 5-8
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.