|
||||||||
இனிப்பு ஆப்பம் (sweet appam) |
||||||||
தேவையானவை: புழுங்கல் அரிசி - 1 டம்ளர் பச்சரிசி - ஒன்றரை டம்ளர் வெந்தயம் - 1 டீஸ்பூன் தேங்காய் துருவல் - அரை டம்ளர் ஆப்ப சோடா - 1/2 டீஸ்பூன் உளுத்தம் பருப்பு - 1 கைப்பிடி சின்ன ஜவ்வரிசி - 1 டீஸ்பூன் வெல்லம் - 1/4 கிலோ உப்பு - ஒரு சிட்டிகை எண்ணெய் - தேவையான அளவு செய்முறை: 1.முதலில் புழுங்கல் அரிசி, பச்சரிசி, உளுத்தம் பருப்பு, சின்ன ஜவ்வரிசி, வெந்தயம் அனைத்தையும் ஒன்றாக 2 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். பிறகு கிரைண்டரில் போட்டு, தேங்காய் துருவலையும்,வெல்லம் சேர்த்து நைசாக அரைக்க வேண்டும். 2.பிறகு உப்பு சேர்த்து கரைத்து 8 மணி நேரம் புளிக்க விட வேண்டும். 3.பின்பு ஆப்ப சோடா சேர்த்து கரைத்து வைக்க வேண்டும். அரை மணி நேரம் கழித்து, ஆப்ப சட்டியில் மாவை ஊற்றி, சட்டியை சுழற்றி, மாவை பரப்பி, மூடி வேக விட்டு எடுக்க வேண்டும். |
||||||||
by anitha on 29 May 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|