LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    உலகம்-World Print Friendly and PDF
- வட அமெரிக்கா

சிகாகோவில் நடைபெறும் பெட் னா   மாநாட்டில் தமிழியக்கம் பதிப்பித்த தமிழ் பெயர்களின்   மிகப்பெரிய தொகுப்பான நூலை  தமிழ்வளர்ச்சித்துறை அமைச்சர் வெளியிட்டார்.  

சிகாகோவில் நடைபெறும் பெட் னா   மாநாட்டில் தமிழியக்கம் பதிப்பித்த தமிழ் பெயர்களின்  நூலை  தமிழ்வளர்ச்சித்துறை அமைச்சர் வெளியிட்டார்.  

பத்தாவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு , அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின் 32-வது  தமிழ் விழா, மற்றும் சிகாகோ தமிழ்ச்சங்கத்தின் வெள்ளிவிழா  ஆகியவை  அமெரிக்காவின் சிகாகோ நகரில்  மிகச்சிறப்பாக நடந்து வருகிறது. நான்கு நாள் நிகழ்ச்சியில் இரண்டாம் நாளான இன்று  வி.ஐ.டி  வேந்தர் மற்றும் தமிழியக்கத்தின் தலைவர் திரு.கோ.விசுவநாதன் அவர்களின் சீரிய முயற்சியில் உருவாகியுள்ள "சூட்டி மகிழ்வோம் தமிழ்ப்பெயர்கள்"  என்ற நூல்  வெளியிடப்பட்டது. 

46000 தனித்தமிழ் பெயர்களைக்  கொண்ட இந்த நூலை  வலைத்தமிழ் நிறுவனர் ச.பார்த்தசாரதி மற்றும் எழுத்தாளர் திருமதி.பவள சங்கரி ஆகியோர் தொகுப்பாசிரியர்களாகவும் , புலவர் வே.பதுமனார் அவர்கள் பதிப்பாசிரியராகவும் பங்காற்றி மிகச்செம்மையாக வெளிவந்துள்ள  இந்த நூலை   "தமிழ் வளர்ச்சித்துறை மற்றும்  தொல்லியல்துறை"  அமைச்சர் திரு.  மாஃபா  பாண்டியராஜன் அவர்கள் வெளியிட முதல் பிரதியை வட  அமெரிக்கத் தமிழ்ச்ச்சங்கப் பேரவை (பெட்னா) தலைவர் திரு.சுந்தர் குப்புசாமி, நாடாளுமன்ற உறுப்பினர் திரு.சு.வெங்கடேசன் , தொழிலதிபர் திரு.பால் பாண்டியன் , ஹார்வார்ட் தமிழ் இருக்கை  மருத்துவர்  சு. சம்பந்தம் , வி.ஐ.டி. துணைத்தலைவர் திரு.கோ.வி.செல்வம்,வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச்சங்கத்தின் முன்னாள் தலைவர் திரு.சிவா ,செய்தி வாசிப்பாளர் திருமதி.நிர்மலா பெரியசாமி, எழுத்தாளர் திரு.லேனா தமிழ்வாணன். மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு.விடியல் சேகர் உள்ளிட்டோர் பெற்றுக்கொண்டனர். 

விழாவில் பேசிய தமிழியக்கத்தின் தலைவர் டாக்டர்  கோ.விசுவநாதன் அவர்கள், இன்றைய இளம் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு தமிழில் பெயர் சூட்டுவதைவிட பிறமொழி பெயர்களை அதிகம் பயன்படுத்துகிறார்கள் என்பது மிகவும் கவலையளிக்கும் செயலாகும்.  ஒருவரது  பெயர் என்பது அந்த மனிதனின் பொருள் பொதிந்த அவனது தனித்துவமான அடையாளமாகும். பிறமொழியில் பொருளற்ற பெயர்களை வைப்பது அடையாளத்தை தொலைத்து நிற்கும் நிலையை ஏற்படுத்துகிறது. எனவே இந்த அவலத்தை போக்க இந்நூல் பெரிதும் உதவும்  என்று குறிப்பிட்டார். 

விழாவில் பேசிய நூலில் தொகுப்பாளர் ச.பார்த்தசாரதி குறிப்பிடுகையில், ஒரு தனி மனிதனின் அல்லது ஒரு இனத்தின் வரலாறு அவர்களின் பெவாசிங்டன் வட்டாரத் தமிழ்ச்சங்கத்தின் முன்னாள் தலைவர் திரு.சிவா யரிலிருந்து தொடங்குகிறது. உலகின் வேறு எந்த இனமும் தனக்கு சிறிதும் தொடர்பில்லாத, பொருள் தெரியாத ஒரு சொல்லை தன்  பெயராக வைப்பதில்லை.  தமிழர்கள் குறிப்பாக கடந்த பதினைந்து இருப்பது ஆண்டுகளில் இந்த அவலம் இளம் பெற்றோர்களை பற்றி நாகரீகம் என்ற பெயரில் வாயில் நுழையாத , பொருளற்ற , பிறமொழி பெயர்களை வைக்கும் நிலை உள்ளது.     சங்க இலக்கியங்களிலிருந்தும் , நம் பண்பாட்டை எடுத்தியம்பும் ஒரு நல்ல தமிழ் பெயரை நம் பிள்ளைக்கு சூட்ட இந்த நூல் பெரிதும் பயனளிக்கும் என்று குறிப்பிட்டார். மேலும் திருக்குறள் போன்று ஒவ்வொரு தமிழர் வீடுகளிலும் , தமிழ் நூலகங்களிலும் இருக்கவேண்டிய நூல் இது என்று குறிப்பிட்டார். 
   
விழாவை தொகுப்பாசிரியர்  ச.பார்த்தசாரதி நெறிப்படுத்தினார். விழா ஆயத்தப்பணிகளை  தமிழியக்கத்தின் மாநிலச்  செயலாளர் மு. சுகுமார்  மேற்கொண்டார்.

 

இந்நூலை பெற:

தமிழியக்கம்
34, தென்னைமரத் தெரு
வேலூர் - 632001
தொலைபேசி : 0416 2211402
திறம்பேசி : 9244511402
மின்னஞ்சல் : thamiziyakkam@gmail.com

by Swathi   on 06 Jul 2019  1 Comments
 தொடர்புடையவை-Related Articles
மார்ச் மாத வலைத்தமிழ் பன்னாட்டு இதழ் மார்ச் மாத வலைத்தமிழ் பன்னாட்டு இதழ்
வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின் 33 ஆவது FeTNA 2020 தமிழ் விழா வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின் 33 ஆவது FeTNA 2020 தமிழ் விழா
பேரவையின் 33வது தமிழ் விழா பேரவையின் 33வது தமிழ் விழா
உலகெங்கும் இந்தியாவின் 71-வது குடியரசுதின நிகழ்வுகள்.. உலகெங்கும் இந்தியாவின் 71-வது குடியரசுதின நிகழ்வுகள்..
தைத் திருநாள் விழாவிற்கு வேட்டி உடுத்தி வந்த இங்கிலாந்து அமைச்சர்கள் தைத் திருநாள் விழாவிற்கு வேட்டி உடுத்தி வந்த இங்கிலாந்து அமைச்சர்கள்
சிகாகோ தமிழ்ச்சங்கத்திற்குத் தமிழ்த்தாய் விருது சிகாகோ தமிழ்ச்சங்கத்திற்குத் தமிழ்த்தாய் விருது
சிகாகோவில் சிகாகோவில் "திருவள்ளுவர் தினம்" முதல் முறையாக அய்யன் திருவள்ளுவர் திருவுருவச் சிலை முன்னிலையில் மிகச்சிறப்புடன் கொண்டாடப்பட்டது.
தென்னாப்பிரிக்காவிற்குத் தமிழ்மொழி-கலாச்சார  வளர்ச்சிக்குத் தமிழ்நாடு அரசு உதவியுடன் தமிழ்ப்பல்கலைக்கழகக்  குழு சென்று நடத்திய பயிற்சிப்பட்டறை.. தென்னாப்பிரிக்காவிற்குத் தமிழ்மொழி-கலாச்சார வளர்ச்சிக்குத் தமிழ்நாடு அரசு உதவியுடன் தமிழ்ப்பல்கலைக்கழகக் குழு சென்று நடத்திய பயிற்சிப்பட்டறை..
கருத்துகள்
07-Jul-2019 04:14:31 முனைவர்பி.காசிநாதபாண்டியன் said : Report Abuse
நல்ல முயற்சி. உளமார்ந்த பாராட்டுகள்
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.