|
||||||||
புலம்பெயர்ந்த தமிழர்களுக்கும் "திருக்குறள் முற்றோதல் பரிசுத் திட்டம் " விரிவாக்க கோரிக்கை |
||||||||
அயலகத் தமிழர் நாள் 2016 நிகழ்வில் மாண்புமிகு முதல்வர் அவர்கள் அறிவிக்க ஒரு திருக்குறள் சார்ந்த கோரிக்கை: துறையின் பரிசீலனைக்கு. அனைத்து தமிழ்ச்சங்கங்களும் இதை ஏற்பார்கள் என்று நம்புகிறேன்.. தற்போது நடைமுறையில் இருக்கும் திருக்குறள் திட்டம் : திருக்குறள் மனன முற்றோதல் முடிக்கும் தமிழ்நாட்டின் அனைத்து பள்ளி மாணாக்கர்களுக்கும் ஆண்டுதோறும் ரூபாய் 15,000 பரிசும், சான்றிதழும் வழங்கப்படுகிறது. இதுபோல் தமிழ்நாட்டுக்கு வெளியே பிற மாநிலங்கள். பிற நாடுகளில் இருந்து 1330 திருக்குறள் கற்று முற்றோதல் செய்யும் குறைவான எண்ணிக்கையிலான மாணாக்கர்களை ஊக்குவித்து தமிழ்நாடு அரசு இத்திட்டத்தை விரிவாக்கி அவர்களுக்கும் பரிசும், தமிழ் வளர்ச்சித்துறை பாராட்டு சான்றும் வழங்க கோரிக்கை வைக்கிறோம். பரிசுகள் அந்தந்த நாட்டு தமிழ்ச்சங்கள் அமைப்புகள் வழியே ஒவ்வொரு ஆண்டும் அயலகத் தமிழர் மாநாட்டில் வழங்கினால் சிறப்பாக இருக்கும். திருக்குறள் உலகப் பரவலுக்கு உறுதுணையாக இருக்கும். ஐயன் வள்ளுவர் சிலை கன்னியாகுமரியில் அமைத்து வெள்ளிவிழா கொண்டாடப்பட்ட இவ்வாண்டில் உலகத் தமிழர்களுக்கு இவ்வறிவிப்பு பொருத்தமாக இருக்கும்..
|
||||||||
|
||||||||
|
|
||||||||
|
|
||||||||
|
|
||||||||
|
|
||||||||
| by Swathi on 28 Nov 2025 0 Comments | ||||||||
| கருத்துகள் | |
|
| உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|