LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

வெளியிடப்பட்டது தமிழ்-–இந்தோ-–ஐரோப்பிய மொழிகளின் வேர்ச்சொல் ஒப்பீட்டு அகராதித் திட்டத்தின் பொது முன்னுரை நூல்

 

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில், பள்ளிக்கல்வித் துறை சார்பில், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகமும் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகப் பதிப்புத்துறையும் இணைந்து உருவாக்கிய தமிழ்-–இந்தோ-–ஐரோப்பிய மொழிகளின் வேர்ச்சொல் ஒப்பீட்டு அகராதித் திட்டத்தின் பொது முன்னுரை நூலினையும், முதல் தொகுதி நூலினையும் வெளியிட்டார்.


2022-–2023ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில் , தமிழ்மொழியின் தொன்மையையும் செம்மையையும் நிலைநாட்டிட, பிற உலக மொழிகளுடன் தமிழின் மொழியியல் உறவு குறித்து அறிவியல் பூர்வமான ஆய்வுகளை மேற்கொள்வது அவசியமாகும் என்றும், தமிழ் மொழிக்கும் இந்தோ–ஐரோப்பிய மொழிக் குடும்பத்திற்கும் இடையிலான உறவை வெளிக்கொணரும் வகையில், தமிழ் வேர்ச்சொல் வல்லுநர்களைக் கொண்ட குழு ஒன்றை அமைத்து, தமிழ்-–இந்தோ–-ஐரோப்பிய மொழிகளின் வேர்ச்சொல் ஒப்பீட்டு அகராதித் திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.


அதன்படி, தமிழுக்கும் இந்தோ-–ஐரோப்பிய மொழிகளுக்கும் இடையிலான வேர்ச்சொல் உறவினை ஆய்வு செய்யும் இத்திட்டம், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழக மேற்பார்வையில் முதன்மைப் பதிப்பாசிரியர் கு. அரசேந்திரனின் தலைமையில் ஜூலை 2022-ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் முதன்மைப் பதிப்பாசிரியர் உட்பட 20 அறிஞர்கள் பணிசெய்து வருகின்றனர். இத்திட்டத்தைச் செயல்படுத்த 8 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.


இந்தோ-–ஐரோப்பிய மொழிகள் யாவும் 461 வேர்ச்சொற்களில் உருவானதென ஆங்கில வேர்ச்சொல் அறிஞர் வால்டர் ஸ்கீட் (Walter Skeat) கண்டுபிடித்துள்ளார். இந்த 461 வேர்ச்சொற்களில் 300 வேர்ச்சொற்கள் தமிழுடன் உறவுடையன என இக்குழு கருதுகிறது. இந்த ஆய்வு முடிவுகளை 12 தொகுதிகளாக வெளியிடத் தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம், ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகப் பதிப்புத்துறையுடன் 13.01.2025-இல் ஒப்பந்தம் மேற்கொண்டது.


அதன் அடிப்படையில் முதலமைச்சர், தமிழ்–-இந்தோ-–ஐரோப்பிய மொழிகளின் வேர்ச்சொல் ஒப்பீட்டு அகராதித் திட்டத்தின் பொது முன்னுரை நூலினையும், முதல் தொகுதி நூலினையும் இன்று வெளியிட, ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகப் பதிப்புத்துறையின் இந்தியப் பிரிவின் மேலாண்மை இயக்குநர் சுகந்தா தாஸ் பெற்றுக்கொண்டார்.


இந்த பொது முன்னுரை நூல், தமிழுக்கும் இந்தோ–ஐரோப்பிய மொழிகளுக்கும் இடையிலான உறவுகள் பற்றி இத்தாலிய அறிஞர் அல்பெரடோ டிரோம்பெட்டி (Alfredo Trombetti), ஜெர்மானிய அறிஞர் மேக்ஸ் முல்லர் (Max Muller), அயர்லாந்து அறிஞர் ராபர்ட் கால்டுவெல் (Robert Caldwell), டென்மார்க் அறிஞர் ஹோல்ஞர் பெடர்சன் (Holger Pederson), ரஷ்ய அறிஞர் இல்லிச் விட்ச் (Illich-Svitych), அமெரிக்க அறிஞர்கள் ஸ்டீபன் ஹில்யர் லெவிட் (Stephen Hillyer Levitt), ஆலன் பாம்ஹார்டு (Allan Bomhard) உள்ளிட்ட சிறந்த மொழி அறிஞர்களின் கருத்துகளுடன் இத்திட்டத்தின்கீழ் வெளிவரவுள்ள 12 தொகுதிகளையும் கற்பதற்கான வாயிலாக (gateway) அமைந்துள்ளது.


மேலும், முதல் தொகுதி நூலில் 19 தமிழ் வேர்ச்சொற்களிலிருந்து இலத்தீன், கிரேக்கம், ஜெர்மன், பிரெஞ்சு, ஆங்கிலம் போன்ற மேலை இந்தோ-–ஐரோப்பிய மொழிகளின் சொற்களும் மற்றும் சமஸ்கிருதம், பாலி, சிங்களம் போன்ற பல கீழை இந்தோ-–ஐரோப்பிய மொழிகளின் சொற்களும் உருவான வரலாறு, கருதுகோள் அடிப்படையில் தொகுக்கப்பட்டுள்ளது.

 

 

by hemavathi   on 25 Mar 2025  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
இனி கடனை வலுக்கட்டாயமாக வசூலித்தால் 5 ஆண்டு சிறை - வருகிறது புதிய சட்டம் இனி கடனை வலுக்கட்டாயமாக வசூலித்தால் 5 ஆண்டு சிறை - வருகிறது புதிய சட்டம்
பள்ளிக்கரணை நீர்ப்பிடிப்புப் பகுதிக்குள் காணாமல் போன 165 நீர்நிலைகள் பள்ளிக்கரணை நீர்ப்பிடிப்புப் பகுதிக்குள் காணாமல் போன 165 நீர்நிலைகள்
தமிழ் வார விழா - குரல் கொடுத்த அமைப்புகளுக்கு நன்றி! தமிழ் வார விழா - குரல் கொடுத்த அமைப்புகளுக்கு நன்றி!
'முன்றில்' இலக்கிய அமைப்பு சார்பில், 'மா.அரங்கநாதன் இலக்கிய விருது' வழங்கும் விழா! 'முன்றில்' இலக்கிய அமைப்பு சார்பில், 'மா.அரங்கநாதன் இலக்கிய விருது' வழங்கும் விழா!
தமிழகத்தில் 1.57 லட்சம் பேருக்கு எச்.ஐ.வி தொற்று  - அமைச்சர் மா.சுப்பிரமணியன் தமிழகத்தில் 1.57 லட்சம் பேருக்கு எச்.ஐ.வி தொற்று - அமைச்சர் மா.சுப்பிரமணியன்
தமிழறிஞர் உதவித்தொகை உயர்வு - குறமகள் இளவெயினிக்கு திருவுருவச்சிலை -  மானியக்கோரிக்கை விவாதத்தில் அறிவிப்பு தமிழறிஞர் உதவித்தொகை உயர்வு - குறமகள் இளவெயினிக்கு திருவுருவச்சிலை - மானியக்கோரிக்கை விவாதத்தில் அறிவிப்பு
மாநிலங்களின் நியாயமான உரிமைகளைப் பாதுகாக்கக் குழு மாநிலங்களின் நியாயமான உரிமைகளைப் பாதுகாக்கக் குழு
கடலூர் பெண்  குரூப் -1 தேர்வில் முதலிடம் பெற்று சாதனை கடலூர் பெண் குரூப் -1 தேர்வில் முதலிடம் பெற்று சாதனை
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.