LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    தமிழ் மொழி - மரபு Print Friendly and PDF
- மொழி வளர்ச்சிக் கட்டுரைகள்

தமிழ் வயிற்று மொழி அல்ல, வாழ்க்கை மொழி!!..

 

தமிழ் பேசினால் 120 ஆண்டுகள் உயிர் வாழலாம். இது எப்படி சாத்தியமாகும் என்பதை காண்போம்.

கல் தோன்றி மண்தோன்றாக் காலத்து முன் தோன்றிய மூத்த முதுமொழி தமிழ்மொழி. இதோ சித்தர்கள் தந்த தமிழ்மொழியின் சிறப்புகளில் ஒன்றைக் காண்போம்:-

உயிராகி மெய்யாகி ஆயுதமான தமிழ் மொழியில்
ஒரு நிமிடத்திற்கு 15 மூச்சு, X ஒரு நாழிகையில் 24 நிமிடங்கள்,
நாழிகைக்கு 360 (15X24) மூச்சு எனச் சித்தர்களால் வகுக்கப்பட்டுள்ளது.
(இதை வைத்தே வட்டத்துக்கு 360 பாகைகள் வைக்கப்பட்டது)
ஒரு மணி நேரத்துக்கு 900 மூச்சு,ஒரு நாளைக்கு 21,600 மூச்சு வீதம் ஓடுகிறது. இதற்கும் தமிழுக்கும் என்ன சம்மந்தம் என்று கேட்கின்றீர்களா? சம்பந்தம் இருக்கிறது.

இந்த 21,600 மூச்சுக்களைக் குறிக்கவே தமிழில் 216 (உயிர்மெய்) சார்பெழுத்துகள் உருவாக்கப்பட்டன. மூச்சை இப்படி 21,600 வீதம் நாள் ஒன்றுக்கு செலவு செய்தால் ஒரு மனிதன் 120 ஆண்டுகள் வரை உயிருடன் இருக்கலாம்.

மூச்சின் விகிதம் கூடினால் ஆயுள் குறையும். மூச்சாற்றலை அதிகம் விரயம் செய்யாமல் பேசும் ஒரே மொழி உலகத்திலேயே தமிழ் மொழி மட்டுமே!

1 நிமிடத்திற்கு 15 மூச்சும்,
1 மணி நேரத்திற்கு 900 மூச்சும்;
1 நாளிற்கு 21,600 மூச்சும் ஓடுகின்றது.

உயிர்மெய்யெழுத்துக்கள் 216 என்பது இந்த 21,600 மூச்சுக்களையே குறிக்கும். ஒரு மனிதன் தன் வாழ்நாளில் தினமும் 21,600 மூச்சுக்கு மிகாமல் உபயோகம் செய்தால் அவனுடைய ஆயுள் 120 ஆண்டுகளாகும்.
ஆனால், உட்கார்ந்திருக்கும் போது 12 மூச்சும், நடக்கும் போது 18 மூச்சும், ஒடும்போது 25 மூச்சும், தூங்கும் போது 32 மூச்சும், உடலுறவின் போதும், கோபம் முதலான உணர்ச்சிகளில் சிக்கும் போது 64 மூச்சும் 1 நிமிடத்தில் ஓடுகின்றன. இந்த மூச்சினுடைய அளவு எவ்வளவு மிகுதியாகிறதோ அதற்கு தகுந்தாற்போல் ஆயுள் குறைகிறது.

தமிழ் வயிற்று மொழி அல்ல; நீடித்த ஆயுளுடன் ஆரோக்கியமாக வாழ்வதற்கு வாழ்க்கை மொழி.

ஆகவே, தமிழ் மொழியை வாழும் மொழியாகப் பார்த்துக் கொண்டால், நம்மை விட்டு போகாமல் காத்துக் கொண்டால், அதுவே போதுமானது. அப்போது தமிழ் வாழும்.தமிழர்களும் வாழ்வார்கள். தமிழ் என்றும் இருக்கும்.

-கவிஞர் ஆர்.டி.என்.பாலன்.

by Swathi   on 21 Sep 2018  1 Comments
 தொடர்புடையவை-Related Articles
முயற்சித்தால்  என்று எழுதுவது சரியா? முயற்சித்தால் என்று எழுதுவது சரியா?
தமிழ் மொழி பேசும் மக்களை தமிழ் மொழி பேசும் மக்களை "தமிழர்" என்று அடையாளப்படுத்தும் சங்க இலக்கிய குறிப்புகள்!!
தாய்லாந்தில் தமிழர்களின் நினைவைப் போற்றும் 'நடுகல்' திறப்பு விழா - அமைச்சர் சிவசங்கர், அப்துல்லா எம்.பி. மரியாதை. தாய்லாந்தில் தமிழர்களின் நினைவைப் போற்றும் 'நடுகல்' திறப்பு விழா - அமைச்சர் சிவசங்கர், அப்துல்லா எம்.பி. மரியாதை.
தமிழ் மாதங்கள் 12 அறிந்ததே. ஆனால், தமிழ் ஆண்டுகள் 60 தெரியுமா? தமிழ் மாதங்கள் 12 அறிந்ததே. ஆனால், தமிழ் ஆண்டுகள் 60 தெரியுமா?
கணித்தமிழ் வல்லுனர் திரு மு.சிவலிங்கம் அவர்கள் மறைந்தார் - தமிழுக்காக தொண்டு செய்தவர் - அஞ்சலி செலுத்துவோம்.. கணித்தமிழ் வல்லுனர் திரு மு.சிவலிங்கம் அவர்கள் மறைந்தார் - தமிழுக்காக தொண்டு செய்தவர் - அஞ்சலி செலுத்துவோம்..
பன்மொழிப் புலவர் மயிலை சீனி.வேங்கடசாமி பன்மொழிப் புலவர் மயிலை சீனி.வேங்கடசாமி
ஈழத்துப் பன்முகத் தமிழறிஞர் பூராடனார் க. தா. செல்வராசகோபால் ஈழத்துப் பன்முகத் தமிழறிஞர் பூராடனார் க. தா. செல்வராசகோபால்
எழுத்தாளரும், இலக்கியவாதியுமான நா.பார்த்தசாரதி எழுத்தாளரும், இலக்கியவாதியுமான நா.பார்த்தசாரதி
கருத்துகள்
24-Nov-2018 00:23:57 அருணபிரதாப் நடராஜன் said : Report Abuse
பழங்கால தமிழ் இவ்வாறு இல்லை .......பழங்கால தமிழ் 51 எழுத்துத்துகள் கொண்டு இருந்தது ......இதனை திருமூலர் தனது திருமந்திரத்தில் 4 வது தந்திரத்தில் பல இடங்களில் மீண்டும் மீண்டும் ஆதி எழுத்து ,சோதி எழுத்து என்று சொல்லி உள்ளார்.................
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.