LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    தமிழிசை Print Friendly and PDF
- தமிழிசை செய்திகள்

அமெரிக்காவில் நடந்த தமிழிசை பயிற்சிப் பட்டறையில் தமிழிசை வீட்டிலிருந்தே கற்க இணைய வகுப்புகள் தொடங்கப்பட்டது...

வட அமெரிக்காவில் தமிழிசையை குழந்தைகளும் இசையுடன் பாடவும், சங்க இலக்கியங்கள் உள்ளிட்டவற்றை குழந்தைகள் பாடல் வடிவில் கற்கவும் இது ஒரு வாய்ப்பாக அமைகிறது. இதற்காக சில தமிழ்ச்சங்கங்கள் நூறு பாடல்களை தேர்ந்தெடுத்து அதில் பாட கேட்டுக்கொள்கிறார்கள். இதில் வெற்றிபெறும் குழந்தைகளுக்கு பல்வேறு பரிசுகளும், சான்றிதழும் வழங்கி ஊக்கப்படுத்துகிறார்கள் .  மேலும் அமெரிக்காவில் இயங்கும் 167-க்கும் மேற்பட்ட தமிழ்ப்பள்ளிகளில் பெரும்பாலானவை தமிழிசை பாடலை அவர்களின் பள்ளிகளில் நடத்தப்படும் போட்டிகளில் வைத்து பாடச்சொல்லி பரிசு வழங்குகிறார்கள்.  ஆனால் இவைகளை முறையாக சொல்லிக்கொடுக்க தகுந்த தமிழிசை அறிஞர்கள் எல்லா மாநிலங்களிலும் கிடைப்பதில்லை.   

 

இந்தக் குறையை போக்க திருபுவனம் குரு.ஆத்மநாதன் அவர்கள் தமிழ்நாட்டிலிருந்து வரவழைக்கப்பட்டு ஆண்டுதோறும் பல மாநிலங்கள் தமிழ்ச்சங்கம், தமிழ்ப்பள்ளிகளின் உதவியுடன் பயிற்சிப் பட்டறையை நடத்துகிறார்கள் . அந்த வகையில் இரண்டு மாத சுற்றுபயணத்தில் தமிழிசை பயிற்சி வகுப்புகளை நடத்த வந்துள்ள திருபுவனம் குரு.ஆதமனாதன் அவர்கள் வெர்ஜினியா, மேரிலாந்து, நியூஜெர்சி, நியூஹாம்சையர், டல்லாஸ் டெக்சாஸ், ஹூஸ்டன் டெக்சாஸ் உள்ளிட்ட பல இடங்களில் ஒருவார தமிழிசை பயிற்சிப் பட்டறை ஏற்பாடு செய்து நடந்துவருகிறது. ''

 

இதுவரை வெர்ஜினியா, மேரிலாந்து, நியூஜெர்சி ஆகிய மாநிலங்களில் நிகழ்ச்சிகள் முடிந்து அடுத்ததாக நியுஹாம்சையர் மாகாணம் செல்கிறார். இதுவரை நடந்த இந்த தமிழிசை நிகழ்ச்சியில் ஐந்து வயது குழந்தைகள் முதல் சிலப்பதிகாரம், பாரதியார், பாரதிதாசன், அருனாச்சல கவிராயர், வள்ளலாரின் திருவருட்பா உள்ளிட்ட பல பாடல்களை இசையுடன் பாடுவதற்கு அமெரிக்க மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு ஏற்பட்டுள்ளது. 

 

இதைப் பார்க்கும் பெரியவர்களும் , பெற்றோர்கள் , திருமுறை, திருப்புகழ் வாசிப்புக் குழுக்கள் இசையுடன் பாடல் பாடும் நுட்பத்தை கற்றுக்கொள்வதற்கு ஆர்வமுடன் வந்து குழந்தைகள் வகுப்புகள் முடிந்ததும் கற்றுக்கொண்டு பயனடைந்து வருகிறார்கள்.  இந்த நிகழ்சிகளை தமிழிசையை ஏற்கனவே திரு.ஆத்மநாதன் அவர்களுடன் பயின்று குறுந்தகடு வெளியிட்டுள்ள பல மாணவர்களின் பெற்றோர்களும், வலைத்தமிழ்.காம் ஆகியவை இணைந்து இதை ஒருகிணைத்து வருகிறார்கள். 

 

இதில் கலந்துகொண்ட பலரும் தொடர்ந்து ஸ்கைப் இணையம் வழியே எங்கிருந்தாலும் எங்கள் குழந்தைகளுக்கு தமிழிசையை சொல்லிக்கொடுங்கள் என்று கேட்டு வருகிறார்கள். தமிழ், சமஸ்கிரதம், தெலுங்கு ஆகிய மொழிகளில் புலமை பெற்று பாடிவரும் குரு.ஆத்மநாதன் அவர்கள் இணையம் வழி சொல்லிக்கொடுக்க  இசைந்து ஆர்வம் உள்ளவர்களை பதிவு செய்துகொள்ள  www.valaitamil.com/music/ கேட்டுகொள்ளப்பட்டார்கள்.   உலகம் முழுதும் உள்ள தமிழர்கள் தங்கள் குழந்தைகளை இசையை இணையம் வழி ஸ்கைப்-ல் கற்க இந்த இணைப்பில் அவர்கள் விவரங்களை பதிவுசெய்தால் அவர்களுக்கு மற்ற விவரங்களும், விருப்பமான நேரம், நாள் ஒதுக்கப்படும் என்றும் இது அவர்கள் அவரவர் நாடுகளில் குழுவாக கற்க கொடுக்கும் கட்டணத்திலிருந்து மிகக்குறைவாக இருக்கும் என்றும் , குறைவான கட்டணத்தில் தனிப்பயிற்சி வீட்டிலிருந்தே பிரபலமான இசை ஆசிரியரிடம் கற்க வாய்ப்பாக அமையும் என்றும் தெரிவித்தார்கள் . 

 

ஒரு குழந்தை எத்தனை ஆண்டுகள் இசை முறையாக அடிப்படையிலிருந்து கரகவேண்டும் என்ற கேள்விக்கு, திருபுவனம் குரு.ஆத்மநாதன் அவர்கள் குறிப்பிடுகையில், ஒவ்வொரு குழந்தையும் ஒரு வேகத்தில் கற்றுக்கொள்கிறார்கள். தோராயமாக இரண்டு ஆண்டுகள் கற்றுக்கொண்டாலே அவர்களால் மேடையில் பாடும் திறமையை ஏற்படுத்தும் வகையில் சொல்லிக்கொடுக்க திட்டமிட்டுள்ளோம் என்றும் இதற்காக சிறப்பான பாடத்திட்டத்தை உருவாக்கியுள்ளதாக தெரிவிக்கிறார்.  இது குழந்தைகளுக்கு மட்டுமின்றி பெரியவர்களும் கற்றுக்கொள்ளும் வகையில் இருக்கும் என்றும் தெரிவிக்கிறார்.. 

 

 

வெர்ஜினியாவில் நடந்த தமிழிசை நிகழ்ச்சியின் காணொளி: (ஐந்து நாட்களில் திருபுவனம் குரு.ஆத்மநாதன் அவர்களுடன் பாடல் கற்று ஆறாவது நாள் பாடிய பாடல் )
https://www.youtube.com/watch?v=GmzSL9ygK1E&t=226s
https://www.youtube.com/watch?v=5FEgv0igq-k&t=328s
https://www.youtube.com/watch?v=YunsEisehFo


வெர்ஜினியாவில் நடந்த தமிழிசை நிகழ்ச்சியின் காணொளி: (ஐந்து நாட்களில் திருபுவனம் குரு.ஆத்மநாதன் அவர்களுடன் பாடல் கற்று ஆறாவது நாள் பாடிய பாடல்)

தமிழிசை குழு 1

https://www.youtube.com/watch?v=GmzSL9ygK1E&t=226s

 

தமீழிசை குழு 2

https://www.youtube.com/watch?v=5FEgv0igq-k&t=328s

 

தமிழிசை குழு 3

https://www.youtube.com/watch?v=YunsEisehFo

 

வெர்ஜினியா: தமிழிசை-தமிழ் மரபு பயிற்சிப் பட்டறை-2018
by Swathi   on 28 Jul 2018  1 Comments
 தொடர்புடையவை-Related Articles
சென்னையில் ஐந்து நாட்கள் தமிழிசை விழா சென்னையில் ஐந்து நாட்கள் தமிழிசை விழா
தமிழிசை கற்க வலைத்தமிழ் கல்விக்கழக இணைய தளம் தமிழிசை கற்க வலைத்தமிழ் கல்விக்கழக இணைய தளம்
பண்ணிசை விழா  -தொடக்க நிகழ்வை வட  அமெரிக்காவில் முதல் முறையாக இவ்வாண்டு வலைத்தமிழ் குழு தொடங்கியது. பண்ணிசை விழா -தொடக்க நிகழ்வை வட அமெரிக்காவில் முதல் முறையாக இவ்வாண்டு வலைத்தமிழ் குழு தொடங்கியது.
திருமுறைகளில் குறிப்பிடப்படும் இசைக்கருவிகள் திருமுறைகளில் குறிப்பிடப்படும் இசைக்கருவிகள்
தமிழாய்வு அறக்கட்டளையின் இரண்டாம் உலகத் தமிழாய்வு மாநாடு  பேரூராதீனம், சிரவை ஆதீனம் இணைந்து நடத்திய மாநாட்டில் இயற்றப்பட்ட தீர்மானங்கள். தமிழாய்வு அறக்கட்டளையின் இரண்டாம் உலகத் தமிழாய்வு மாநாடு பேரூராதீனம், சிரவை ஆதீனம் இணைந்து நடத்திய மாநாட்டில் இயற்றப்பட்ட தீர்மானங்கள்.
தமிழ் இசைக் கடலின் அமுதான தமிழிசை விழா தமிழ் இசைக் கடலின் அமுதான தமிழிசை விழா
தமிழ்நாட்டில் முதல் மாவட்டமாக நாமக்கல் மாவட்டத்தில்  தமிழிசை பயிற்சி துவக்கவிழா நடைபெற்றது. தமிழ்நாட்டில் முதல் மாவட்டமாக நாமக்கல் மாவட்டத்தில்  தமிழிசை பயிற்சி துவக்கவிழா நடைபெற்றது.
எழில்மிகு பெருவங்கியம் என்கிற நாகசுரம் எழில்மிகு பெருவங்கியம் என்கிற நாகசுரம்
கருத்துகள்
31-Jul-2018 15:08:32 வெ தி முருக வினோத் குமார் said : Report Abuse
வணக்கம்.அமெரிக்க தமிழ் பள்ளி மாணவர்களின் தமிழிசை ஆர்வம் வாழ்க! வளர்க தமிழிசையயும், ஆன்மீகத்தையும் பிரிக்க முடியாது.
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.