LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

தமிழை மொழி என்று நினையாமல் உயிர் என்று நினைப்பவர்கள் தமிழக மக்கள்: துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்!

தமிழை மொழி என்று நினையாமல் உயிர் என்று நினைப்பவர்கள் தமிழக மக்கள் என துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கூறியுள்ளார். 

உலக தமிழர்கள் அனைவரையும் ஒரு குடையின் கீழ் ஒருங்கிணைப்பதற்காக “தமிழியக்கம்” என்ற அமைப்பு தொடங்கும் விழா சென்னை பாரிமுனையில் உள்ள ராஜா அண்ணாமலை மன்றத்தில்  நடந்தது.

விழாவுக்கு, தமிழியக்கத்தின் நிறுவன தலைவரும், வி.ஐ.டி. பல்கலைக்கழக வேந்தருமான கோ.விசுவநாதன் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் கருமுத்து தி.கண்ணன் வரவேற்றார். 

சிறப்பு விருந்தினராக மொரீசியஸ் ஜனாதிபதி பரமசிவம் பிள்ளை வையாபுரி, கயானா நாட்டின் பிரதமர் மோசசு வீராசாமி நாகமுத்து ஆகியோர் கலந்து கொண்டனர்.

விழாவில்  துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது:

தமிழை ஒரு மொழி என்று நினையாமல், அதனை தங்கள் உயிர் எனக்  கருதியவர்கள், தமிழக மக்கள். தமிழ் மக்கள் தங்கள் உயிரெனப் போற்றிய அன்னைத்  தமிழ் மொழி என்றும் தழைத்தோங்க வேண்டும்.  

தமிழுக்கும்,  உலகத் தமிழின முன்னேற்றத்திற்கும் தொண்டாற்ற முனைந்திருக்கும்  ‘தமிழியக்கம்’ அமைப்புக்குத் தேவையான உதவிகளை அரசு செய்யும்.  இந்நிகழ்ச்சியில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை செயல்படுத்த அரசு  என்றென்றும் உறுதுணையாக இருக்கும் என்றார்.

இதில் பாஜ மூத்த தலைவர் இல.கணேசன், தமிழக  பாஜ தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, டாக்டர் அக்பர் கவுசர், புதிய தமிழகம்  கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

by Mani Bharathi   on 16 Oct 2018  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
சுட்டெரிக்கும் வெயில்- கேரளாவின் சுட்டெரிக்கும் வெயில்- கேரளாவின் "வாட்டர் பெல்" முறை அறிமுகம்.
குறளில் மேலாண்மை’ ஆங்கில நூல் வெளியீட்டு விழா. குறளில் மேலாண்மை’ ஆங்கில நூல் வெளியீட்டு விழா.
சென்னையிலிருந்து அயோத்தி செல்கிறது தங்கத் தகட்டில் எழுதிய ராமாயணப் புனித நூல். சென்னையிலிருந்து அயோத்தி செல்கிறது தங்கத் தகட்டில் எழுதிய ராமாயணப் புனித நூல்.
40 வருட அடையாளம்! முடிந்தது டீல்.. மூடப்படும் உதயம் தியேட்டர். 40 வருட அடையாளம்! முடிந்தது டீல்.. மூடப்படும் உதயம் தியேட்டர்.
சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா. சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா.
சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா. சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா.
தமிழகம் காரைக்குடி அருகே 148 ஆண்டுக்காலக் கல்வெட்டு கண்டுபிடிப்பு. தமிழகம் காரைக்குடி அருகே 148 ஆண்டுக்காலக் கல்வெட்டு கண்டுபிடிப்பு.
மறைந்த பிறகும் மற்றவர்களுக்கு உதவும் நடிகர் டேனியல் பாலாஜி.. கண்கள் தானம் அளிக்கப்பட்டன! மறைந்த பிறகும் மற்றவர்களுக்கு உதவும் நடிகர் டேனியல் பாலாஜி.. கண்கள் தானம் அளிக்கப்பட்டன!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.