|
|||||
மார்ச் 13-ல் மதுரை உலகத் தமிழ்ச்சங்கம் சார்பில் தமிழ்க்கூடல் மற்றும் 'உலக மொழிகளில் திருக்குறள்' நூல் வெளியீட்டு விழா |
|||||
![]()
மதுரை உலகத் தமிழ்ச்சங்கம் சார்பில் 156-157 ஆவது தமிழ்க்கூடல் மற்றும் 'உலக மொழிகளில் திருக்குறள்' நூல் வெளியீட்டு விழா மார்ச் 13ம் தேதி வியாழக்கிழமை நடைபெறவிருக்கிறது.
மதுரை உலகத் தமிழ்ச்சங்கத்தின் கூட்ட அரங்கில் முற்பகல் 10 மணிக்குத் தொடங்கும் இந்த நிகழ்வுக்கு மதுரை உலகத் தமிழ்ச்சங்கத்தின் இயக்குநர் முனைவர் ஔவை அருள் தலைமை வகிக்கிறார். உலகத் தமிழ்ச்சங்கத்தின் ஆய்வறிஞர் முனைவர் சு.சோமசுந்தரி வரவேற்புரை ஆற்றுகிறார்.
'திருக்குறள் மொழிபெயர்ப்புகளும் உலகப் பரவலாக்கமும்' என்ற தலைப்பில், தமிழ்க்கூடலுரை மற்றும் ஏற்புரை நிகழ்த்துகிறார், உலக மொழிகளில் திருக்குறள்: தொகுப்புத் திட்டத்தின் ஒருங்கிணைப்பாளர் வலைத்தமிழ் ச.பார்த்தசாரதி.
'வையத்தலைமை கொள்' என்ற தலைப்பில் பட்டிமன்றப் பேச்சாளர் டோக்கியோ ராமநாதன் உரையாற்றுகிறார்.
தஞ்சாவூர் தமிழ்ப்பல்கலைக்கழகத் தகைசால் பேராசிரியர் வீ.ரேணுகாதேவி நூல் மதிப்புரை ஆற்றுகிறார். உலகத் தமிழ்ச் சங்கத்தின் ஆய்வு வளமையர் முனைவர் ஜான்சிராணி நன்றியுரை ஆற்றுகிறார்.
|
|||||
by hemavathi on 11 Mar 2025 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|