LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    தமிழ் மொழி - மரபு Print Friendly and PDF
- மொழி வளர்ச்சிக் கட்டுரைகள்

தமிழை சிதைக்கும் காரணிகள் !

எந்த ஒரு தமிழ் வார இதழ் வாசித்தாலும் எந்த ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சி  பார்த்தாலும் , ஒன்று மட்டும் பொது வாக காண ப்படுகிறது ..அது என்ன வென்றால் ,அதில் சுமார் 30% சொற்கள் ஆங்கிலமாக கலந்து இருப்பது தான்  .இந்த நிலைமை இப்படியே தொடர்ந்தால் விரைவில் தமிழ் மொழி ஒரு சிதைப்பட் ட 'தங்க்லீஷ் 'ஆக மாறிவிடும் அபாயம் உள்ளது . இதை தமிழர்கள் ஆகிய நாம் எப்படி தடுக்கலாம் ?

தமிழர்களின் அளவில்லா ஆங்கில  மோகம்

தமிழ் நாட்டை பொருத்தவரையில் , ஆங்கிலேயர் ஆண்ட காலத்திலிருந்து ஆங்கில மோகமும் நம்மை ஆண்டுகொண்டு இ ருப்பதை  யாராலும் மறுக்கமுடியாது . இந்த ஆங்கில ஆதிக்கம், நம் சிந்தனையையும் ஆண்டு கொண்டு தமிழை ,தமிழில் பேசுவதை புறந்தள்ளிக் கொண்டிருப்பதை நம் கண் கூடாக காண்கிறோம் .நம் குழந்தைகளை ஆங்கில வழிக் கல்வியில் பெருமையுடன் சேர்த்து ,அவர்களை அதில் பேச ஊக்குவித்து ,எல்லோரிடம் சொல்லி மகிழும் ஒரே இனம் நம் தமிழ் இனந்தான் !  இதற்கெல்லாம் காரணம் தான் என்ன ? நம்மை அறியாமலேயே நாம் தமிழை அழித்துக் கொண்டிருக்கிரோமா ? ஏன் இந்த சுய வெறுப்பு ?

என்னுடைய சிங்கை அனுபவம்

சிங்கப்பூர் சென்றி ருந்த போது ,'வாட்ச் ' வாங்குவதற்காக ,ஒரு கடையில் சென்று  நான் 'வாட்ச் ' வேண்டும் என்றேன் .அங்கிருந்த தமிழ்ப்  பெண் 'அண்ணாச்சி ,மணிக் கடிகாரமா ?' என்று அழகான தமிழில் கேட்க, நான் பதிலுக்கு ,திரும்பவும்  'ஆமா ,வாட்ச் தான் 'என்று சொல்ல , அந்தப்பெண் திரும்பவும் அதே கேள்வியை கேட்க, நான் திரும்பவும் ,அதே பதிலை சொல்ல ,ஒரே வேடிக்கை தான்,போங்கள்  ! சிறிது நேரம் கழித்து தான் எனக்கு அவர்கள் தூய தமிழ் பேசுவதே புரிந்தது ! ஏன் நான் அதைக் கூட புரிந்துக் கொள்ளவில்லை ? என் மேல் தப்பா ?அல்லது நம்முடைய தமிழ் சமுதாயம் மேல் தப்பா ?

இதைப் போல் இன்னொரு சம்பவம் .இந்த முறை இது நடந்தது கன்னியாகுமரியில் .சூரிய அஸ்தமனத்தை ரசித்துக் கொண்டிருந்த என்னை ஒருவர் தமிழில் ஏதோ கேட்டார் .நான் அதற்கு ஆங்கிலத்தில் பதில் கூறினேன் .இரு முறை என் ஆங்கில பதிலை கேட்டுவிட்டு ,அவர்  என்னிடம் "நீங்க ,தமிழன் தானே ? பின்னே ஏன் தமிழ்ல பதில் சொல்ல மாட்டேன்கிறேங்க ?" என்று ஓங்கி  கன்னத்தில் அறை விட்டது போல் கேட்டார் .எனக்கு ஒரே அவமானமான உணர்வு ! சே !இனிமேல் இருந்து தமிழ்ல தான் பேசணும் என்று முடிவெடுத்தது தான் ,அதன் பிறகு ஒரு நாள் கூட தப்பி தவறி கூட ஆங்கிலத்தில் பேசவில்லை என்று சொல்வேன் என்று எதிர் பார்க்காதீர்கள் ! இன்னும் முயன்று கொண்டுதானிருக்கிறேன் ,முடியவில்லை .ஏன் ?

நம்மை இயக்கும் நம் உள் மனது !

நாம் அன்றாடம் செய்யும் செயல்கள் எல்லாம் நாம் சிந்தித்து செய்பவை அல்ல .சுமார்  75% அனிச்சை(reflex) செயலாக நடை பெறுவது தான் .இந்த அனிச்சை செயல்கள் உள்மனதின் ஆழத்தில் திட்டமிடப் பட்டு(programmed) பதிவாயிருக்கிறது .நாம் நினை த்தால் கூட இதை மாற்றுவது கடினம் .உம் .யாராவது என் காலை மிதித்தால் நான் 'அம்மா ' என்று கத்தாமல் 'தாத்தா ' என்று கத்த்துவேன் என்று  முடிவெடுத்து பாருங்கள் !என்ன முயன்றாலும்  'அம்மா' என்று தான் கத்த வரும் ! ஏன் என்றால் அது உள்மனதின் பதிவு.அதை உள்மனது நுழைந்து தான் மாற்ற முடியும் .உள்மனதில் இதைப்  பதிப்பது யார் ?

உள்மனதை ஊடுருவும் ஊடகங்கள் !

நான் சிறுவனாக இருந்த போது என்னுடைய நடை ,உடை,பாவனை எல்லாவற்றையும் பாதித்தது என்னுடைய குடும்பம், ஆசிரியர் ,சமூகம், அப்புறம் ஒரு அளவுக்கு திரை ப்படங்கள் போன்றவை தான் .என்னுடைய தமிழை தீர்மானித்ததும் இவை தான் .தொலைக் காட்சியோ ,வலைத்  தளங்களோ இல்லாத காலம் அது .என்னுடைய தமிழ் ஆங்கிலம் அதிகம் கலக்காத அழகு தமிழாக இருந்தது .ஆனால் இப்போது என் 1ம் வகுப்பு படிக்கும் பேத்தியிடம் தமிழில் பேசுவதை விட ஆங்கிலத்தில் பேசுவது எளிது ,என்கிற அவல நிலைக்கு தள்ளப் பட்டிருக்கிறோம் .காரணம், நம்மை சூழ்ந்திருக்கும் எல்லாம் நம்மை பாதிக்கின்றன .ஆங்கிலக் கல்வி ,ஆங்கிலம் பேசினால்தான் உயர்வு என்று நினைக்கும் ஆசிரியர் ,நண்பர்கள், சமூகம், ஊடகங்களில் 30% ஆங்கில ஊடுருவல், நடிகர்களின் ஆங்கில உரையாடல்கள் இவை யாவும் நம் உள் மனதை ஆள்வதால்,நாம் முடிவெடுத்தாலும் கூட தூய தமிழில் பேசுவது ஒரு பெரிய சவாலாகத் தான் இருக்கிறது .இவைகளில் தொலை காட்சி நிகழ்ச்சிகள், தாம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது . பல நிகழ்ச்சிகள் பெயரே ஆங்கிலம் கலந்த பெயராகத் தான் இருக்கிறது. தற்போதைய ஊடகங்கள், தொலைக்காட்சி, வலை  மற்றும் அலை பேசி மூன்றும் உடலோடும் உள்ளத்தோடும் பிரியாத ஒன்றாகிவிட்டன .அதனால் அவைகளின் தாக்கத்தை என்ன முயன்றாலும் கட்டுக்குள் கொண்டு வரமுடியாது என்பது தெளிவான உண்மை.

'பண்ணி' தமிழ் படுத்தும் பாடு !

தமிழர்கள் எல்லோரும்  இப்போது ஒரு விதமான  'பண்ணி' தமிழுக்கு மாறி விட்டார்கள்.அது என்ன, 'பண்ணி ' தமிழ்?அது இது தான் !

கொஞ்சம் .'ட்ரை ' பண்ணிப் பார்த்து ,முடியலைன்னா 'கட் ' பண்ணிருங்க . 'மிக்ஸ் ' பண்ணும் போது 'கேர் புல்லா' இருங்க, அந்த 'லெவல்' போயிடும். இந்த தமிழ் நீடித்தால் தமிழ்' ஐ சி யு வார்டில் '  அட்மிட்' பண்ணும் நாள் தூரத்தில் இல்லை !

இந்த அவல நிலையை மாற்றுவதற்கு நாம் என்ன செய்யலாம்? தமிழை எப்படி காக்கலாம்? இதுவரை இல்லாத இந்த ஒரு புதிய அச்சுறுத்தலை எப்படி எதிர் கொள்ளலாம்?

தமிழைக்  காக்க என்ன செய்யலாம் ?

1. முதலில் தமிழுக்கு பெரிய  அச்சுறுத்தல் இருப்பதை உணர்ந்து ,,அந்த செய்தியை சமூக ஊடகங்கள் மூலமாக வேகமாக  பரப்ப வேண்டும் .அழிவின் விளிம்பை நோக்கி தமிழ் செல்வதை குறித்து எல்லோருக்கும் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.எதற்ககெல்லாமோ விழிப்புணர்வு பேரணி நடத்தும் நாம் இதற்கும் நடத்தலாமே !

2. நாம் ஒவ்வோருவரும் அன்றாடம் பேசும் தமிழில் ஆங்கில சொற்களை தவிர்த்து பேச வேண்டும் .இது கடினமாக இருந்தாலும் நம் தாய்க்காக செய்வதாய் நினைத்து கடமையாக செய்ய வேண்டும்.

3. நம் குழந்தைகள் நம்மைப்  பார்த்து கற்றுக்கொள்ளும் .இது அவர்கள் ஆங்கில அறிவை பாதிக்கும் என்று நினைக்க வேண்டாம்.

4. நம்முடைய சமூக ஊடகங்கள் பதிவுகள் தூய தமிழில் இருக்க வேண்டியது அவசியம் .அப்படி இல்லாத பதிவுகளை அன்புடன் கண்டிக்கலாம் .இதை நான் இப்போதே செய்து கொண்டிருக்கிறேன்.

5. தொலை காட்சி நிகழ்ச்சிகள்/வார இதழ்கள் போன்றவற்றில்  ஆங்கிலம் கலந்தால் நாம் எதிர்ப்பை கருத்தாகக் கூறலாம் .

6. தூய தமிழ் நிகழ்ச்சிகள் /இதழ்கள் ஆகியவைகளை ஊக்குவிக்க பரிசுகள் வழங்கலாம் .

7. எல்லாவற்றிற்கும் மேலாக தமிழிழ்  பேசுவதை நாம்  பெருமையாக  கொள்ள  வேண்டும் .

ஆங்கில  புலமையை  வளர்த்து கொலள்வதில்  தப்பில்லை .அது  பிழைப்பிற்க்காக ! .ஆனால்  தமிழில்   பேசுவது நம்  தாய்க்கு  செய்யும் மரியாதை! .இரண்டு மலையாளிகள்  சந்தித்தால் அவர்கள்  மலையா ளத்தில்  பேசுவார்கள் .இரண்டு தெலுங்கர்கள்  சந்தித்தால் தெலுங்கில்  பேசிக் கொள்வார்கள் .ஆனால் இரண்டு  தமிழர்கள்  சந்தித்தால் மட்டும் அதிகமாக  ஆங்கிலத்தில்  தான் பேசிக்கொள்வார்கள் .

கவிஞர் ஆழிமலரின் குறுங்கவிதை  ஒன்று என்  நினைவுக்கு வருகிறது. இதோ அந்த கவிதை .
                                                                                                
ஆங்கிலம்

தமிழ் அறிந்த ஒரு தமிழனும்
தமிழ் அறிந்த  இன்னொரு தமிழனும்
பேசும் இணைப்பு மொழி !


மறக்க வேண்டாம் !

இந்த அவல நிலை மாறி" கல் தோன்றி மண் தோன்றா  காலத்தே, முன் தோன்றி மூத்த குடியின் பெருமையான தமிழைக்  காக்க தலையும் தருவேன்" என்று சொல்லும் தமிழர்கள்  இருக்கும் இந்த தமிழ்நாட்டில்  நான் சொன்ன தெல்லாம் மிக எளிது தான் . இணைந்து தமிழை உயர்த்துவோம் ! .வாழ்க தமிழ் !.
                          
ஆ .சீ .சுந்தர்

குறிப்பு : இவைகளை  கருத்தாய்க் கடை பிடித்து நம் தாயைக் காப்போம் .இதற்காக 'தமிழில் பேசுவோம் இயக்கம் ' கூகுள் ஷேரில் உள்ளது .சேர்ந்து இயக்கத்தை பலப்படுத்துங்கள் .

by Swathi   on 02 Nov 2015  5 Comments
Tags: தமிழ் மொழி   தமிழ் வளர்ச்சி   ஆங்கில மோகம்   தமிழைக் காக்க என்ன செய்யலாம் ?   தமிழ்   Tamil   Tamil Language  
 தொடர்புடையவை-Related Articles
தூர் தூர்
தமிழ் ஏன் கற்கவேண்டும்?  முனைவர்.இர.பிரபாகரன் தமிழ் ஏன் கற்கவேண்டும்? முனைவர்.இர.பிரபாகரன்
கண் பார்வை குறைபாடுகளை நீக்கும் நேத்ரா | Nethra for cure all your Eye problems கண் பார்வை குறைபாடுகளை நீக்கும் நேத்ரா | Nethra for cure all your Eye problems
அலர்ஜி, தும்மல், மூக்கில் நீர் வடிதல், மூக்கு அடைப்பு, ஆஸ்துமா குணமாக | Sneezing and runny nose அலர்ஜி, தும்மல், மூக்கில் நீர் வடிதல், மூக்கு அடைப்பு, ஆஸ்துமா குணமாக | Sneezing and runny nose
மலச்சிக்கல் ஏற்பட காரணங்களும் நிரந்தர தீர்வும் | Constipation causes and home remedies மலச்சிக்கல் ஏற்பட காரணங்களும் நிரந்தர தீர்வும் | Constipation causes and home remedies
இந்த வார நட்சத்திர பலன்கள் (24 – 06 – 2018 முதல் 30 - 06 – 2018 வரை) இந்த வார நட்சத்திர பலன்கள் (24 – 06 – 2018 முதல் 30 - 06 – 2018 வரை)
நட்சத்திர வார பலன்கள் (03 - 06 - 2018 முதல் 09 - 06 - 2018 வரை) நட்சத்திர வார பலன்கள் (03 - 06 - 2018 முதல் 09 - 06 - 2018 வரை)
உலகத்தமிழர் மாநாடு - சரவண பவனில் சிக்கன் பிரியாணி. உலகத்தமிழர் மாநாடு - சரவண பவனில் சிக்கன் பிரியாணி.
கருத்துகள்
02-Jun-2016 16:43:17 சொக்க. நமசிவாயம் said : Report Abuse
ஆங்கிலச் சொற்களைத் தேவையில்லாமல் கலந்து பேசுவது இந்தியா எங்கிலும் உள்ளது. நன்றாகக் கவனியுங்கள்; தெரியும். மற்ற மொழியினருக்கு இது பெரிய குற்றமில்லை. தமிழர்கள் இதைச் செய்வது அவர்களிடம் தம் தாய் மொழியைப் பற்றித் தெரியாதது ஒரு பெருங்காரணம். ஒன்று உண்மை. அது வெட்ட வெளிச்சமாய்த் தெரிகிறது. 'தமிங்கிலிஷ்' பேசுபவர்கள் ஆற்றொழுக்காகக் கருத்துக்களைத் தெரிவிக்க முடிவதில்லை. அரை நாழியில் சொல்லவேண்டியதைச் சொல்ல அவர்களுக்கு ஆறு நாழியாகிறது. அப்படியும் அவர்கள் பேச்சு ஒரே கலங்கல் தான்.
 
07-May-2016 04:58:48 சுமிதா சூசைராஜ் said : Report Abuse
தயவு செய்து எனக்கு பள்ளி மாணவர்களுக்கு தமிழ் இலக்கணம் படிப்பதில் உள்ள சிரமம் காரணம் என்ன ? பத்து காரணம் தரவும்.
 
09-Jan-2016 05:52:10 MOHAN said : Report Abuse
முயிற்சிசெய்வோம் முன்னேற்றுவோம்
 
07-Nov-2015 04:16:58 சுப்ர மணியன் said : Report Abuse
உண்மை, இதை நான் வயதில் முதிர்ந்த பெரியோரிடம் பேசும் போது உணர்ந்தேன். நானும் தூய தமிழில் பேச முயற்சி செய்வன்
 
05-Nov-2015 06:27:11 பசுபதிலிங்கம் said : Report Abuse
அய்யா வணக்கம், மிகச்சரியாக சொன்னீர்கள். தமிழை வளர்க்கவே பிறந்ததாக காட்டிக்கொள்ளும் அனைத்து தமிழ் ஊடகங்களும் பொரிந்து தள்ளிக்கொண்டுள்ள இந்த நாளில் டிஸ்கவரி தமிழ் என்று ஒரு ஆங்கில நிறுவனம் மிக அழகாக கலப்படமில்லாத தமிழில் பங்களிக்கிறார்கள். சற்றேனும் நெருடலின்றி மிக அழகாக புரிந்துகொள்ளும் வகையில் அமைந்திருக்கிறது. மேலும் பி.பி.சி., பீக்கிங் வானொலி, போன்றவை மிக அழகாக வாசிக்கிறார்கள். சமீபத்தில் ஒரு தகவல் அறிந்தேன். ஜெர்மனி நாட்டில் ஒரு பிரபலமான நூலகத்தின் வாசலில் தமிழில் நூலகம் என்று எழுதப்பட்டுள்ளது. தமிழ் நாட்டில் பிறந்து வளர்ந்து, வாழும் மக்களுக்குத்தான் தமிழ் வேப்பன்காயகவும் கௌரவ குறைவான மொழியாகவும் இருக்கிறது.
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.