|
||||||||
இயற்கை சிறப்புகள் அமைந்த மொழி தமிழ் |
||||||||
தமிழ் மொழிக்கு என்று இயற்கையாகவே சில சிறப்புகள் உண்டு. தமிழ் மொழி மற்ற எல்லா மொழிகளையும்விட மிக எளிமையானது. ஒரு மிகச் சிறந்த இலக்கணத்தைக் கொண்டு கட்டமைக்கப்பட்ட மொழி தமிழ் மொழி. இன்றைக்கு ஆங்கிலத்தைப் பெருமையாக நினைப்பவர்கள் இதைக் கண்டிப்பாக உணர வேண்டும். வெறும் 26 எழுத்துகளைக் கொண்ட மொழி, ஒரு செம்மையான இலக்கணம் இல்லாத மொழி, ஒரு ஒழுங்கில்லாத மொழி ஆங்கிலம். ஆனால் தமிழ் அப்படி இல்லை. வாழ்வியல், அறிவியல் என அனைத்துப் பரிமாணங்களையும் உள்ளடக்கி செதுக்கப்பட்டது தமிழ் மொழி. அதற்கு ஒருசில சான்றுகளை இங்கே காணலாம். ஆங்கிலத்தில் BOOK என்பதை எவ்வாறு எழுதுகிறீர்கள்? B-பி, o-ஒ, o-ஒ, k-கே. அதாவாது பிஒஒகே என்ற எழுத்துக்கூட்டு புக் என உச்சரிக்கப்படுகிறது. இதன்மூலம் ஆங்கில எழுத்துகளுக்கு நிலையான ஓசை இல்லை என்பதை நாம் உணரலாம். ஆனால் தமிழில் இதையே புக் என எழுத முடியும். அடுத்ததாக ARAVIND என்ற சொல்லை அரவிந்த் என்று உச்சரிக்கிறோம். ஆனால், ANGEL என்ற சொல்லை ஏஞ்சல் என்று உச்சரிக்கிறோம். இங்கே A என்ற ஒரே சொல்லே இடத்திற்கேற்ப அ என்றும் ஏ என்றும் வெவ்வேறு ஓசையைக் கொள்கின்றன.ஆங்கிலத்துல் குறில், நெடில் என்ற பாகுபாடே இல்லை. BEE என்ற சொல்லில் இரு குறில்கள் சேர்ந்து நெடிலாகிறது, அதே சமையம் LARGE என்ற சொல்லில் குறிலே இங்கு நெடிலாக மாறுகிறது. மேலே குறிப்பிட்டுள்ள BOOK என்ற சொல்லில் இரு குறில்கள் வந்தாலும் அது குறிலாகவே நிலைப்பெறுகிறது. வெறும் 26 எழுத்துகளே பெற்று எழுத்து பற்றாக்குறை கொண்ட மொழி ஆங்கிலம். அதனால்தான் ஒரே எழுத்துக்கு பல உச்சரிப்புகள், ஓசைகள் பெறுகின்றன. ஆங்கில மொழியின் உயிர் எழுத்துகள் வெறும் 5 எழுத்துகளே. A, E, I, O, U. மீதம் உள்ள 21 எழுத்துகளை உயிர்மெய் எழுத்துகள் எனக் கொள்ளலாம். ஆனால், இவை மட்டும் ஒரு மொழியின் தேவையைப் பூர்த்திசெய்து விட முடியாது. ஆங்கிலத்தில் மெய் எழுத்துகளே கிடையாது, ஆனாலும் ஒரு சில நேரங்களில் Consonents என்று சொல்லப்படும் ஆங்கில உயிர்மெய் எழுத்துகள் மெய் எழுத்துகளாகத் தோன்றும். உதாரணமாக PARK என்ற சொல்லை பார்க் என்று உச்சரிக்கும் போது R மற்றும் K என்ற எழுத்துகள் மெய் எழுத்துகளாகத் தோன்றுகின்றன.ஆக தோழர்களே! இவ்வளவு குழப்பங்களும், குறைபாடுகளும் உள்ள ஆங்கில மொழி உங்களுக்குச் சிறப்பானதா? எளிதானதா? உங்கள் வசதிக்காக ஆதித் தமிழன் பார்த்து பார்த்து செதுக்கிய தமிழ்மொழி எப்படித் தாழ்ந்து போகும்? சிந்தியுங்கள். மீண்டும் கேட்டுக் கொள்கிறோம், அவசியத்திற்கு ஆங்கிலம்; அடையாளமாய்த் தமிழ்! |
||||||||
by Swathi on 25 Nov 2014 1 Comments | ||||||||
கருத்துகள் | |||||
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|