LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    உலகம்-World Print Friendly and PDF
- வட அமெரிக்கா

3 அமெரிக்க மாநிலங்களில் தமிழ் மொழிக்கு அங்கீகாரம்..

அமெரிக்கத் தமிழ் கல்விக்கழகம் (அ.த.க.) என்கிற இலாபநோக்கமற்ற வரிவிலக்கு பெற்ற கல்வி அமைப்பு 4 ஆண்டுகளுக்கு முன்பு தோற்றுவிக்கப்பட்டது. முதற்கட்டமாக ஒருங்கிணைந்த பாடத்திட்டத்தை அறிமுகப் படுத்தித் தற்பொழுது 62 பள்ளிகள் அவற்றைப் பயன்படுத்துகின்றனர், அமெரிக்க நாட்டில்   மட்டுமல்லாது  இங்கிலாந்து ஆஸ்திரேலியா நாட்டில் நடைபெறும் பள்ளிகளும் இவற்றில் அடங்கும்.

 

இதுவரை 8 நிலைகள் உருவாக்கப்பட்டு 3500க்கும் மேற்பட்ட மாணாக்கர் தமிழ்

பயில்கின்றனர். அனைத்துத் தமிழ்ப்பள்ளிகளுக்கும் மாணாக்கருக்கும் பயன்படும் வகையில் கல்வி மேலாண்மைக்கான பொதுவான மென்பொருள்களை நிறுவி உதவி புரிகிறது. அத்துடன் மின்கற்றலுக்கான பாடங்களையும் உருவாக்கி வருகிறது அ.த.க.  இவற்றின் மூலம் வகுப்பறை பயிலுதலைக் கடந்து மேல்நிலை மாணாக்கர் பழகுத்   தமிழுக்கான இலக்கணமும், அறிமுக நிலை மாணாக்கர் ஊடாட்டு மென்பொருள் வழியே அடிப்படை தமிழ் எழுத்துக்களையும், சொற்களையும்  பயில முடியும்.

 

அமெரிக்கத் தமிழ்ப் பள்ளிகள் அனைத்தும் வாரயிறுதியில், முழுதும் தன்னார்வத் தொண்டர்களால் இலாப நோக்கமற்று நடத்தப்படுபவை. தம் பிள்ளைகள்   அமெரிக்க மண்ணில் வாழ்ந்தாலும், அவர்கள்  தமிழ் படிக்க  வேண்டுமென விழையும் பெற்றோர்கள்  செலுத்தும் கட்டணங்களை மட்டுமே முதலாகக் கொண்டு நடைபெறும் பள்ளிகள் தான் அனைத்துமே. பயிற்றுவிக்கும் ஆசிரியர் யாவரும் ஊதியம் எதுவுமின்றி ஒவ்வொரு வாரமும் தங்களின் பொன்னான நேரத்தைச் செலவிட்டுப் பணியாற்றும் தன்னார்வத்  தமிழ் பெற்றோர்கள் தாம்.  எந்த அரசாங்கங்களும் (இந்திய/தமிழக) இவற்றுக்கு நிதியுதவியோ, இடமோ, பொருளோ வழங்குவதில்லை.

 

அமெரிக்க நாட்டில் இலாப நோக்கமற்ற அமைப்புகளுக்கு வழங்கப்படும் சலுகையாக  வகுப்பறை வசதிகள் சற்றுக் குறைந்த கட்டணத்தில் வாடகைக்கு கிடைக்கின்றன. தன்னார்வச் சேவைகளால் இயங்கும்  தமிழ்ப்பள்ளிகளின் செலவீனங்களில் பெரும்பகுதி வகுப்பறை வாடகைக்கே செலவாகிறது.

 

இந்தச் சூழ்நிலையிலும் தமிழ்க்கல்வியைத் தரத்துடன் வழங்குவதன் மூலமே அமெரிக்கத் தமிழ் மாணாக்கர் மற்ற மொழிகளைப் போலத் தமிழையும் ஒரே தரத்தில் மதிப்பர் எனும் குறிக்கோளுடன் இயங்கி வருபவை இப்பள்ளிகள். 

 

பெற்றோரின் விருப்பத்திற்காகத் தொடக்கப் பள்ளியில் (நான்கு / ஐந்தாம் வகுப்பு வரை) படிக்கும் மாணாக்கரே பெரும்பான்மையாக வாரக்கடைசியில் நடைபெறும் தமிழ்ப் பள்ளிகளில் பயில்கின்றனர். நடுநிலை/மேல்நிலை பள்ளி மாணாக்கரின் முதன்மை கல்வி சார்ந்த வகுப்புகளும் அதனை ஒட்டிய வீட்டுப்பாடங்களும் தினசரிச் சுமையாகிப் போவதால் அவர்களுக்கு வாரநாட்களில் மிகக்குறைந்த நேரமே கிடைக்கிறது. வாரக்கடைசி நாட்களில் இவர்கள் விளையாட்டு, மற்ற பயிற்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்.

 

இந்த ஆளுமையிலிருந்து மாணாக்கரை மீட்டுத் தமிழ் மொழி கற்பதிலும் அவர்களுக்குப் பயன் உள்ளது என்பதைப், பெற்றோரின் வற்புறுத்தலின்றி அவர்களாகவே உணர, தமிழ்ப்பள்ளிகளுக்கு உயரிய கல்வி நிறுவனம் எனும் அங்கீகாரம் ஒரு மாபெரும் தேவை.

 

தமிழ்ப்பள்ளிக்கான  அங்கீகாரம் என்பது அமெரிக்க மண்ணில் நடக்கும் பள்ளிகளுக்கு இணையான தரத்துடன் நடைபெறும் கல்வி நிறுவனம் என்பதற்கான சான்று. இந்த அங்கீகாரத்தினைப் பெறுவது எளிதல்ல. கல்வித்துறையில் பணியாற்றி அனுபவமில்லாத தன்னார்வலர்களால் நடத்தப்படும் பள்ளிகள், உயர்தரக் கல்வி நிறுவனத்துக்கான அங்கீகாரம் பெற முயல்வது ஒரு மலைப்பான விடயம்.

 

அமெரிக்கத் தமிழ் கல்விக்கழகம் ஒருங்கிணைந்த பாடத்திட்டத்தினை  வடிவமைத்து, உருவாக்கி, அவற்றைத் தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் மெருகேற்றும்  பணியினைச் செய்து வருகிறது.  மட்டுமல்லாமல், பள்ளி நிர்வாகம், மின்கற்றல் போன்ற கட்டுமானப் பணிகளை அனைத்துப் பள்ளிகளுக்கும் பயன்பெறும் வண்ணம் செயல்படுத்துகிறது. இருப்பினும், இதனைக் கடந்து  பரந்து விரிந்த அமெரிக்க நாட்டில், மாநில/மாவட்ட அளவில் நடைபெறும் பள்ளிகளை நிர்வகிப்பது அந்தந்தப் பகுதி தமிழ்க்கல்வி அமைப்புகளும் தமிழ்ச்சங்கங்களும் தான். மாணாக்கரைச் சேர்ப்பது, ஆசிரியர்களை இனம் கண்டு நியமிப்பது, வகுப்பறைகளை வாடகைக்குப் பதிவு செய்வது பின்னர்த் தலையாயக் கடமையான தமிழ் மொழியைச் சீரிய முறையில் அடுத்த தலைமுறைக்குக் கற்பிப்பது போன்ற நடைமுறைப் பணிகள் வட்டாரத் தமிழ்ப்பள்ளி அமைப்புகளையே சாரும்.

 

இப்படி  பல்வேறு சூழல்களில், அனைத்தையும் ஒருங்கிணைத்து நடைபெறும் அமெரிக்கத் தமிழ் பள்ளிகளின் அமைப்பு முறை தமிழ் நாடு, சிங்கப்பூர், மலேயா, ஈழம் போன்ற நாடுகளில் 12 ஆண்டுகள் தமிழ் கற்கும் முறையைக் காட்டிலும் முற்றிலும் வேறுபட்டது. அமெரிக்காவில் இரண்டாவது மொழியாகவே தமிழ் மொழியைக் கற்கிறார்கள். அமெரிக்க நாட்டுக் கல்வி முறைப்படி குறைந்த பட்சம் மேல் நிலைப் பள்ளியில் (9 முதல் 12 வரை) நான்கு ஆண்டுகள் ஆங்கிலமன்றி வேறொரு மொழியை மாணாக்கர் கட்டாயமாகப் பயில வேண்டும். இதற்காக 4 மொழி மதிப்பீட்டு புள்ளிகளை  (language credits) மாணாக்கர் பெற முடியும். இதனால் கல்லூரியில்/பல்கலைக்கழகத்தில் இளங்கலையில் சேருவதற்குத்   தேவையான கூடுதல் புள்ளிகள் கிடைப்பதுடன், கட்டணமும் வெகுவாகக் குறைகிறது.

 

பள்ளி ஆண்டு முழுவதும் ஒவ்வொரு வாரமும்   2 முதல் 4 மணி நேரம் செலவழித்துத் தமிழ் கற்கும் மாணாக்கருக்கு மற்ற மொழிகளைப் போல மதிப்பீட்டு புள்ளிகளைப் பெற்றுத் தந்தால் மட்டுமே அவர்கள் உந்துதலுடன் தமிழ் கற்பர் என்ற நிலை உருவானது. இதனை மனதில் கொண்டு தமிழ் மொழி கற்பதற்கான தேவையையும் பூர்த்தி செய்வதுதான் தமிழ்ப் பள்ளிகளுக்கான அங்கீகாரம் (Accreditation).

 

மொழி மதிப்பீட்டு புள்ளிகளுக்காக ஸ்பானிஷ், ஜெர்மன், ஃப்ரெஞ்ச், ஏன் ஜப்பானிய, சீன மொழிகளைப் பயிலும் தமிழ் மாணாக்கர் அமெரிக்க நாடு முழுவதும் இருக்கிறார்கள். இவர்கள் அனைவரும் மற்ற மொழிகளுக்கு மாற்றாக அல்லது கூடுதலாகத் தமிழ் மொழியைப் பயில்வது அவர்களுக்குக் கிடைக்க வேண்டிய 4 மதிப்பீட்டு புள்ளிகளைப் பெற்றுத் தரும்.

 

அங்கீகாரம் பெற்ற பள்ளிகளின் வாயிலாகத் தமிழ் கற்கும் மாணாக்கரின் எண்ணிக்கை மிக அதிக அளவில் அதிகரிப்பதற்கு வாய்ப்புகள் ஏற்படும். இது ஒரு முதல் படி. தமிழர் அடர்த்தியாக வாழும் ஊர்களில் முழு நேரப் பொதுப் பள்ளிகளிலேயே தமிழ் மொழியைப் பயிற்றுவிக்கும் வாய்ப்பாக இது அமையக்கூடும்.

 

தமிழ்ப் பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெறுவது என்பதைத் தலையாயக் கடமையாகக் கொண்டு அ.த.க. கடந்த 3 ஆண்டுகளாகப் பணியாற்றி வந்ததன் பயனாகத் தற்பொழுது 3 மாநிலங்களில் அங்கீகாரம் கிடைத்துள்ளது.

 

மினசோட்டா, மிசெளரி & டெக்சஸ் (ஹூஸ்டன் நகரப் பள்ளி) பள்ளிகள் இந்த மாபெரும் அங்கீகார முத்திரையை ஈண்டெடுத்திருக்கிறார்கள். ஹூஸ்டன் பள்ளி முதலில் ஜூன் 2014ல் இந்த அங்கீகாரத்தைப் பெற்றது அதனைத் தொடர்ந்து மினசோட்டா/மிசெளரி மாநிலப் பள்ளிகள் அக்டோபர் 2014ல் இந்த மைல்கல்லைத் எட்டியிருக்கிறார்கள்.

 

இந்தப் பள்ளி அங்கீகாரத்தை வழங்கிய நிறுவனத்தைப் பற்றிய சிறு குறிப்பு:

அட்வான்செட் (AdvancEd www.advanc-ed.org) எனும் இந்நிறுவனம் கல்வி நிலையங்களின் ஆற்றலைப் பல பரிமாணங்களில் ஆய்வு செய்து தரச் சான்றிதழ் வழங்கும்உலகளாவிய நிறுவனம்.

 

இதுவரையில் இந்நிறுவனம் உலகம் முழுதும், ஏறக்குறைய 20 மில்லியன் மாணாக்கர் பயிலும்,  32,000 கல்வி நிலையங்களுக்கு அங்கீகாரம் வழங்கி இருக்கிறது. அமெரிக்க நாட்டின் 50 மாநிலங்களிலும் ஏற்கத்தக்க கல்வி மதிப்பீட்டு நிறுவனம் அட்வான்செட் ஒன்று தான். அட்வான்செட் வரையறுக்கும் பள்ளி மதிப்பீடுகளைத் மீறியதொரு தரம் இன்று வரை எதுவுமில்லை என்று சொல்லலாம்.

 

மினசோட்டா, மிசௌரி, ஹூஸ்டன்- டெக்சாஸ் ஆகிய   3 தமிழ்ப் பள்ளிகளும் அரசு நடத்தும் பொதுப்பள்ளிகள் பெற்ற சராசரிப் புள்ளிகளை  விட,  அதிகப் புள்ளிகள் பெற்று சீர்மிகு  தரத்துடன் நடப்பதாக, அட்வான்செட் தனது  இறுதி அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

 

அரசாங்கம் பல மில்லியன் டாலர்கள் செலவழித்து முழுதுமாக எற்று நடத்தும்  பொதுப் பள்ளிகள் பல அட்வான்செட் வரையறுக்கும் அடிப்படைத் தரத்தைக் கூடத் தாண்டாது என்பதும், தரமான அரசாங்கப் பள்ளிகளின் சராசரி தரக் கட்டுப்பாட்டு புள்ளிகளைக்  காட்டிலும் கூடுதலாகப் பெற்று இம்மூன்று தமிழ்ப் பள்ளிகளும் அங்கீகாரத்தை ஈன்றெடுத்திருக்கின்றது என்பது சாலச்சிறப்பு.

 

அட்வான்செட் நிறுவனத்தைச் சார்ந்த வெவ்வேறு தனி நபர்கள் அடங்கிய மூன்று குழக்கள்  மினசோட்டா, மிசௌரி, ஹூஸ்டன் டெக்சாஸ் இம்மூன்று பள்ளிகளையும் ஆய்வு செய்தன.   இருப்பினும் ஆய்வின் முடிவுரையாக அவர்கள் குறிப்பிட்டது ஒரே கருத்துதான் என்பது குறிப்பிடத்தக்கது.

 

"எங்களின் 30 ஆண்டு கல்வித்துறை அனுபவத்தில் இத்தமிழ்ப்பள்ளி அமைப்புகள் போன்றதொரு தன்னார்வு கல்வி நிறுவனத்தைக் கண்டதில்லை. பயிற்றுவித்தல் என்பது இத்தன்னார்வலர்களுக்கு முதன்மை பணியாக இல்லாவிடினும் தரமான கல்வி மற்றும் கல்வி நிறுவனத்துக்கான அத்தனைத் தேவைகளையும்/பணிகளையும் இவர்கள் திறம்படச் செய்வது கண்டு வியக்கிறோம். அத்துடன் தமிழ் மொழியின் மேல் கொண்டிருக்கும் பற்றைப் பள்ளி நிர்வாகக் குழு, ஆசிரியர், பெற்றோர் மற்றும் மாணாக்கர உட்பட அனைவரின் கண்களிலும்   நாங்கள் காண முடிந்தது" என்றார்கள்.

 

இம்மூன்று பள்ளிகளின் அங்கீகாரம் ஒரு தொடக்கம் தான்.  இது காட்டுத்தீ போல மற்ற மாநிலங்களுக்கும் பரவும். சிங்கப்பூர், மலேயா நாடுகளுக்குக் குடி புகுந்த தமிழர் எப்படித் தமிழை அந்நாட்டில் தழைத்தோங்கச் செய்தார்களோ அதைப்போலத் தற்போதைய அமெரிக்கத் தமிழ்த்  தலைமுறையினர்    அமெரிக்க நாட்டில் வாழும் அடுத்த தலைமுறையினருக்கும் அதனைக் கடந்தும் எடுத்துச் செல்வார்கள் என்ற நம்பிக்கையுள்ளது.

 

ஆசியாவின் மூத்த செம்மொழியான தமிழ்மொழி 2000 ஆண்டுகளுக்கும் மேலாக,  மாற்றங்களற்ற இலக்கணத்துடன் பயன்பாட்டில் உள்ள ஒரே மொழி என்பதனை உலக வல்லரசான அமெரிக்காவும் உணர்ந்து போற்றும் என்ற நம்பிக்கை பிறந்துள்ளது. பல்வேறு நாட்டு இனங்களையும் மொழிகளையும் பேசும் புலம் பெயர்ந்த மக்களைப் பிரதானமாகக் கொண்டு, அனைத்துப் பண்பாடுகளையும் மொழிகளையும் சமமாக மதிக்கும் அமெரிக்க நாடும் தமிழின் உயர்வையும், பெருமையையும்  உணரத்  துவங்கியுள்ளது.

Tamil Language Schools get accredited in 3 US states:

American Tamil Academy (ATA),  a non-profit Federal tax exempt organization in the United States was  founded 4 years back with a primary, noble objective of providing a conducive platform  to facilitate and promote Tamil education for future generations

 

At first, a common, integrated Tamil Language learning syllabus was meticulously devised and classroom/homework books were created. This syllabus has been adopted and is now followed by 62 Tamil Schools in the United States, England and Australia. The entire syllabus, consisting eight different levels, is used by more than 3500 students, as of academic year 2014-15.

 

A Learning Management software System, comprising different tracking tools to measure students’ progress and school administration,   was implemented and made available to all the member schools. To supplement the text books, eLearning and interactive software for Tamil education was rolled out recently. Higher level students get benefitted with the eLearning tools by repetitively learning the logics and nuances of Tamil grammar, while the intro level kids study Tamil letters, words and simple sentences from the interactive contents with fun.

 

All the Tamil Schools in North America are run by non-profit organizations, with the voluntary efforts of individuals who have passion towards Tamil language and culture. These schools are self-funded with the annual fee paid by parents, equally passionate about the language and induce their kids enjoy the wealth of Tamil. The Teachers who teach in these schools are mostly parent volunteers. These teachers / school coordinators put in lot of energy and valuable time without getting any remuneration with a noble intent of teaching Tamil.

 

Neither Indian nor Tamilnadu government fund these organizations to cover the basic operation cost to run the schools. As a non-profit organization in US, though classrooms could be rented at discounted rate, rent alone accounts for a major chunk of the expenses.

 

Historical trends show that parents are the driving force for the younger kids, generally below grade 5 in K-12 schools, to learn Tamil. This demographical section of the students constitute majority of Tamil learning students in the US.

 

Beyond Grade 5, kids are loaded with their K-12 school assignments on week days and on weekends they take up sports or other social activities. It is difficult for parents / teachers to make these kids focus on Tamil education after a certain level.

 

Considering all these trivial factors, ATA realized that providing a high quality Tamil education is pertinent to make the students embrace and view Tamil at par with other world languages taught in USA.  Language credits at School / College could be the only factor that would motivate a student beyond their parent’s compulsion and reap the benefits learning Tamil Language.

 

Accreditation as such is the certification of competency and credibility in a specific field by an external organization with rigorous standards. Some of the K-12 public schools, not all public schools to reiterate, in the US are Accredited with such organizations.  Though all of these public schools were funded and backed by government, some of the schools could not meet the stipulations laid out for Accreditation.

 

To get accredited, Tamil Language Schools have to go through the same process of evaluation as a public school, without sparing an iota of standards. It is not a simple feat for a non-profit, voluntarily run organization to step up to this level.

 

To simplify few of the major tasks of individual Tamil schools, ATA designed a common syllabus which is reviewed and refined and reprinted   year over year. ATA also helps with common implementation of School/Student Management systems and other pertinent common infrastructure in various ways.

 Other operational functions of these Tamil schools, run at different cities / states, are completely managed by the local non-profit organizations.  This includes enrolling students, booking classrooms, recruiting teacher volunteers and most importantly teaching the Tamil language in classrooms.

 

Tamil Schools and education in the US is totally different from the formal Tamil Language teaching process in Tamilnadu, Singapore, Malaysia, Eelam etc. where the language is taught as a subject every day for 12 years.

 

But in US, students learn Tamil only as a second language. US school system (K12) requires every high school student (Grade 9 to 12) to learn a language other than English for 4 years. Students earn minimum 4 language credits for this and it helps them to accrue the valuable credits to join any college/university degree, which in turn help them to save tuition fee.

 

Keeping this in mind, Tamil Schools were pursuing to be accredited to encourage students to learn Tamil as a second language and earn the language credits.

 

Students from Tamil decent (either from Tamilnadu, Srilanka, Singapore, Malaysia) usually learn other languages like Spanish, German, French, in few instances Japanese or Chinese to earn the 4 Language credits. Learning Tamil via accredited Institutions help the students to earn required or additional credits.

 

With the accreditation of Tamil schools, students learning Tamil will dramatically increase, which may also lead Tamil being taught in regular US school at districts where Tamil population is dense.

 

 Considering the necessity and organic shift in Tamil Language education in US, ATA was spearheading the efforts for the last 3 years to structure the organization meeting all the requirements of an educational Institution. This paved way to the success of 3 schools from different states that were successfully accredited in the first round.

 

Tamil schools from the State of Minnesota, Missouri and Texas achieved the unique distinction and recognition as accredited schools.

 

 These schools were thoroughly evaluated by AdvancEd over a year on various standards.    AdvancEd is the world premier Institution specialized in certifying educational institutions, all over the world. AdvancEd has so far certified 32,000 schools covering over 20 Million students. This is the only accreditation body which is recognized in all 50 US states and command highest available standards for education accreditation.

 

All the 3 schools at Minnesota, Missouri and Houston Texas, have been rated well above the average score of all the 32,000 schools accredited by AdvancEd so far. This is a unique achievement considering that all these schools were self-funded and entirely run by volunteers compared to the public schools in USA which are fully funded and supported by government with millions of dollars.   It is worthy to note that, some of the public schools could not even meet the basic standards set by AdvancEd  and have a very long way to go on this process.

 

The Audit committee at these 3 schools comprised of completely different set of people. However,   all of them concluded in their final comments that they have never come across any schools like Tamil schools. They have complimented that though these schools are run by volunteers who are not Teachers by profession, they exceed the requirements for a premier education institution.

 

The Audit committees also commented that they were overwhelmed with the passion of School Admins, Teachers, Parents and Students who   all have vested interests to sustain the language in USA. Recognition of these Tamil schools in three states is an important milestone in the history of Tamil Schools in the US.  More Tamil schools from many other states are aspiring to be accredited the same way.   Soon, like the immigrants of Malaysia and Singapore who added esteemed pride to Tamil by making it as a national language in a foreign soil, Tamilians in the US will unite with a passion to pass on the richness of Tamil language to the next generation and people of non-Tamil origin.

 

After all, the greatest classical Language from Asia with unbroken grammar for over 2000 years is a treasure for every Tamilian. It is time for the world to recognize and appreciate, that this unique pride started at the world super power United States of America, the land of immigrants where every language/culture is equally respected and recognized.

by Swathi   on 11 Nov 2014  0 Comments
Tags: AdvancEd   அட்வான்செட்   அமெரிக்கத் தமிழ் கல்விக்கழகம்   அ.த.க   American Tamil Academy   ATA   Tamil Language Schools  
 தொடர்புடையவை-Related Articles
3 அமெரிக்க மாநிலங்களில் தமிழ் மொழிக்கு அங்கீகாரம்.. 3 அமெரிக்க மாநிலங்களில் தமிழ் மொழிக்கு அங்கீகாரம்..
அமெரிக்க ராணுவ வீரர்களுக்கு குளுகுளு ஹெல்மெட் !! அமெரிக்க ராணுவ வீரர்களுக்கு குளுகுளு ஹெல்மெட் !!
அ. த. க வின், 2014-15ம் ஆண்டுக்கான புதிய நிர்வாக குழு உறுப்பினர்கள் அ. த. க வின், 2014-15ம் ஆண்டுக்கான புதிய நிர்வாக குழு உறுப்பினர்கள்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.