|
||||||||
தமிழர்களின் உலோக அறிவியலும் உலக அறிவிலும் - சித்த மருத்துவர் ஜெ.ஜெயவெங்கடேஷ் |
||||||||
தமிழர்களின் மருத்துவ களஞ்சியம் பல்வேறு அறிவியல் உண்மைகளை உள்ளடக்கியது. உடல்வலியை நீக்கும் தொக்கணம், உடல் சூட்டை தணிக்கும். எண்ணெய் முழுக்கு, தற்காப்புக்கு உதவும் களரிச் சண்டை, தாக்குதலுக்கு உதவும் சிலம்பம், செயலிழந்த நரம்புகளைத் தூண்டும் வர்மம், உலோகங்களை மாற்றும் ரசவாதம் என தமிழ் மருத்துவ அறிவியலின் அதிசயங்கள் காலம் தோறும் போற்றிப் பாதுகாக்கப்பட்ட கூடியவை. தமிழில் பிறமொழிக் கலப்பு இருப்பதால் பெருமளவு தமிழர் வரலாறு திரிக்கப்படுகிறது. பாலி, பௌத்தம், சமணம், சமஸ்கிருதம் என பன் மொழி கலப்பு தமிழில் இருப்பது போல், தமிழில் கலப்பு பழமொழிகளும் காணப்படுகின்றன. தமிழ் மொழியானது தமிழர்களின் வாழ்வியல் நெறி மற்றும் கலாச்சாரத்துடன் ஒன்றியது. இறைவழிபாடு காலைக்கடன், குளியல், உணவு, நித்திரை, பாலுறவு என தமிழ் மருத்துவம் நமக்கு சொல்லிக் கொடுக்கும் ஆரோக்கிய வழிமுறை உடலையும் மனதையும் செம்மையாக்கும் நெறிமுறையாகும். தமிழர்களின் கலாச்சாரம், கலை, அறிவியல் என அனைத்தும் உலகமெங்கும் போற்றி வரவேற்கப்படுகிறது. தங்கம், வெள்ளி சுரங்கம் இல்லாத பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தாமிரத்தில் இருந்து தங்கத்தையும், பாதரசத்தில் உதவியால் வெள்ளியையும் செயற்கையாக செய்து பல கோயில் விக்கிரங்களை செய்து அழகு பார்க்கின்றனர் நமது தமிழ் வழி சித்தர்கள். பாதரசம் கிடைக்காத தமிழகத்தில் பாதரசத்தை செயற்கையாக செய்தவர்கள் தமிழ் சித்தர்கள். மூழ்கிப் போன லெமூரியா மிச்சத்தில் கிடைக்கும் பல்வேறு ஆவணங்கள் தமிழ் வரலாறு மூழ்கிப்போன உண்மையை நமக்கு தெளிவாக காட்டும். பேச்சு தமிழாக, தொடர்ந்த தமிழ் மருத்துவ குறிப்புகள் எழுதி தொடர்பு மொழியான சமஸ்க்ரிதத்தில் பெருமளவு காணப்படுகிறது. ஆனால் அதேநேரம் ரகசியமாக தமிழர்கள் வைத்திருந்த வர்மம் மற்றும் ரசவாத கலை பற்றிய குறிப்புகள் பிற மொழி நூல்களில் அதிகம் காணப்படவில்லை. தங்கள் அறிவுசார்ந்த சொத்துக் களவு போய்விடக்கூடாது என்பதற்காக தமிழர்கள் பூடகமாக, மறைமுகமாக, பன் பொருள்படும்படி ஓலைச்சுவடிகளிலும், கையெழுத்துப் பிரதிகளிலும் ரகசியமாக எழுதிவைக்கப்பட்ட மருத்துவ அறிவியல் குறிப்புகள் போற்றத்தக்கவை. சித்தர்களின் மருத்துவ அறிவியலை பிறமொழியினர் புரிந்து கொள்ள முடியாததால் தான் தமிழர்களின் அறிவு சார் சொத்தான வர்மக்கலை, ரசவாதம் இன்றும் நமது கையில் பத்திரமாக இருக்கிறது. சித்தர் பாடல்களின் கூறப்பட்ட சித்தர்களின் வார்த்தை விளையாடல்கள் இன்றும் ஆய்வுக்கு உகந்தவை. தமிழ் மருத்துவ நூல்களில் ஏழாம் நூற்றாண்டிலிருந்து பிறமொழி கலப்பு ஏற்பட ஆரம்பித்து விட்டது. தமிழில் எழுதப்பட்ட பல்வேறு மருத்துவச் சுவடிகள் வாடிகன், போலந்து, பாரீஸ், பெர்லின், வியன்னா, ஜெனீவா, லண்டன், அல்ஜீரியா, ஹார்வேர்டு போன்ற நாடுகளின் தொன்மை மிக்க நூலகங்கள் மற்றும் அருங்காட்சியங்களில் காணப்படுகின்றன. தமிழ் மருத்துவ அறிவியல் பல நாடுகளுக்கு பயணம் செய்திருக்கிறது. சித்தர்கள் தன்னலம் இல்லாது தங்கள் அறிவை பல உலக நாடுகளுக்கு கொண்டு சென்றிருக்கின்றனர். குருகுலம் வாயிலாக, செவிவழியே தாங்கள் அறிந்த உண்மையை செய்திகளையும், மருத்துவ கலையையும் சிவன் உபதேசம் செய்தார், முருகன் உபதேசம் செய்தார், அகத்தியர் உபதேசம் செய்தார் என தமிழ்வழி ஓலைச்சுவடிகளின் நமது சித்தர்கள் பதிவு செய்திருக்கின்றனர். நமது சித்தர்கள் பதிவு செய்திருக்கின்றனர். நீராவிக்கப்பல் செய்து ஆயிரம் பேருடன் சீன தேசம் சென்று உபதேசம் செய்ததாக புகார் 7000ல் குறிப்பிடுகிறார். போகரின் நவபாஷாண சிலை தமிழர்களின் உலோக அறிவியலுக்கு சிறந்த சான்று. தமிழக போதி தர்மர் கற்றுத் தந்த வர்மக்கலையை சீனர்கள் டிம்-மேக் போர் தந்திரமாக பயன்படுத்துகின்றனர். சீனர்களின் பல்வேறு போர்க் கலைகளும் அக்குபஞ்சரும் தமிழர்களின் வர்மக் கலையின் அடிப்படை அம்சமாகும். சீனாவின் சயோலின் கோயிலில் தமிழ் வர்மக்கலையை போதிதர்மர் கற்றுக் கொடுத்த கல்வெட்டு பிரம்மாண்டமாக நிறுவபட்டு உள்ளது. காஞ்சிபுரத்தை சேர்ந்த ஐந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த போதி தர்மனின் கோயில் காஞ்சிபுரத்தில் தற்போது சீனர்களால் கட்டப்பட்டு வருகிறது என்பதை தமிழர்களின் பெருமையை சீனர்கள் போற்றுவதன் மூலம் நம்மால் உணர முடியும். தமிழன் தான் வாழ்ந்த இடங்களில் எல்லாம் தங்கள் அடையாளத்தை விட்டுவிட்டு சென்றிருக்கின்றனர். 12 ஆயிரம் ஆண்டுகள் தொன்மை வாய்ந்த மண் ஓடுகள், தாயத்துகள், கற்களால் செய்யப்பட்ட ஆயுதங்கள் என தமிழர் நாகரிகம் போற்றத்தக்கது. கற்களில் பதிக்கப்பட்ட உருவங்களில் அமைப்பு எழுத்துக்களில் நடை, சிற்பத்தில் காணப்படும் பல்வேறு வடிவங்களின் அடிப்படையில் இரண்டாம் நூற்றாண்டு முதல் 14ஆம் நூற்றாண்டு வரையிலான தொன்மைவாய்ந்த அகழ்வாராய்ச்சி பொருட்கள், கற்கள், பொன், செப்பு ஊசிகள், சலாகைகள், தாயத்துகள், மணிகள், ஆபரணங்கள் என பல்வேறு ஆவணங்கள் தமிழர்களின் மருத்துவ அறிவைப் பறைசாற்றுகின்றன. ஆதிச்சநல்லூர், கொடுமணல், பட்டரை பெரும்புதூர், கொந்தகை, தேரிருவேலி, காலடி போன்ற நதியோரம் அமைந்த நாகரிகங்களின் கிடைத்த பொருட்கள் தமிழர்களின் தொன்மை மட்டுமன்றி, சித்த மருத்துவத்தில் அறுவை சிகிச்சை ஆயுதங்களையும், வர்மப் புள்ளிகளில் அணிந்திருந்த ஆபரண மணிகளையும் நமக்கு அடையாளம் காட்டுகின்றன. சங்க இலக்கியங்களில் உள்ள ஏராளமான மருத்துவக் குறிப்புகள் தமிழ் மருத்துவத்தின் தன்மையை நமக்கு உணர்த்துகின்றன. தமிழுக்கு இலக்கணம் தந்த அகத்தியம், தொல்காப்பியம் போன்ற நூல்களில் ஏராளமான தமிழ் மருத்துவ ரகசியங்களின் பொதிந்துள்ளன. அகழ்வாராய்ச்சி மற்றும் தமிழ் இலக்கிய நூல்களின் அடிப்படையிலேயே தமிழ் மருத்துவ வரலாறு ஆவணப்படுத்தப்பட்ட வேண்டும் என்பதை வரலாற்று வல்லுநர்களின் திண்ணமாகும். ரசவாத கலை தமிழர்களின் சிறப்பான கலையாகும். உலோகங்களை வைத்து சித்தர்கள் பல்வேறு அதிசயங்களை செய்திருக்கின்றனர். மூலிகை சாறுகளின் துணையால் உலோகங்களின் இயற்கை குணத்தை மாற்றி, வேறு உலோகங்களுடன் சேர்த்து உருக்கி தங்கம் அல்லது வெள்ளி செய்யும் முறையை தமிழர்கள் அறிந்து வைத்திருந்தனர். பல்வேறு வகையான இயற்கை உப்புகளை குறிப்பிட்ட முறையில் கரைத்து செய்து உலோகங்களை கரைத்து, மீண்டும் பிற உலோக கரைசலுடன் சேர்த்து திடமாக மாற்றி கலப்பு உலோகங்களை செய்து, தங்கள் அறிவின் அடையாளமாக கோயில் சிலைகள், பீடம் அமைத்தனர். தெம்பையும் இயற்கையும் கொண்டு பாதரசத்தின் துணையால் பல்வேறு உலோகக் கலவைகளும் புதிய உலகங்களை செய்யும் முறையை தமிழர்கள் தெரிந்து வைத்திருந்தனர். செம்பையும், ஈயத்தையும் கொண்டு பாதரசத்தின் துணையால் பல்வேறு உலோகக் கலவை களையும், புதிய உலோகங்களை செய்யும் முறையை தமிழர்கள் தெரிந்து வைத்திருந்தனர். கோயில்களில் உள்ள சிலைகள் எல்லாம் சித்தர்களின் கை வண்ணம்தான். ஆகையால் தான் கோயில்களில் சித்தர் நினைவாக நினைவிடம் அமைக்கப்படுகிறது. காரம் என்ற உறைப்பு தன்மை உடைய பூநீர், சாரம் என்ற புளிப்பு தன்மையுடைய அமுரி, ஆகாயம், கடல், பூமி இவற்றில் ஆற்றலால் கிடைக்கும் மின் ஆற்றல் உடைய முப்பு என பல மருத்துவ ரகசியங்கள் வேதிப் பொருட்களாக தமிழ் மருத்துவத்தில் இருக்கின்றன. வெடியுப்பு, கந்தகம், நவாச்சாரம் போன்றவற்றை புளி, எலுமிச்சை பழச்சாறு விட்டு திராவகம் என்ற செயநீர் செய்து பல உலோகங்களை கரைத்து ஒன்றுசேர்த்து விதவிதமான சிலைகள், மணிகள், ஆபரணங்கள், மருந்துகள் செய்தது தமிழர்களின் உலோக கலையாகும். உலகளவில் தமிழ்நாட்டு கோயில் சிலைகளின் மதிப்பு 1000 கோடிக்கு மேல் விலை போவது இந்த உலோக கலவைகள் தன்மையை வெளிநாட்டினர் அறிந்து கொள்ளத்தான். வர்மம், களறி, சிலம்பம், தொக்கணம், இரசவாதம், தலவிருச்சம், சிற்பம், மருந்து, கால்நடை மருத்துவம் என ஒரு மொழியின் மருத்துவ அறிவியலை உள்ளடக்கியது தமிழாகும். உலகளவில் வேறு எந்த மொழிக்கும் இந்த பெருமை இல்லை. இந்திய மொழிகளில் தமிழ் மொழியில் மட்டும் தான் இரசவாதம் என்ற உலோக அறிவியல்,வர்மம்,களறி,சிலம்பம்,மருத்துவம்,தற்காப்பு,விளையாட்டு முறைகள் காணப்படுகின்றன. இவை சித்த மருத்துவத்தோடு தனித்தன்மை வாய்ந்த தொடர்புடன் காணப்படுவது வியப்பினை உண்டாக்குவதாகும். உலகமே போற்றும் நவபாசாணசிலை தமிழர்களின் உலோக அறிவியல். தொடுவர்மம் என்ற அக்குபிரசர், நோக்கு வர்மம் என்ற ஹிப்னாடிசம், பொன்னூசி மருத்துவம் என்ற அக்குபஞ்சர், தட்டுவர்மம் என்ற பிஸியோதிரப்பி, தொக்கணம் என்ற மசாஜ் என பன்முகம் வாய்ந்த தமிழர் அறிவியலை தரணியெங்கும் பரப்புவோம். தமிழ் மொழியின் வாயிலாக தமிழ் மருத்துவ தொடர்ச்சியான சித்த மருத்துவத்தை ஆய்வுகள் செய்வதால் தமிழர் அறிவியலுக்கு நோபல் பரிசு கிடைக்கும் வாய்ப்புண்டு. தமிழ் மருத்துவ அறிவியலை கொண்டு செல்ல நவீன அறிவியல் அறிஞர்கள் முன்வர வேண்டும். சீனாவில் பாரம்பரிய மருத்துகத்துக்கு கிடைத்த உலக அங்கீகாரத்தை நமது தமிழ் மருத்துவமான சித்த மருத்துவத்துக்கு கிடைக்க முன் மொழிவதே தமிழ் மண்ணில் தோன்றிய நமது ஒவ்வொருவரின் கடமையாகும். சித்த மருத்துவர் ஜெ.ஜெயவெங்கடேஷ், மதுரை. |
||||||||
|
||||||||
|
||||||||
|
||||||||
|
||||||||
|
||||||||
by Swathi on 10 Jan 2019 0 Comments | ||||||||
Disclaimer: |
||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|