|
|||||
தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை 2025- எந்தத் துறைக்கு எவ்வளவு ஒதுக்கீடு? |
|||||
தமிழ்நாடு சட்டமன்றத்தில் 2025 – 2026ஆம் நிதியாண்டிற்கான நிதிநிலை அறிக்கை இன்று (14ஆம் தேதி) தாக்கல் செய்யப்பட்டது.
நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்தார். 2021ஆம் ஆண்டு ஆட்சிப் பொறுப்புக்கு வந்த திமுக இந்த ஆட்சிக் காலத்தில் தாக்கல் செய்யும் இறுதி முழு நிதிநிலை அறிக்கை இது என்பது குறிப்பிடத்தக்கது.
2026- ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் வருவதால், அடுத்த நிதியாண்டிற்கான நிதிநிலை அறிக்கை இடைக்கால நிதிநிலை அறிக்கையாகத் தாக்கல் செய்யப்படும்.
அதன்படி இன்று தாக்கல் செய்யப்பட்டநிதிநிலை அறிக்கையில் எந்தெந்தத் துறைகளுக்கு எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டிருப்பது என்பது குறித்துப் பார்க்கலாம்.
கல்வி: ரூ. 55,261 கோடி
நகர்ப்புற வளர்ச்சி: ரூ. 34,396 கோடி
ஊரக வளர்ச்சி: ரூ. 29,465 கோடி
எரிசக்தி: ரூ. 21,178 கோடி
நெடுஞ்சாலைகள்: ரூ. 20,722 கோடி
காவல்: ரூ. 13,342 கோடி
போக்குவரத்து: ரூ. 12,965 கோடி
நீர்வளம்: ரூ. 9,460 கோடி
சமூக நலன்: ரூ. 8,597 கோடி
தொழில்கள் மற்றும் குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள்: ரூ. 5,833 கோடி
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலன்: ரூ. 3,924 கோடி.
|
|||||
by hemavathi on 14 Mar 2025 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|