|
|||||
தமிழக நிதிநிலை அறிக்கை 2025- முக்கியமான 20 அறிவிப்புகள் |
|||||
தமிழ்நாடு நிதி நிலை அறிக்கை இன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில் இடம் பெற்ற முக்கியமான 20 அறிவிப்புகள்.
1. 500 தமிழ் நூல்களை மொழிபெயர்க்க முதற்கட்டமாக ரூ.10 கோடி ஒதுக்கப்படும்
2.சிங்கப்பூர், துபாய், கோலாலம்பூரில் தமிழ்ப் புத்தகக் கண்காட்சி நடத்தப்படும்
3.ரூ.88 கோடி மதிப்பீட்டில் சென்னை பெருநகரப் பகுதிகளில் மழைநீர் உறிஞ்சும் 7 பல்லுயிர் பூங்காக்கள் (sponge park) அமைக்கப்படும்
4.ரூ.675 கோடி மதிப்பீட்டில் 40 ஆண்டுகள் பழமையான 102 கூட்டுக் குடிநீர்த் திட்டங்கள் மறுசீரமைப்பு செய்யப்படும்
5.ரூ.3500 கோடி மதிப்பீட்டில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் ஊரகப் பகுதிகளில் 1 லட்சம் வீடுகள் கட்டப்படும்
6.சென்னைக்கு அருகே 2000 ஏக்கரில் உலகத்தர வசதிகளுடன் புதிய நகரம் அமைக்கப்படும்
7.ரூ,6,668 கோடி மதிப்பீட்டில் 7 மாவட்டங்களில் 29.74 லட்சம் மக்கள் பயன்படும் வகையில் புதிய கூட்டுக் குடிநீர்த் திட்டங்கள் அமைக்கப்படும்
8. புதுமைப் பெண் திட்டத்திற்கு ரூ.420 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது
9.மகளிர் விடியல் பயணத் திட்டத்திற்கு ரூ.3600 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது
10.ரூ.77 கோடி மதிப்பீட்டில் தமிழ்நாட்டில் 10 இடங்களில் புதிய தோழி விடுதிகள் அமைக்கப்படும்
11.சுய உதவிக்குழுக்களில் இதுவரை இணைந்திடாதவர்களை இணைக்கும் வகையில் 10,000 சுய உதவிக்குழுக்கள் ஏற்படுத்தப்படும். 37 ஆயிரம் கோடியில் கடனும் வழங்கப்படும்
12.ஊர்க்காவல் படையில் மூன்றாம் பாலினத்தவரைச் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும். அதன்படி சென்னை, தாம்பரத்தில் முதற்கட்டமாக இத்திட்டம் செயல்படுத்தப்படும்
13.2000 பள்ளிகளில் கணினி ஆய்வகங்கள் தரம் உயர்வுக்கு ரூ.160 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்
14.ரூ.10 கோடி மதிப்பீட்டில் 25 இடங்களில் அன்புச்சோலை முதியோர் பகல் நேரப் பராமரிப்பு மையம் அமைக்கப்படும்
15. 1721 முதுநிலை ஆசிரியர்கள், 841 பட்டதாரி ஆசிரியர்கள் இந்தாண்டு நியமனம் செய்யப்படுவார்கள். மேலும் ஆசிரியர் தேர்வு வாரியம் விரைவில் அறிவிக்கும்
16.சென்னை, கோவை, மதுரையில் ரூ.275 கோடியில் தலா 1000 மாணவிகள் பயன்பெறும் வகையில் புதிய விடுதிகள் அமைக்கப்படும்
17.தமிழ்நாட்டில் அரசு பொறியியல் கல்லூரிகளில் செயற்கை நுண்ணறிவு (AI) இணையப் பாதுகாப்பு (cyber security) உள்ளிட்ட துறைகளில் புதிய பட்டப்படிப்புகள் வரும் கல்வியாண்டு முதல் அறிமுகம் செய்யப்படும்
18.கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு ரூ.13,807 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்
19.ஆன்மிக மற்றும் சுற்றுலாத் தலமாக விளங்கும் ராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம் அமைக்கப்படும்
20.நகர்ப்புறப் பகுதிகளில் பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்யப் புதிய திட்டம், ஆகியவை தமிழ்நாடு நிதிநிலை அறிக்கையில் முக்கிய அம்சங்களாக இடம்பெற்றுள்ளன
|
|||||
by hemavathi on 14 Mar 2025 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|