LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

இளையராஜாவின் அரை நூற்றாண்டு திரையிசைப் பயணத்தைக் கொண்டாடத் தமிழக அரசு திட்டம்

 

இளையராஜாவின் அரை நூற்றாண்டுக்காலத் திரையிசைப் பயணத்தைத் தமிழக அரசின் சார்பில் கொண்டாட முடிவெடுத்துள்ளதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில், “லண்டன் மாநகரில் சிம்பொனி சாதனை படைத்துத் திரும்பியுள்ள இளையராஜாவின் பயணத்துக்கு வாழ்த்திய என்னை நேரில் சந்தித்து நன்றி கூறினார். அவரது அரை நூற்றாண்டுக்காலத் திரையிசைப் பயணத்தை அரசின் சார்பில் கொண்டாட முடிவெடுத்துள்ளோம். ராஜாவின் இசை ராஜ்ஜியத்தில் வாழும் ரசிகர்களின் பங்கேற்போடு இந்த விழா சிறக்கும்” என்று தெரிவித்துள்ளார்.


இத்துடன் இளையராஜா முதல்வர் ஸ்டாலினை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து நன்றி தெரிவிக்கும் காணொளியையும் முதல்வர் பகிர்ந்துள்ளார். அதில் லண்டனில் நடைபெற்ற சிம்பொனி குறித்தும், அதற்கு வாசித்த ராயல் பில்​ஹார்​மோனிக் இசைக்​குழு​ குறித்தும் நெகிழ்ச்சியுடன் இளையராஜா முதல்வர் ஸ்டாலினிடம் பேசுகிறார். இந்த காணொளி சமூக வலைத்தளங்களில் பிரபலமாகி வருகிறது.


வேலியன்ட்’ என்ற தலைப்​பில் பாரம்​பரிய சிம்​பொனி இசையை 35 நாட்களில் எழுதி முடித்திருப்பதாக இளையராஜா கடந்த ஆண்டு அறி​வித்தார். லண்டனில் மார்ச் 8-ம் தேதி அரங்​கேற்​றம் செய்ய உள்​ள​தாக சில மாதங்களுக்கு முன்பு கூறினார். இந்நிலையில், கடந்த 6-ம் தேதி லண்​டன் சென்ற இளை​ய​ராஜா, அங்​குள்ள ஈவென்​டிம் அப்​போலோ அரங்​கில் சிம்​பொனி இசையை அரங்​கேற்​றம் செய்​தார். உலகின் மிகச் சிறந்த ராயல் பில்​ஹார்​மோனிக் இசைக்​குழு​வுடன் இணைந்து அவர் இதை அரங்​கேற்​றி​னார்.


அவரது இசைக் குறிப்​பு​களை நூற்​றுக்​கணக்​கான கலைஞர்​கள் பல்​வேறு இசைக் கருவி​களில் ஒரே நேரத்​தில் இசைத்​தது பார்வையாளர்களைப் பரவசத்​தில் ஆழ்த்தியது. இதன்​மூலம், ஆசியக் கண்​டத்​தில் இருந்து சிம்​பொனியை எழுதி, அரங்​கேற்​றிய முதல் இசையமைப்பாளர் எனும் சாதனையை இளை​ய​ராஜா படைத்​துள்​ளார். இசை ஜாம்​ப​வான்​கள் மொஸார்ட், பீத்​தோவன், சாய்​கோவ்​ஸ்கி ஆகிய சிம்​பொனி இசைக் கலைஞர்​கள் வரிசை​யில் இளை​ய​ராஜா​வும் இணைந்​துள்​ளார்.
by hemavathi   on 13 Mar 2025  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
கன்னியாகுமரியில் குறளங்காடி திறப்பு விழா கன்னியாகுமரியில் குறளங்காடி திறப்பு விழா
வலைத்தமிழ் ச.பார்த்தசாரதிக்கு  'தகைமைசால் திருக்குறள் பல்நோக்கு ஆளுமையர்' விருது! வலைத்தமிழ் ச.பார்த்தசாரதிக்கு 'தகைமைசால் திருக்குறள் பல்நோக்கு ஆளுமையர்' விருது!
ஜெய்சங்கர் சாலை ஆனது சென்னை கல்லூரி சாலை ஜெய்சங்கர் சாலை ஆனது சென்னை கல்லூரி சாலை
விவசாயத்துக்கு ட்ரோன்களைப் பயன்படுத்தும் தஞ்சாவூர் விவசாயிகள் விவசாயத்துக்கு ட்ரோன்களைப் பயன்படுத்தும் தஞ்சாவூர் விவசாயிகள்
ஸ்ரீ லஸ்ரீ காசிவாசி முத்துக்குமாரசுவாமிகள் மகா சமாதியடைந்தார் ஸ்ரீ லஸ்ரீ காசிவாசி முத்துக்குமாரசுவாமிகள் மகா சமாதியடைந்தார்
தாம்பரத்தில் ரூ.110 கோடியில் பிரமாண்ட மருத்துவமனை - முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார் தாம்பரத்தில் ரூ.110 கோடியில் பிரமாண்ட மருத்துவமனை - முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்
ஆகஸ்ட் 15 முதல்;சுங்கசாவடி ஆண்டு சந்தா  அமல் ஆகஸ்ட் 15 முதல்;சுங்கசாவடி ஆண்டு சந்தா அமல்
14 ஆண்டுகளுக்குப் பிறகு இரட்டை இலக்கப் பொருளாதார வளர்ச்சியை எட்டிய தமிழ்நாடு 14 ஆண்டுகளுக்குப் பிறகு இரட்டை இலக்கப் பொருளாதார வளர்ச்சியை எட்டிய தமிழ்நாடு
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.