|
|||||
தமிழகத்தில் கடந்த 5 மாதங்களில் இயல்பை விட 97 சதவீதம் மழை |
|||||
கடந்த 3 மாதங்களில் தமிழகத்தில் இயல்பை விட 97 சதவீதம் அதிக மழைப் பதிவாகி உள்ளது என சென்னை வானிலைமையம் தெரிவித்து உள்ளது.
இது தொடர்பாக இந்திய வானிலை மையத்தின் தென்மண்டலத் தலைவர் அமுதா சென்னையில் இன்று பத்திரிகையாளர்களிடம் பேசினார். "கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மழைப் பதிவாகி உள்ளது. அதிகபட்சமாக திருத்தணியில் 6 செ.மீ., மழைப் பதிவாகி உள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் தென்மேற்கு பருவமழை தீவிரமாக உள்ளது. நீலகிரி, கோவை, தென்காசி, நெல்லை, குமரி மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் மழைப் பதிவாகி உள்ளது.
கடந்த 3 மாதங்களில் தமிழகத்தில் 245.6 மி.மீ., மழைப் பதிவாகி உள்ளது. இதே காலகட்டத்தில் பெய்ய வேண்டிய இயல்பான மழை அளவு 124.9 சதவீதம். 97 சதவீதம் மழை, இயல்பை விட அதிகமாகப் பெய்துள்ளது. சென்னையைப் பொறுத்தவரை, இதே காலகட்டத்தில் பதிவான மழை அளவு -120 மி.மீ., இயல்பான அளவு - 50 மி.மீ. இயல்பை விட 129 சதவீதம் அதிகம்.
மாவட்ட வாரியாக...
இயல்பை விட மிக அதிகமான மழைப்பொழிவைச் சந்தித்த மாவட்டங்கள் 29
இயல்பை விட அதிக மழைப்பொழிவைச் சந்தித்த மாவட்டங்கள்:11
கடந்த 8 நாட்களில் ( மே 23 முதல் 31 வரை) அதிகபட்சமாக அவலாஞ்சியில் 1410 மி.மீ.,
சின்னக்கல்லாற்றில் 1010 மி.மீ., மழைப் பதிவாகி உள்ளது.
அதிக மழைப் பதிவான மாவட்டங்கள்
(மார்ச் 1 முதல் மே 31 வரையில்)
கள்ளக்குறிச்சி - 276 %
திருநெல்வேலி - 260 %
கடலூர் - 223 %
கோவை - 217 %
விழுப்புரம் - 217 %
திருவாரூர் - 214 %
அரியலூர் - 192 %
நீலகிரி - 182 %
நாகப்பட்டினம் - 170%
மயிலாடுதுறை - 161%
தஞ்சாவூர் - 158 %
திருவண்ணாமலை - 135 %
சென்னை - 129 %
தென்காசி - 109 %
திருவள்ளூர் - 106 %
வேலூர் - 109 %
ராமநாதபுரம் - 104 சதவீதம்
|
|||||
| by hemavathi on 31 May 2025 0 Comments | |||||
| கருத்துகள் | |
|
| உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|