|
||||||||
உலகக்கோப்பை போட்டிக்கான தென்னாப்பிரிக்க துடுப்பாட்ட அணியில் தமிழக வீரர் |
||||||||
![]()
2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியானது தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே ஜூன் 11 முதல் 15-ம் தேதிவரை நடைபெறவிருக்கிறது.
மிகப்பெரிய இறுதிப்போட்டிக்குத் தயாராக இன்னும் 3 வாரங்களே உள்ள நிலையில், இரண்டு அணிகளும் அவர்களுடைய இறுதிப்போட்டிக்கான ஸ்குவாடை அறிவித்துள்ளன.
தென்னாப்பிரிக்கா அறிவித்திருக்கும் 2025 அணியில், தமிழக வம்சாவளியைச் சேர்ந்த சேனுரான் முத்துசாமி என்ற சுழற்பந்துவீச்சு ஆல்ரவுண்டரும் இடம்பிடித்துள்ளார்.
தென்னாப்பிரிக்காவின் இறுதிப்போட்டிக்கான அணியில் இடம்பிடித்திருக்கும் இடது கை சுழற்பந்துவீச்சு ஆல்ரவுண்டரான சேனுரான் முத்துசாமி, தென்னாப்பிரிக்காவில் பிறந்திருந்தாலும் தமிழகத்தை பூர்வீகமாகக் கொண்டவர்.
31 வயதாகும் சேனுரானின் குடும்பம் தமிழ்நாட்டின் நாகப்பட்டினத்தைச் சேர்ந்தவர்கள். ஆனால் சேனுரான் தென்னாப்பிரிக்காவில் பிறந்தவர், இருப்பினும் அவர் இரண்டு முறை தமிழகத்திற்கு வருகைபுரிந்து தனது தொலைதூர உறவினர்களைச் சந்தித்துள்ளார். அவர்கள் இன்னும் நாகப்பட்டினத்தில் வசித்துவருகின்றனர்.
2013 முதல் தென்னாப்பிரிக்காவிற்காக முதல் தர கிரிக்கெட்டை விளையாடிவரும் சேனுரான், பந்துவீச்சில் 262 விக்கெட்டுகளையும், பேட்டிங்கில் 9 சதங்களுடன் 30 அரைச்சதங்களையும் அடித்து 5111 ரன்களை குவித்துள்ளார்.
தன்னுடைய அபாரமான ஆல்ரவுண்ட் திறமையை வெளிப்படுத்திய சேனுரான் முத்துசாமிக்கு 2019-ம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் சர்வதேச அறிமுகம் கிடைத்தது. விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் பங்கேற்ற சேனுரான், தன்னுடைய
முதல் விக்கெட்டாக விராட் கோலியை வெளியேற்றிச் சிறந்த தொடக்கத்தைப் பெற்றார்.
அதற்குப்பிறகு தென்னாப்பிரிக்கா அணியில் பெரிதாக இடம்பிடிக்காத சேனுரான், சமீபத்திய தென்னாப்பிரிக்கா டி20 லீக்கில் சிறப்பான பங்களிப்பைக் கொடுத்ததன் மூலம் 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இடம்பிடித்துள்ளார்.
மிகப்பெரிய இறுதிப்போட்டியில் இடம்பிடித்ததன் மூலம் கவனம்பெற்றுள்ளார் சேனுரான் முத்துசாமி. தென்னாப்பிரிக்காவின் மற்றொரு சுழற்பந்துவீச்சாளரான கேசவ் மகாராஜ்ஜுன் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
1998-ல் நடைபெற்ற ஐசிசி நாக்அவுட் டிரோபியை வென்றதற்குப்பிறகு 27 வருடங்களாகக் கோப்பையே வெல்லாமல் இருந்துவரும் தென்னாப்பிரிக்கா அணி, WTC இறுதிப்போட்டியை வெல்லவேண்டும் என்ற எதிர்பார்ப்புடன் ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களும் காத்திருக்கின்றனர்.
|
||||||||
by hemavathi on 15 May 2025 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|