LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    இந்தியா-India Print Friendly and PDF

இஸ்ரோ தலைவராக தமிழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானி கே.சிவன் நியமனம் !!

இஸ்ரோ தலைவராக தமிழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானி சிவன் நியமிக்கப்பட்டுள்ளார்.  இஸ்ரோ தலைவராக பொறுப்பு வகித்து வரும், கிரண் குமாரின் பதவி காலம் முடிவுக்கு வருவதை அடுத்து, புதிய தலைவராக, தமிழகத்தைச் சேர்ந்த, பிரபல விஞ்ஞானி, சிவன் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை, மத்திய அரசு நேற்று பிறப்பித்தது.

கே.சிவன், நாகர்கோவிலில் உள்ளவல்லன்குமரவிளை கிராமத்தில் பிறந்தவர். சென்னை, எம்.ஐ.டி.,யில், 1980ல், பொறியியல் பட்டம் பெற்றார்.இதன்பின், பெங்களூரின் இந்திய அறிவியல் கழகத்தில், முதுகலை பட்டம் பெற்றார். மும்பை, ஐ.ஐ.டி.,யில் ஆராய்ச்சி படிப்பிலும் பட்டம் பெற்றார்.இஸ்ரோவில், 1982ல், பணியில்சேர்ந்தார். பி.எஸ்.எல்.வி., ராக்கெட்டு களின் வடிவமைப்பில் துவங்கி, அவை வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது வரை, இவரது பணிகள், பலரது பாராட்டையும் பெற்றுள்ளன.


இஸ்ரோவின் மெரிட் விருது, டாக்டர் பிரேன் ராய் விண்வெளி அறிவியல் விருது உள்ளிட்ட பல விருதுகளையும் பெற்றுஉள்ளார்.சிவன், தற்போது, திருவனந்தபுரத்தில் உள்ள, விக்ரம் சாராபாய் விண்வெளி நிலையத்தின் இயக்குனராக பதவி வகித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

by Swathi   on 11 Jan 2018  1 Comments
Tags: இஸ்ரோ தலைவர்   கே.சிவன்   விஞ்ஞானி   ISRO Chairman   ISRO New Chairman   K.Sivan     
 தொடர்புடையவை-Related Articles
இஸ்ரோ தலைவராக தமிழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானி கே.சிவன் நியமனம் !! இஸ்ரோ தலைவராக தமிழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானி கே.சிவன் நியமனம் !!
25 வயதிற்குள் திருமணம் செய்யும் ஆண்களின் எலும்புகளுக்கு ஆபத்து !! 25 வயதிற்குள் திருமணம் செய்யும் ஆண்களின் எலும்புகளுக்கு ஆபத்து !!
கண் செல்களை அச்சிட்டு இங்கிலாந்து மருத்துவ விஞ்ஞானிகள் சாதனை !! கண் செல்களை அச்சிட்டு இங்கிலாந்து மருத்துவ விஞ்ஞானிகள் சாதனை !!
கருத்துகள்
14-Jan-2018 07:20:46 tamim said : Report Abuse
மறைந்த திரு.அப்துல் கலாம், திரு. மயில் சாமி அண்ணாதுரை இவர்களை தொடர்ந்து இஸ்ரோ தலைவராக தமிழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானி சிவன் நியமனம் மகிழ்ச்சி அளிக்கிறது. வாழ்த்துகள்
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.