LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    உலகம்-World Print Friendly and PDF
- வட அமெரிக்கா

பெட்னா - குறும்படப் போட்டி - விதிமுறைகள்

Tamil Short Film Contest for the first time as part of its annual convention in St. Louis, Missouri.

பெட்னா - குறும்படப் போட்டி - விதிமுறைகள்:

வட அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவை - பெட்னா - முதல் முறையாக தமிழ் குறும்படப் போட்டிகளை அறிவிக்கிறது.
தமிழர் வாழ்வியலை / சமூக சூழலைப் பேசுகின்ற சிறந்த 10 குறும் படங்களை உலகம் முழுவதிலும் இருந்து தெரிவு செய்து விருது மற்றும் 3 குறும்படங்களுக்கு பரிசு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 

தமிழ் சினிமாவின் உன்னத படைப்பாளி இயக்குநர் பாலாவை தலைவராகக் கொண்டு இயங்கும் நடுவர் குழு மூலம் இந்தப் படங்கள் தேர்வு செய்யப்படும்.

இந்தப் போட்டி மூலம் ஆர்வமும், திறமையும், ஆற்றலும் உள்ள இளைஞர்களை தேர்வு செய்து தமிழ் உலகிற்கு அறிமுகப்படுத்தவும், விருது பெறுகின்ற சிறந்த குறும்படங்களை அமெரிக்காவின் அனைத்து தமிழ்ச் சங்கங்களுக்கும் பரிந்துரைக்கவும் பெட்னா குழு முடிவு செய்துள்ளது.

குறும்படங்கள் தெரிவு செய்யப்படுவதற்கான நிபந்தனைகள்:

• தமிழ் மொழி , தமிழர்கள், புலம் பெயர்ந்த தமிழர்கள் சார்ந்தவையாக படைப்புகள் இருக்கவேண்டும்.
• இணையங்களில் ஏற்கெனவே வெளியான குறும்படங்கள் என்றால், அதுகுறித்து குறிப்பை / சுட்டியை டிவிடியுடன் கட்டாயம் தர வேண்டும்.
• ஏற்கெனவே பங்கேற்ற விழாக்கள், பெற்ற விருதுகள் பற்றியும் குறிப்பிட்டிருக்க வேண்டும்.
• பெட்னாவின் குறும்பட போட்டிக்கென்றே பிரத்தியேகமாக தயாரிக்கப்பட்ட குறும்படங்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
• ஏற்கனவே வெளியீடு செய்யப்படாத படங்களாக இருந்தால் வரவேற்கப்படும்.
• 2013, 2014 வருடங்களில் எடுக்கப்பட்டபடங்கள் மட்டும் போட்டியில் பங்குபெறலாம்.
• குறும்படங்கள் அதிகபட்சம் 15 - 20 நிமிடங்களுக்கு உட்பட்டதாக இருக்கவேண்டும்.
• சட்ட சிக்கல்கள் ஏதும் வந்தால் அதற்கு பெட்னாவோ அல்லது நடுவர்களோ பொறுப்பாக மாட்டார்கள்.
திரைப் படங்களை அனுப்ப நிறைவுநாள்:
• உங்கள் திரைப் படங்களை 25.05.2014-க்கு முன்னதாக பதிவுசெய்து / அனுப்பவேண்டும்.
• எங்கள் பார்வைக்கான DVD (with region 0) அல்லது Blue Ray பிரதிகள் இரண்டு சொந்த செலவில் அனுப்பி வைக்கவேண்டும். இவை அமெரிக்காவில் உள்ள மின்னணுக் கருவிகளில் பார்க்கக் கூடிய வகையில் இருக்க வேண்டும்.
• தெரிவு செய்யப்பட்ட திரைப்படங்கள் குறித்த விவரம் எங்கள் இணையத்தளத்திலும், உலகெங்கிலும் உள்ள தமிழ் ஊடகங்களின் மூலம் அறிவிக்கப்படும்.
குறும்படங்கள் - சில வழிகாட்டுதல்கள்
• தமிழ் மொழியையும், தமிழர்களுடைய கலை, கலாச்சாரத்தை அடையாள படுத்துவதாக இருக்கும் படங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
• தமிழ் சமூகத்தை மேம்படுத்தும் சிந்தனைகளை தூண்டும் படங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
• தமிழ் இலக்கியங்கள், தமிழர் வரலாறு சார்ந்த படங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் .
• ஆங்கிலத்தில் சப் டைட்டில் இருந்தால் நல்லது.
• தமிழ் மொழி - கலாச்சாரத்தை பிரதானப்படுத்தி, ஆங்கிலத்தில் குறும்படங்கள் இருந்தாலும் நலம்.
• எங்கள் தேர்வுக்குழுவால் தெரிவு செய்யப்படும் படங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். நடுவர்களின் முடிவே இறுதி.
• போட்டிக்கு அனுப்பப்பட்ட எந்தப் படத்தின் டிவிடியையும் திருப்பி அனுப்ப இயலாது. அதே நேரம் அவற்றை பெட்னா தனிப்பட்ட முறையில் பிரயோகிக்கவும் செய்யாது.
• உங்களுடைய திரைப்படப் பிரதிகள் மீண்டும் தேவைப்படின் அதை அனுப்புவதற்கான செலவினை ஏற்று வேண்டுமானால் பெற்றுக் கொள்ளலாம்.

பரிசு விவரம்:

தேர்வு செய்யப்பட்ட குறும்படங்களில் முதல் இடம் பிடிக்கும் இரு படங்களுக்கு 500 அமெரிக்க டாலர்கள் பரிசளிக்கப்படும்.
இரண்டாவது இடத்துக்கு மூன்று படங்கள் தேர்வு செய்யப்பட்டு தலா 200 டாலர்கள் வழங்கப்படும்.
மூன்றாவது பரிசுக்கு 5 படங்கள் தேர்வு செய்யப்படும். பரிசு தலா 100 டாலர்கள்.

இந்தப் படங்கள் வரும் ஜூலை மாதம் செயின்ட் லூயிசில் நடக்கவிருக்கும் பெட்னா தமிழ் விழாவில் திரையிடப்படும். 
விழாவில் நேரில் பங்கேற்க விரும்புபவர்கள் தங்கள் சொந்த செலவில் வரலாம். போட்டிக்கான நுழைவுக் கட்டணம் ஏதுமில்லை.

மேலதிக விவரங்களுக்கு: shortfilmcontest@fetna.org
என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

by Swathi   on 30 Mar 2014  0 Comments
Tags: FeTNA Short Film Contest   Short Film Contest   FeTNA   பெட்னா   குறும்படப் போட்டி        
 தொடர்புடையவை-Related Articles
குறள் வழி மாத இதழ் - பிப்ரவரி 2024 உங்கள் வாசிப்பிற்கு குறள் வழி மாத இதழ் - பிப்ரவரி 2024 உங்கள் வாசிப்பிற்கு
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - சிற்பச் சிலை கண்காட்சி திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - சிற்பச் சிலை கண்காட்சி
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 -  குஜராத்தி மொழிபெயர்ப்பாளர் பி.சி. கோகிலா அவர்கள் விழாவில் கலந்துக்கொண்டனர்  திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - குஜராத்தி மொழிபெயர்ப்பாளர் பி.சி. கோகிலா அவர்கள் விழாவில் கலந்துக்கொண்டனர் 
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - உலகத் திருக்குறள் முற்றோதல் இயக்கத்தின் இரண்டாம் ஆண்டு சந்திப்பு திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - உலகத் திருக்குறள் முற்றோதல் இயக்கத்தின் இரண்டாம் ஆண்டு சந்திப்பு
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - அரபு மொழியாக்க அனுபவங்களை பேராசிரியர்  முனைவர்.ஜாகிர் உசேன் திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - அரபு மொழியாக்க அனுபவங்களை பேராசிரியர் முனைவர்.ஜாகிர் உசேன்
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 -குறள் வழி பிப்ரவழி மாத இதழ் மேடையில் வெளியிடப்பட்டது.. திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 -குறள் வழி பிப்ரவழி மாத இதழ் மேடையில் வெளியிடப்பட்டது..
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - ஊடகச் சந்திப்பில்... திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - ஊடகச் சந்திப்பில்...
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - நிகழ்ச்சியில் கலந்துகொண்ட விருத்தினர்களின் ஒரு பகுதி திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - நிகழ்ச்சியில் கலந்துகொண்ட விருத்தினர்களின் ஒரு பகுதி
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.