தமிழ் தொலைக்கட்சிகளில் புத்தாண்டை முன்னிட்டு, அஞ்சான், சலீம், ரம்மி, தலைமுறைகள் போன்ற படங்கள் ஒளிபரப்பாக உள்ளன. எந்தெந்த தொலைக்காட்சியில், என்னென்ன திரைப்படங்கள் ஒளிபரப்பாக உள்ளது என்பதைப் பற்றி இங்கு காண்போம்.
சன் தொலைக்காட்சி :
சன் தொலைக்காட்சியில் காலை 11.00 மணிக்கு சசிகுமார், லட்சுமி மேனன் நடித்த சுந்தரபாண்டியன் திரைப்படம் ஒளிப்பரப்பாக உள்ளது. மத்தியம் 2.00 மணிக்கு உதயநிதி ஸ்டாலின், சந்தானம், ஹன்சிகா நடித்த ஒரு கல் ஒரு கண்ணாடி திரைப்படம் ஒளிபரப்பாக உள்ளது. மாலை 6.00 மணிக்கு லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா, சமந்தா நடித்த அஞ்சான் திரைப்படம் புத்தாண்டு சிறப்பு திரைப்படமாக ஒளிபரப்பாக உள்ளது.
விஜய் தொலைக்காட்சி :
விஜய் தொலைக்கட்சியில் புத்தாண்டு சிறப்பு திரைப்படமாக பார்தீபன் இயக்கிய கதை திரைக்கதை வசனம் இயக்கம் என்ற திரைப்படம் காலை 11.00 மணிக்கு ஒளிப்பரப்பாக உள்ளது.
ஜீ தமிழ் தொலைக்காட்சி :
ஜீ தமிழ் தொலைக்கட்சியில் காலை 11:00 மணிக்கு கதிர், ஓவியா நடிப்பில் G.V.பிரகாஷ் தயாரிப்பில் வெளிவந்த மதயானைக் கூட்டம் சிறப்புத் திரைப்படம் ஒளிப்பரப்பாக உள்ளது. மதியம் 2:00 மணிக்கு விஜய்சேதுபதி, இனிகோ பிரபாகரன், ஐஸ்வர்யா ராஜேஷ், காயத்ரி, சூரி நடிப்பில் கிராமத்தை கதைக் களமாகக் கொண்டு காதலை கதைக் கருவாக கொண்டு வெளி வந்த ரம்மி சிறப்புத் திரைப்படம் ஒளிப்பரப்பாக உள்ளது. மாலை 5:00 மணிக்கு விஜய் ஆண்டனி நடிப்பில் வெளிவந்த சலீம் திரைப்படம் ஒளிப்பரப்பாக உள்ளது.
ஜெயா தொலைக்காட்சி :
ஜெயா தொலைக்கட்சியில் புத்தாண்டு சிறப்பு திரைப்படமாக தலைமுறைகள் மற்றும் என்னமோ ஏதோ ஆகிய திரைப்படங்கள் ஒளிப்பரப்பாக உள்ளது.
கலைஞர் தொலைக்காட்சி :
கலைஞர் தொலைக்கட்சியில் புத்தாண்டு சிறப்பு திரைப்படமாக ஜீவா, அஜ்மல், கார்த்திகா நடித்த கோ திரைப்படம் ஒளிப்பரப்பாக உள்ளது.
|