|
||||||||
தமிழை எவ்வாறெல்லாம் பிழையாக எழுதுவார்கள் ? |
||||||||
தமிழை எவ்வாறெல்லாம் பிழையாக எழுதுவார்கள் ? பெரும்பாலும் எவ்விடங்களிலெல்லாம் வருந்தத்தக்க பிழைகள் நேரும் ? என்னுடைய நெடுநாள் கூர்நோக்கில் கண்டறிந்த பிழைநிலைமைகளை வரிசைப்படுத்துகிறேன்.
ஒரு பட்டியல் போட்டுப் பார்த்துவிடலாம்.
1). நெடில் எழுத்துகளில் எழுதவேண்டியதைக் குறில் எழுத்துகளில் எழுதுவார்கள்.
மாடு மேய்ந்தது => மடு மெய்ந்தது
கூடையோடு => குடையொடு
வெங்காயம் => வெங்கயம்
பாட்டு பாடு => பட்டு படு
2). குறில் எழுத்துகளில் எழுதவேண்டியதை நெடில் எழுத்துகளில் எழுதுவார்கள்.
தக்காளி => தாக்காளி
வெற்றிக் கொடி => வேற்றிக் கோடி
மட்டமான => மாட்டமான
விளம்பரம் => வீளம்பாரம்
3). மூவகையான ல, ழ, ள - எழுத்துகட்கிடையே இனி எவ்வகை வேறுபாட்டையும் நினைவிற்கொள்ளமாட்டார்கள்.
உழவுத் தொழில் => உளவுத் தொலிழ்
மழை பொழிந்தது => மளை பொலிந்தது
குளவிக் கூடு => குழவிக் கூடு
பல்லாண்டு வாழ்க => பள்ளாண்டு வால்க
4). மூவகையான ண, ந, ன எழுத்துகட்கிடையே இனி எவ்வகைப் பயன்பாட்டையும் பின்பற்றமாட்டார்கள்.
சுண்ணாம்பு => சுன்னாம்பு
பண்பாடு => பன்பாடு
முன்னாடி பின்னாடி => முண்ணாடி பிண்னாடி
தென்னை மரம் => தெண்ணை மரம்
ஓட்டுநர் => ஓட்டுனர்
5). இருவகை ர, ற - எழுத்துகட்கிடையேயான சொற்பயன்பாடுகளில் பிழை செய்வார்கள்.
உருவாகும் => உறுவாகும்
உறவைக் காத்த கிளி => உரவைக் கத்த கிலி
அறத்துப்பால் => அரத்துப்பல்
மறக்க முடியாது => மரக்க மூடியது
6). பெயர் பன்மையில் இருக்கையில் அதற்குரிய வினையை ஒருமையில் முடிப்பார்கள். (இதற்கு எதிராக நடப்பது சற்றே அரிது.)
நிகழ்ச்சிகள் நடந்தது
ஆண்டுகள் என்பது
தவறுகள் நடக்காது
ஆடுகள் மேய்ந்தது
7). இரண்டு மெய்யெழுத்துகள் அடுத்தடுத்துத் தோன்றும் சொற்களில் ஒரு மெய்யெழுத்தினை எழுத மறப்பார்கள்.
வளர்ச்சி => வளர்சி
மகிழ்ந்தனர் => மகிழ்தனர்
இடம்பெயர்ந்தார் => இடம்பெயர்தார்
பிறர்க்கின்னா => பிறர்கின்னா
வாய்க்கால் => வாய்கால்
8 ). ஒரு வல்லின மெய்யெழுத்தை அடுத்து இன்னொரு வல்லின உயிர்மெய்யெழுத்து தோன்றும் சொற்களில், உரிய வல்லின மெய்யைக் கோட்டைவிடுவர்.
புரட்சி => புரச்சி
சிற்பம் => சிர்பம்
சொற்சுவை => சொர்சுவை
கற்சிலை => கர்சிலை
9). ஒற்றைக் கொம்பு, இரட்டைக் கொம்பு ஆகியவற்றைப் பயன்படுத்துவதால் தோன்றும் குறில் நெடில் வேறுபாடுகளை மறந்துவிடுவர்.
மேளம் => மெளம்
தேடினான் => தெடினான்
கோட்டை => கொட்டை
வேட்டி => வெட்டி
10). தனிப்பட்ட எழுத்துகளில் ஒ - ஓ, சு - சூ, ஜீ - ஜூ, நு - நூ, து - தூ, மு - மூ ஆகியவற்றுக்கிடையேயான சிறு எழுத்துக் கீறl, சுழிகளை மறந்து விடுவர்.
ஓடம் => ஒடம்
ஓணான் => ஒணான்
சூடம் => சுடம்
ஜூன் => ஜீன்
நூற்றல் => நுற்றல்
தூரிகை => துரிகை
மூப்பு => முப்பு
மூன்றாம் => முன்றாம்
இவையே முதன்மையான பிழைகள். இவற்றைக் களைந்தாலே ஓரளவு நல்ல தமிழை எழுதக்கூடிய ஆற்றல் வாய்க்கும். உங்கள் எழுத்தில் இவ்வகைப் பிழைகள் நேர்கின்றன எனில் இவற்றை மட்டும் நீக்கியெழுதப் பாருங்கள், நல்ல முன்னேற்றம் கிடைக்கும்.
|
||||||||
|
||||||||
|
||||||||
|
||||||||
|
||||||||
|
||||||||
by Swathi on 01 Jun 2025 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|