|
||||||||
தமிழிசை- அன்றும் இன்றூம்...ரி.ஷி. சுப்புராமன் ,தலைவர், பண்ணாட்டு சன்மார்க்க சங்கம் |
||||||||
அன்பிற்குரிய பண்பாட்டுக் கழகமாய் திகழும் அன் பிற்கும் பண்பிற்குமுரிய சங்கீத வித்தகர் திருபுவனம் ஆத்மநாதன் அவர்களை வணங்கி அடியேன் இச்சிறு கட்டுரையை துவங்குகிறேன். உலகிலே திராவிட நாகரிகச் சிறப்பிற்கு சிறந்த எடுத்துக்காட்டாக இயங்குவது சிந்துவெளி நாகரிகம். அதில் மிகத் தொன்மை வாய்ந்தவைகளாக விளங்குவன அரப்பாவும், மொகஞ்சோதாராவும் ஆகும். அரப்பா, மொகஞ்சோதாரா அகழ் ஆராய்வில் இசை அமைப்பை தெளிவாக அறிய முடியவில்லை. ஆனால் இதை சுமேரிய நாகரீகத்தை நன்கு ஆராய்ந்த அறிஞர்கள் அரப்பா மொகஞ்சோதாரா இசை அமைப்பிற்கும் சுமேரிய இசை அமைப்பிற்கும் மிக நெருங்கிய தொடர்பும் ஒற்றுமையும் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்கள். சிந்துவெளி நாகரிகத்தில் காணு இசை அமைப்பும் தன்மையும் தமிழக இலக்கிய ஒலி மூலம் ஒருவாறு தெரியக்கூடியதாக இருக்கிறது. தமிழகத்தில் தேவாரப் பண்களைக் கண்ட இசை வல்லுனர்கள், இசை முறையின் உயர்ந்த விதிகளையும், அமைப்பையும் நன்கு அறிந்து அதை சரியாகப் பயன்படுத்தியுள் ளார்கள். அவர்கள் மூன்று பதிவேடுகளை, அதாவது, அடி, இடை, உச்சம் ஆகியவைகளை நன்கு உணர்ந்திருந்தார்கள். மூன்று பழைய பதிவுச் சுரங்கள் அல்லது இசைகள், உயர்த்தியும், உயர்த்தாமலும், சமப்படுத்தியும், ஏற்ற இறக்கக் குறிப்பாக, உதாந்த, அனுதாத்தம், கவரிதம் ஆக உபயோகப்படுத்தியுள்ளார்கள். மூன்று வகையான குறிப்பிட்ட இசை ஒலி அளவில் அமைத்துப் பாட்டுக்கு பயன்படுத்தப் பட்டுள்ளது. வேய்ங்குழல், அல்லது வீணை மீட்டல் பழைய மரபுவழி முறைப்படி பண்ணெடுங்காலமாக நிலைத்து நின்று வருகிறது என்றும் கூறுகின்றனர். வேதகால தோல் கருவிகள் என்று கூறப்பட்டவைகள் ஓரளவு மாறுதல் அடைந்துள்ளன என்றும் சொல்லப்படுகிறது. தமிழகத்தில் தோன்றித் தழைத்த தமிழ் இசையைத் தழுவி வட இந்தியாவில் பல்வேறு விதமான இசைகளும் இசைக்கருவிகளும் கிறித்துவ ஊழிக்குப்பின் எழுந்தன, நாமாவளி போன்ற இசைகளும் மலர்ந்தன. இஃதன்றி இன்னும் பல்வேறு விதமான நாட்டுப்பாடல்களான, காவடிச்சிந்து, தெம்மாங்கு, அம்மானை போன்றவைகளும் துளிர்ந்தன. இணையற்ற இசைக் கருவிகள் இருந்த இடம் தெரியாமல் மறைந்து போகும் நிலை எழுந்தது. ஆனாலும் தமிழகத்துப் பாமரமக்கள் தமிழ் இசை பூண்டற்றுப்போகா வண்ணம், தெம்பாங்கு, காவடிச்சிந்து, நொண்டிச்சிந்து, கும்மி, போன்ற இசைகளைப் பாதுகாத்து வந்தனர். திருக்கோயில்களில் மட்டும் புல்லாங்குழலும், சங்கும், கொம்பும், சாரங்கியும், துந்தினாவும் ஏன் தாரைதப்பட்டை, மத்தளம், முரசு போன்ற இசைக்கருவிகளும் அழியவிடாது பயன்படுத்தி பாதுகாத்து வரப்பட்டது. இதே நிலை ஆந்திராவிலும், கேரளாவிலும் உண்டு என்று கூறப்படுகிறது. சுருங்கக்கூறின் தமிழர்கள் தமிழ் இசையை மறந்தும், தாழ்ந்தும், தாழ்வுற்றும் போனதுண்டு. இந்நிலைகண்டு செட்டிநாட்டரசர் வருந்தி அதற்குப் புதுவாழ்வு அளிக்க முன்வந்தார் தமிழ் இசை இயக்கத்திற்கு அடிகோலினார். ஈழம் தந்த தமிழ் முனிவர் விபுலானந்து அடிகள் தமிழகத்தில் மீண்டும் தமிழ் இசைக்கு யாழ் இலக்கணம் கண்டார். தமிழகத்தில் மீண்டும் யாழ்இசை ஒலிக்க பணியாற்றினார். தற்போது இசைக்கலைஞர்கள் தமிழ் இசைக்கு புத்துயிர் ஊட்ட பாடுபட வேண்டுமென்று வேண்டி இக்கட்டுரையை நிறைவு செய்கிறேன். |
||||||||
by Swathi on 28 Jan 2016 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|