LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

மக்கள் சிந்தனைப் பேரவையின் சார்பில் மொழிபெயர்ப்பாளர் மாநில மாநாடு 2018-இல் திருச்சியில் நடைபெற உள்ளது

மக்கள் சிந்தனைப் பேரவையின் மாநிலப் பொதுக்குழுக் கூட்டம் ஈரோடு யு.ஆர்.சி பள்ளி அரங்கில் 12.11.2017 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்திற்கு பேரவையின் மாநிலத் தலைவர் த.ஸ்டாலின் குணசேகரன் தலைமையேற்றதோடு பேரவையின் எதிர்காலத் திட்டங்கள் குறித்து உறுப்பினர்களிடையே விளக்கிப் பேசினார்.
காலை 10 மணிக்குத் தொடங்கி மாலை 7 மணிவரை நடைபெற்ற இக்கூட்டத்தில் 15 மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் சிந்தனைப் பேரவையின் மாநிலப் பொதுக்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன :

• மக்கள் சிந்தனைப் பேரவையின் 20-ஆம் ஆண்டு நிகழ்வுகளை வருகிற 2018-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கி ஓராண்டு முழுக்க பல வடிவங்களில் தமிழகமெங்கும் நடத்துவது...

• பிற மொழிகளிலிருந்து தமிழுக்கும் தமிழிலிருந்து பிற மொழிகளுக்கும் மொழிபெயர்த்து புதிய நூலாக்கப் பணிகளில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டுள்ள மொழிபெயர்ப்பாளர்களை ஒருங்கிணைத்து மாநில அளவில் மொழிபெயர்ப்பாளர் மாநாட்டை திருச்சியில் 2018-இல் முழுமையான தயாரிப்புகளுடன் நடத்துவது எனவும் இதில் தமிழகத்தில் மட்டுமல்லாது வெளிநாடுகளில் வசிக்கும் தமிழ் மொழிபெயர்ப்பாளர்களையும் பங்கேற்கச் செய்வது...

• தமிழகமெங்குமுள்ள இளம் பேச்சாளர்களை ஒருங்கிணைத்து தமிழக இளம் பேச்சாளர் மாநாடு ஒன்றினை ஈரோட்டில் நடத்துவது, இதில் தமிழ் மாநிலத்திலுள்ள ஏற்கனவே பேச்சுத் துறையில் ஈடுபாடும் ஓரளவு பயிற்சியும் கொண்ட முப்பது வயதிற்கு உட்பட்ட இளம் பேச்சாளர்களை இம்மாநாட்டின் பிரதிநிதிகளாகப் பங்கேற்க வைப்பது...

• வருகிற டிசம்பர் 11-ஆம் தேதி ஈரோட்டில் பாரதி விழாவை சிறப்பாக நடத்துவது, இந்நிகழ்வில் தமிழறிஞர் சிலம்பொலி சு. செல்லப்பன் அவர்களுக்கு பாரதி விருது வழங்குவது, கவிஞர் தமிழ்ஒளியின் திருவுருவப் படத்தைத் திறந்து வைப்பது...

• மக்கள் சிந்தனைப் பேரவையை மாநில அமைப்பாக விரிவடையச் செய்வது, ஏற்கனவே அமைப்புக்கள் உருவாகியுள்ள மாவட்டங்களில் பேரவையின் நடவடிக்கைகளை மேம்படுத்தவது, இதுவரை பேரவை உருவாகாத மாவட்டங்களில் உடனடியாக பேரவையின் மாவட்ட அமைப்பை உருவாக்க நடவடிக்கைகள் எடுப்பது. எதிர்வரும் காலங்களில் மாநிலப் பொதுக்குழுக் கூட்டத்தை அடுத்தடுத்த மாவட்டங்களில் நடத்தி பேரவையின் மாநிலத் தன்மையை மேம்படுத்துவது. உள்ளிட்ட பல தீர்மானங்கள் இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

முன்னதாக மாநிலச் செயலாளர் ந.அன்பரசு வேலையறிக்கை வாசித்தார். பொருளாளர் க.அழகன் வரவு-செலவு கணக்கை சமர்ப்பித்தார். துணைத்தலைவர் பேராசிரியர் கோ.விஜயராமலிங்கம், துணைச் செயலாளர் ஜா. தினகரன் உள்ளிட்ட மாநிலப் பொதுக்குழு உறுப்பினர்கள் இக்கூட்டத்தில் பங்கேற்றனர்.

by Swathi   on 13 Nov 2017  3 Comments
Tags: மக்கள் சிந்தனைப் பேரவை   மொழிபெயர்ப்பாளர் மாநில மாநாடு   Makkal Sinthanai Peravai              
 தொடர்புடையவை-Related Articles
மக்கள் சிந்தனைப் பேரவையின் சார்பில் மொழிபெயர்ப்பாளர் மாநில மாநாடு 2018-இல் திருச்சியில் நடைபெற உள்ளது மக்கள் சிந்தனைப் பேரவையின் சார்பில் மொழிபெயர்ப்பாளர் மாநில மாநாடு 2018-இல் திருச்சியில் நடைபெற உள்ளது
மக்கள் சிந்தனைப் பேரவையின் சார்பில்  அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு எழுச்சிமிக்க பாரட்டு விழா மக்கள் சிந்தனைப் பேரவையின் சார்பில் அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு எழுச்சிமிக்க பாரட்டு விழா
கருத்துகள்
17-Nov-2017 08:30:50 Arunagiri said : Report Abuse
மொழிபெயர்ப்பாளர் மாநாடு என்ற செய்தியைப் படித்தவுடன் மிக்க மகிழ்ச்சி அடைந்தேன். பாராட்டுகள். மாநாடு சிறப்பாக நடைபெற வாழ்த்துகள். நானும் ஒரு மொழிபெயர்ப்பாளன் என்ற முறையில் மாநாட்டில் பங்கேற்க முயற்சிக்கின்றேன். அருணகிரி,
 
17-Nov-2017 01:54:49 டி.வி. ராமகோபால். said : Report Abuse
என் வயது 62. வங்கியில் பணி புரிந்து ஓய்வு பெற்றவன். நான் தமிழிலிருந்து ஆங்கிலத்திலும், ஆங்கிலத் திரு ந் து தமிழிலும் மொழி பெயர்க்கும் பணியில் ஈடுபட விரும்புகிறேன். அத்தகைய பணிகள் இருந்தால் எனக்கு அனுப்பும் படி கேட்டுக்கொள்கிறேன். நன்றிகளுடன், டி.வி.ராமகோபால்.
 
16-Nov-2017 23:08:53 subrabharathimanian said : Report Abuse
நல்ல முயற்சிகள் வெல்லும் முயற்சிகள் வாழ்க சுப்ரபாரதிமணியன்
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.