|
|||||
2013-ல் தமிழக நிகழ்வுகள் ஒரு பார்வை !! |
|||||
![]() ஜனவரி 1 : கற்பழிப்பு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாயும்..... கற்பழிப்பு வழக்குகளை விசாரிக்க மாவட்டம் தோறும் மகளிர் விரைவு என 13 அம்ச திட்டத்தை முதல் அமைச்சர் ஜெயலலிதா அறிவித்தார்.
ஜனவரி 3 : திருப்பூர் மாவட்டம், தாராபுரம் தொழிலதிபர் ராமலிங்கத்திடம் இருந்து ரூ. 28 ஆயிரம் கோடிக்கணக்கான அமெரிக்க கடன் பத்திர ஆவணங்களை வருமான வரித்துறையினர் பறிமுதல் செய்தனர்.
ஜனவரி 10 : சென்னை ஆலந்தூரில் மெட்ரோ ரயில் பனியின் போது ராட்சத எந்திரம் சரிந்து விழுந்து தொழிலாளி ஒருவர் பலி. இரண்டு பேர் படுகாயம்.
ஜனவரி 13 : ராமேஸ்வரம் அருகே பாம்பன் பாலத்தை கடக்க முயன்ற கப்பல், பலத்த காற்று காரணமாக இழுத்து செல்லப்பட்டு ரெயில் பாலத்தில் மோதியது. இதில் பாலம் சேதமடைந்ததால் ரெயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
ஜனவரி 15 : கிரானைட் ஊழல் வழக்கில் மத்திய மந்திரி அழகிரியின் மகன் துறை தயாநிதிக்கு எதிரான தமிழக அரசின் மனு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி.
தேனீ மாவட்டம் லோயர் கேம்பில், முல்லைப் பெரியாறு அணையை கட்டிய ஆங்கிலேய என்ஜினியர் ஜான் பென்னிகுயிக்கின் மணி மண்டபத்தையும், அவரது சிலையையும் முதல் - அமைச்சர் ஜெயலலிதா திறந்து வைத்தார்.
ஜனவரி 17 : மதுரை மல்லிக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டது.
ஜனவரி 21 : மக்கள் சக்தி இயக்க தலைவர் எம்.எஸ் உதய மூர்த்தி சென்னையில் காலமானார்.
ஜனவரி 30 : விஸ்வரூபம் படத்துக்கு மீண்டும் தடை. தமிழக அரசின் அப்பீல் மனுவை ஏற்று ஐகோர்ட் நீதிபதிகள் உத்தரவு.
ஜனவரி 31 : மதுரையில் மத்திய அமைச்சர் அழகிரியின் ஆதரவாளரும் தி.மு.க பிரமுகருமான பொட்டு சுரேஷ் மர்ம கும்பலால் வெட்டிக்கொலை.
பிப்ரவரி 7 : தி.மு.க பொருளாளர் மு.க.ஸ்டாலின் பற்றிய பேட்டியால் திருச்சியில் நடிகை குஷ்பூ மீது செருப்பு வீசி தி.முக வினர் தாக்குதல் நடத்தினர். சென்னையில் உள்ள குஷ்புவின் வீடு மீதும் கல்வீச்சு.
பிப்ரவரி 12 : ஆசிட் வீச்சில் காயம் அடைந்த சென்னை பெண் என்ஜினியர் வினோதினி மரணம்.
பிப்ரவரி 13 : சந்தன கடத்தல் வீரப்பனின் கூட்டாளிகள் ஞானப்பிரகாசம், சைமன், மீசை மாதையன், பிலவேந்திரன் ஆகிய நான்கு பேரின் கருணை மனுக்களை ஜனாதிபதி நிராகரித்தார்.
பிப்ரவரி 19 : சென்னையில் மலிவு விலை அம்மா உணவகங்களை ஜெயலலிதா திறந்து வைத்தார்.
பிப்ரவரி 20 : புதிய தலைமைச் செயலக கட்டிடத்தை பல்நோக்கு நவீன மருத்துவமனையாக மற்ற தடையில்லை என பசுமை தீர்ப்பாயம் தீர்ப்பு.
பிப்ரவரி 21 : திருச்சி வந்த இலங்கை எம்.பி கருணாரத்ன ஜெயசூர்யாவின் கார் மீது கல்வீசி தாக்கப்பட்டது. இது தொடர்பாக ம.தி.மு.க , நாம் தமிழர் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டனர்.
பிப்ரவரி 24 : ஆசிட் வீச்சில் காயம் அடைந்த சென்னை பெண் வித்யா மரணம்.
மார்ச் 1 : செங்கம் தொகுதி தே.மு.தி.க சட்டமன்ற உறுப்பினர் டி.சுரேஷ்குமார் முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து பேசினார்.
மார்ச் 5 : பழம் பெரும் நடிகை ராஜ சுலோசனா மரணம்.
மார்ச் 8 : தமிழர்கள் கண்ணியத்துடனும் சுயமரியாதையுடனும் வாழ இலங்கை அரசுடன் பேசி நடவடிக்கை எடுக்கப் படும் என்று டெல்லி மேல்-சபையில் மன்மோகன் சிங் உறுதி.
மார்ச் 11 : இலங்கை தமிழர் பிரச்னையை வலியுறுத்தி டெசோ முழு அடைப்பு போராட்டம்.
மார்ச் 15 : கூகுள் நிறுவனத்தின் ஆன்ட்ராய்டு பிரிவின் தலைவராக சுந்தர் பிச்சை நியமிக்கப்பட்டார்.
தகாத உறவில் பிறந்தது குழந்தையின் தவறு அல்ல அந்த குழந்தைக்கும் அனைத்து உரிமைகளும் உண்டு என சென்னை உயர் நீதி மன்றம் தீர்ப்பு.
இலங்கை தமிழர் பிரச்சனையில் மாணவர்கள் போராட்டம் தீவிரம் அடைந்ததால் தமிழகத்தில் அனைத்துக் கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டதோடு மூடவும் அரசு உத்தரவு.
மார்ச் 19 : இலங்கை பிரச்சனையில் திமுகவின் கோரிக்கையை பரிசீலிக்கவில்லை என்ற குற்றச்சாட்டால் மத்திய அரசில் இருந்து தி.மு.க விலகல். ஆளும் கூட்டணியில் இருந்தும் வெளியேறுவதாக அறிவிப்பு. விடுதலை சிறுத்தைகள் கட்சியும் விலகுவதாக அறிவிப்பு.
மார்ச் 21 : வெளிநாட்டு சொகுசு கார் மோசடி வழக்கு தொடர்பாக முக. ஸ்டாலின் வீட்டில் சி.பி.ஐ விசாரணை.
மார்ச் 22 : சென்னையில் இலங்கை தமிழர் பிரச்சனை தொடர்பாக நடந்த பொது கூட்டத்தில் தீக்குளித்த விக்ரம் என்ற வாலிபர் பலி.
மார்ச் 23 : தூத்துக்குடியில் ரசாயன வாயு கசிவால் அப்பகுதி மக்களுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது.
மார்ச் 25 : தமிழக சட்டசபையில் தேமுதிக அதிருப்தி எம்.எல்.ஏ தமிழழகனை தாக்கியதாக அக்கட்சி எம்.எல்.ஏக்கள் வி.சி சந்திரசேகர், ப.பார்த்தசாரதி, டி,முருகேசன், நல்லத்தம்பி, எஸ் செந்தில்குமார், அருள்செல்வன் ஆகிய ஆறு பேர் ஓராண்டுகளுக்கு இடைநீக்கம் செய்யப்பட்டனர்.
விவசாய நிலங்கள் வழியாக எரிவாயு குழாய்கள் பாதிக்கும் திட்டத்தை உடனடியாக கைவிட வேண்டும் என்று கெயில் நிறுவனத்துக்கு முதல்வர் ஜெயலலிதா கோரிக்கை.
மார்ச் 26 : சென்னையில் நடைபெறும் ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டிகளில் இலங்கை வீரர்கள் விளையாட அனுமதிக்க கூடாது என்று பிரதமருக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதினார். இதன் எதிரொலியாக ஐ.பி.எல் ஆட்சி மன்ற குழு சென்னையில் ஐபி.எல் போட்டிகளில் இலங்கை வீரர்கள் பங்கேற்க மாட்டார்கள் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
சட்டசபை கைகலப்பு விவகாரத்தில் தே.மு.தி.க எம்.எல்.ஏக்களின் ஓராண்டு இடைநீக்கம் ஆறு மாதமாக குறைப்பு.
இரண்டாயிரம் படங்களுக்கு மேல் நடித்த பழம் பெரும் நடிகை சுகுமாரி மரணம்.
மார்ச் 27 : இலங்கை போர்க்குற்றம் குறித்து விரிவான விசாரணை, பொருளாதார தடை விதித்தல் மற்றும் தனி ஈழம் குறித்து பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா கொண்டு வந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மார்ச் 30 : நச்சு வாயுவை வெளியேற்றியதால் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு உத்தரவிட்டது.
ஏப்ரல் 2 : சுற்றுச்சூழலை மாசுபடுத்தியதற்காக ஸ்டெர்லைட் ஆலை ரூ 100 கோடி வழங்க வேண்டும் என்றும் ஆலையை மூடும் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு செல்லாது என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக சென்னையில் நடிகர் - நடிகைகள் உண்ணாவிரதம் இருந்தனர்.
ஏப்ரல் 3 : தமிழகத்தில் கூட்டுறவு சங்க தேர்தலுக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு.
ஏப்ரல் 6 : தமிழ்நாட்டில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு படகில் தப்பிச் செல்ல முயன்று நடுக்கடலில் சிக்கி தவித்த 120 தமிழர்களை இந்திய கடலோர காவல் படையினர் மீட்டனர்.
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக துணை வேந்தர் ராமநாதன் முறைகேடு புகார் தொடர்பாக பதவியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார்.
ஏப்ரல் 10 : அரக்கோணம் அருகே யஷ்வந்த்பூர் எக்ஸ்ப்ரஸ் ரயில் கவிழ்ந்து 11 பேட்டிகள் தடம் புரண்டதில் ஒருவர் பலியானார். 33 பேர் காயம் அடைந்தனர்.
ஏப்ரல் 14 : பழம்பெரும் பின்னணி பாடகர் பி.பி. ஸ்ரீனிவாஸ் மாரடைப்பால் மரணம்.
ஏப்ரல் 15 : சிதம்பரம் அண்ணாமலை பல்கலைகழகத்தை அரசு கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற்கான மசோதா சட்டசபையில் தாக்கல்.
ஏப்ரல் 17 : சினிமா இசையமைப்பாளர் டி.கே.ராமமூர்த்தி மரணம்.
ஏப்ரல் 19 : இந்தியாவிலேயே முதல் முறையாக தமிழகத்தில் டெல்டா அல்லாத பிற மாவட்டங்களில் வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ரூ.1754 கோடியே 86 லட்சம் நிவாரண உதவியாக முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு.
ஏப்ரல் 20 : தஞ்சாவூர் அரண்மனையில் இருந்த பல கோடி ரூபாய் மதிப்புள்ள மரகத ஸ்படிக லிங்கங்களை மர்ம மனிதர்கள் திருடிச் சென்றனர்.
ஏப்ரல் 22 : பிரபல வயலின் வித்வான் லால்குடி ஜெயராமன் மரணம்.
ஏப்ரல் 25 : சித்திரா பவுர்ணமியை முன்னிட்டு மாமல்லபுரத்தில் பாமக நடத்திய மாநாட்டுக்கு வந்தவர்களின் வாகனம் மோதியது தொடர்பாக இரு தரப்பினருக்கு இடையே மோதல் ஏற்பட்டது. அரசு பேருந்துகளுக்கு தீவைக்கப்பட்டது. கலவரத்தை அடக்க போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர்.
கோவை வணிக வளாகத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் அங்கு பணியாற்றிய பெண் ஊழியர்கள் 4 பேர் பலி.
ஏப்ரல் 26 : ஆந்திர ஓட்டல் அதிபரிடம் ரூ.50 லட்சம் மோசடி செய்த வழக்கில் நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் கைது.
ஏப்ரல் 27 : கரூர் அருகே 700 அடி ஆழ்குழாய் கிணற்றில் தவறி விழுந்த சிறுமியை உயிருடன் மீட்க நடந்த 15 மணி நேரம் போராட்டம் தோல்வியில் முடிந்தது. மாணவி பிணமாக மீட்கப்பட்டார்.
ஏப்ரல் 29 : மாமல்லபுரம் விழாவில் நிபந்தனைகளை மீறி பேசிய டாக்டர் ராமதாஸ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளதாகவும், சாதி மோதலை தூண்டுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சட்டசபையில் ஜெயலலிதா அறிவிப்பு.
ஏப்ரல் 30 : விழுப்புரத்தில் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்த வந்த டாக்டர் ராமதாஸ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
மே 3 : கச்சத்தீவை மீட்க முதல்வர் ஜெயலலிதா கொண்டு வந்த தீர்மானம் சட்டசபையில் ஒரு மனதாக நிறைவேறியது.
சட்டவிரோதமாக பொதுக்கூட்டத்தில் பேசியதாக டாக்டர் அன்பு மணி ராமதாஸ் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
வாடிக்கையாளர்கள் தமது புகைப்படத்துடன் கூடிய அஞ்சல் தலையை தமது கடிதங்களில் ஒட்டி அனுப்பும் எனது அஞ்சல் தலை திட்டம் தமிழகத்தில் முதல் முறையாக சென்னையில் தொடங்கப்பட்டது.
மே 6 : கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு அனுமதி வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
மே 8 : தமிழ்நாட்டில் குட்கா, பான்மசாலா போன்ற சுவைக்கும் புகையிலைப் பொருட்களை தயாரிக்கவும், சேமித்து வைக்கவும், வினியோகிக்கவும், விற்கவும் தடை விதிக்க அரசு முடிவு செய்திருப்பதாக சட்டசபையில் ஜெயலலிதா அறிவித்தார்.
மே 15 : சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தை அரசு ஏற்க வகை செய்யும் சட்ட மசோதா தமிழக சட்டசபையில் ஏகமனதாக நிறைவேறியது.
மே 19 : ஸ்ரீ ரங்கம் அகோபில மேடம் ஜீயர் மரணம்.
மே 22 : அண்ணா பல்கலைக்கழக புதிய துணை வேந்தராக எம்.ராஜாராம் நியமனம்.
மே 25 : 10 ஆயிரம் பாடல்களுக்கு மேல் பாடி சாதனை படைத்த பாடகர் டி.எம். சவுந்தரராஜன் மரணம்.
மே 28 : கலை-அறிவியல் கல்லூரி தேர்வுகளை ஆங்கிலத்தில் எழுதுமாறு பிறப்பித்த உத்தரவை வாபஸ் பெறப்போவதாகவும், தமிழிலோ, ஆங்கிலத்திலோ எழுதலாம் என்றும் முதல் அமைச்சர் ஜெயலலிதா அறிவிப்பு.
மே 30 : தமிழ்நாடு முழுவதும் குட்கா, பான் மசாலாவுக்கு தடை விதிக்கப்பட்டது. இந்த தடை உத்தரவு உடனடியாக அமலுக்கு வந்தது.
தமிழகத்தில் எடுக்கப்பட்ட 2011 ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி கடந்த 10 ஆண்டுகளில் 97 லட்சம் மக்கள் தொகை எண்ணிக்கை எண்ணிக்கை உயர்ந்துள்ளது. தமிழகத்தில் தற்போதைய மக்கள் தொகை 7 கோடியே 21 லட்சம் என்ற தகவலும் வெளியானது.
ஜூன் 2 : அம்மா உணவகங்களை தமிழ்நாட்டில் மேலும் 9 மாநகராட்சிகளிலும் முதல் அமைச்சர் ஜெயலலிதா திறந்து வைத்தார்.
சென்னை விமான நிலையத்தில் இருந்து இலங்கை தொழில் அதிபர் தவராஜா மனைவி சலஜாவுடன் கடத்தப்பட்டு பின்னர் மீட்கப்பட்டார். ரூ 2 1/2 கோடி பணம் கேட்ட 9 பேர் கொண்ட கும்பலை சென்னை போலீசார் மடக்கிப்பிடித்து கைது செய்தனர்.
ஜூன் 5 : சட்டசபையில் மோதலில் ஈடுபட்ட தே.மு.தி.க எம்.எல்.ஏக்கள் 6 பேரை இடைநீக்கம் செய்தது செல்லும் என்று சென்னை ஐகோர்ட் தீர்ப்பு.
ஜூன் 8 : ஈழத்தமிழர் -மீனவர் பிரச்சனையில் மாற்றந்தாய் மனப்பான்மையுடன் நடப்பதாக மத்திய அரசுக்கு அதிமுக செயற்குழு கூட்டத்தில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
ஜூன் 11 : கோவில்பட்டி அருகே தீப்பெட்டி தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 4 பெண்கள் உடல் கருகி இறந்தனர்.
ஜூன் 12 : முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுடன் தே.மு.தி.க எம்.எல்.ஏ மா.பா.பாண்டியராஜன் சந்தித்து, தனது தொகுதி பிரச்சனைகளை நிறைவேற்றித்தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
ஜூன் 15 : சினிமா இயக்குனரும், நடிகருமான மணிவண்ணன் சென்னையில் மாரடைப்பால் மரணம்.
ஜூன் 17 : தமிழக அமைச்சரவையில் இருந்து செல்லப்பாண்டியன், முகமது ஜான் ஆகியோர் நீக்கம். புதிய அமைச்சர்களாக சண்முகநாதன், அப்துல்ரகீம் ஆகியோர் நியமனம்.
ஜூன் 18 : குன்னூர் வெலிங்கடன் ராணுவ முகாமில் பயிற்சி பெரும் இலங்கை ராணுவ அதிகாரிகளை வெளியேற்ற கோரி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட 400 பேர் கைது. தமிழ்நாட்டில் எழுந்த எதிர்ப்பை தொடர்ந்து அவர்கள் ஜூன் 24 ந்தேதி வெளியேறினார்கள்.
ஜூன் 20 : சென்னையில் தமிழக சட்டசபை வைரவிழா நினைவு வளைவை முதல்-அமைச்சர் ஜெயலலிதா திறந்து வைத்தார்.
ஜூன் 21 : தமிழக பேருந்து நிலையங்களில் ரூ.10 விலையில் அம்மா குடிநீர் விற்பனை செய்யப்படும் என முதல்-அமைச்சர் ஜெயலலிதா அறிவித்தார்.
தமிழக அரசியல் கட்சிகளின் எதிர்ப்பை மீறி என்.எல்.சி யின் 5 சதவீத பங்குகளை விற்க மத்திய மந்திரி சபை முடிவு
ஜூன் 28 : திமுக முன்னாள் அமைச்சர் பரிதிஇளம்வழுதி, பாமக. முன்னாள் மத்திய அமைச்சர் பொன்னுசாமி ஆகியோர் அதிமுக வில் இணைந்தனர்.
ஜூலை 1 : நாகர்கோவில் நீதிமன்றத்தில் தி.மு.தி.க தலைவர் விஜயகாந்த் ஆஜரானபோது வக்கீல்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இதுதொடர்பாக அரசு வக்கீல் கொடுத்த புகாரின் பேரில் விஜயகாந்த் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு.
இந்து முன்னணி மாநில செயலாளர் வெள்ளையப்பன் வேலூரில் பட்டபகலில் வெட்டிக்கொலை.
ஜூலை 3 : தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்ட குரு எம்.எல்.ஏ வை மத்திய உள்துறை விடுவித்த நிலையில் தமிழக அரசு அவரை அதே சட்டத்தில் மீண்டும் கைது செய்து சிறையில் அடைத்தது
காதல் திருமணம் செய்தது தொடர்பாக ஏற்பட்ட பிரச்சனையில் தருமபுரி இளவரசன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.
ஜூலை 7 : தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் கோரிக்கையை ஏற்று என்.எல்.சி.யின் 5 சதவீத பங்குகளை தமிழக அரசுக்கு விற்பனை செய்ய "செபி" ஒப்புதல் அளித்தது.
ஜூலை 8 : தர்மபுரி இளவரசன் மரணம் குறித்து விசாரிக்க நீதிபதி சிங்காரவேலு தலைமையில் விசாரணை கமிஷனை அமைத்து முதல்வர் ஜெயலலிதா உத்தரவு.
ஜூலை 11 : கூடங்குளத்தில் முதல் அணு உலையை இயக்க அணுசக்தி ஒழுங்கு முறை ஆணையம் அனுமதி வழங்கியது.
ஜூலை 15 : என்.எல்.சி பங்குகள் ரூ. 500 கோடிக்கு தமிழக அரசுக்கு விற்பனை செய்யப்படுவதால் நெய்வேலி ஊழியர்கள் போராட்டத்தை வாபஸ் பெற்று உடனடியாக வேலைக்கு திரும்பினார்கள்.
ஜூலை 17 : காவிரி டெல்டா பகுதியில் மீத்தேன் திட்டத்துக்கு ஜெயலலிதா தடை விதித்தார்.
ஜூலை 18 : திரைப்பட உலகில் பல சாதனைகளை படைத்த கவிஞர் வாலி மரணம்.
ஏற்காடு தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் பெருமாள் மாரடைப்பால் மரணம்.
ஜூலை 19 : சேலத்தில் தமிழக பாரதீய ஜனதா பொதுச் செயலாளர் ஆடிட்டர் ரமேஸ் படுகொலை செய்யப்பட்டார்.
உச்ச நீதி மன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக தமிழ்நாட்டை சேர்ந்த பி.சதாசிவம் பதவி ஏற்றார்.
ஜூலை 23 : எம்.ஜி.ஆர்., சிவாஜியுடன் நடித்த பிரபல தமிழ் நடிகையும், நடிகர் விஜயகுமாரின் மனைவியுமான மஞ்சுளா மரணம்.
ஜூலை 29 : கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு எதிரான 2 வழக்குகளை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. சுப்ரீம் கோர்ட்டு முடிவு செய்ததில் தலையிட முடியாது என தீர்ப்பு அளித்தது.
60 சதவீத இட ஒதுக்கீட்டால் பாதிக்கப்படும் பொது பிரிவினருக்கு மருத்துவ படிப்பில் கூடுதலாக 19 சதவீத இடங்களை வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஆகஸ்ட் 2 : திரைப்பட இயக்குனர் சேரன் மீது அவரது மகள் தாமினி போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்தார். தனது காதலர் சந்துருவுக்கு கொலை மிரட்டல் விடுப்பதாகவும். அவருக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் எனவும் அதில் குறிப்பிட்டு இருந்தார். பின்னர் ஆகஸ்டு 22 ந்தேதி தாய் - தந்தையுடன் செல் விரும்புவதாக தாமினி நீதிமன்றத்தில் கூறியதை தொடர்ந்து இந்த பிரச்சனை முடிவுக்கு வந்தது.
ஆகஸ்ட் 9 : விழுப்புரம் மாவட்டம் கர்ணன்-ராஜேஸ்வரி தம்பதிக்கு பிறந்த குழந்தையின் உடல் திடீர், திடீரென தானாக தீப்பிடிப்பதாக பரபரப்பு தகவல். இதைத்தொடர்ந்து அந்த குழந்தை சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவ கல்லூரி மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டது.
ஆகஸ்ட் 20 : ஒரு தலைக்காதலால் ஆசிட் வீசி விநோதினியை கொலை செய்த சுரேஷ் குமாருக்கு ஆயுள் தண்டனை விதித்து காரைக்கால் நீதிமன்றம் தீர்ப்பு.
ஆகஸ்ட் 22 : 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கு விசாரணைக்காக டெல்லி தனிக்கோர்ட்டில் ஆஜர் ஆவதில் இருந்து தி.முக தலைவர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாவுக்கு உச்ச நீதிமன்றம் விதிவிலக்கு அளித்தது. கமிஷன் ஒன்றை அமைத்து அவரிடம் சென்னையில் விசாரணை நடத்தவும் உத்தரவிட்டது.
ஆகஸ்ட் 23 : சங்க இயக்கியப் பாடல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த திருநெல்வேலி மாவட்டம் குறும்பலாப் பேறியைச் சேர்ந்த எழுத்தாளர் எம்.எல்.தங்கப்பாவுக்கு சாகித்ய அகாடமியின் மொழிபெயர்ப்பு விருது சென்னையில் நடந்த விழாவில் வழங்கப்பட்டது.
ஆகஸ்ட் 24 : சென்னையில் ஆட்டோக்களுக்கு குறைந்தபட்ச கட்டணமாக ரூ 25 நிர்ணயம் செய்து முதல்வர் அறிவிப்பு.
செப்டம்பர் 5 : தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் பதவியில் இருந்து வைகை செல்வன் நீக்கப்பட்டார். அவரது பொறுப்பு அமைச்சர் பழனியப்பனுக்கு கூடுதலாக வழங்கப்பட்டது.
செப்டம்பர் 15 : ரூ.10 க்கு அம்மா குடிநீர் விற்பனையை முதல்வர் ஜெயலலிதா தொடக்கி வைத்தார்.
செப்டம்பர் 16 : போதை பொருள் வைத்திருந்தாக தொடரப்பட்ட வழக்கில் சுதாகரம் விடுவிக்கப்பட்டார்.
செப்டம்பர் 17 : நெல்லை, திருச்சி உள்பட நான்கு மாவட்ட மணல் குவாரிகளில் முறைகேடு நடைபெற்றதா என்று சிறப்பு குழு ஆய்வு நடத்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா உத்தரவு. இந்த ஆய்வு முடியும் வரை தமிழ்நாட்டில் தாது மணல் அள்ள தடை விதிக்கப்பட்டது.
ஈரான் சிறையில் கடந்த 9 மாதங்களாக அடைக்கப்பட்டிருந்த 16 தமிழக மீனவர்கள் விடுதலை.
செப்டம்பர் 21 : இந்திய சினிமா நூற்றாண்டு விழா சென்னையில் முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் தொடங்கியது. இந்த விழாவில் ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்பட 56 பேருக்கு சிறப்பு விருது வழங்கப்பட்டது.
செப்டம்பர் 24 : திரைத்துறையில் சாதனை படைத்த முதல் அமைச்சர் ஜெயலலிதாவுக்கு சிறப்பு விருதை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி வழங்கினர்.
செப்டம்பர் 28 : ஆரணி அருகே 300 அடி அழ ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுமி தேவி பரிதாபமாக உயிரிழந்தாள்.
அக்டோபர் 5 : சேலம் பா.ஜ கட்சி பிரமுகர் ஆடிட்டர் ரமேஸ், வேலூர் இந்து முன்னணி பிரமுகர் வெள்ளையப்பன் ஆகியோர் கொலை வழக்குகளில் போலீசாரால் தேடப்பட்டு வந்த தீவிரவாதி போலீஸ் பக்ருதின் சென்னையில் கைது.
கைதான போலீஸ் பக்ருதீன் தகவலின் பேரில் பா.ஜ.க தலைவர்களின் கொலை வழக்கில் தொடர்புடைய தீவிர வாதிகள் பிலால் மாலிக், பன்னா இஸ்மாயில் ஆகியோரை ஆந்திர மாநிலம் புத்தூரில் போலீசார் சுற்றிவளைத்து பிடித்தனர்.
அக்டோபர் 8 : நடிகர் எஸ்.வி.சேகர் பாரதீய ஜனதா கட்சியில் இணைத்தார்.
அக்டோபர் 9 : மணல் கொள்ளை தொடர்பாக நீதிமன்றத்தின் கண்டனத்தையொட்டி காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் சித்ரசேனனை இடைநீக்கம் செய்து அரசு உத்தரவிட்டது.
அக்டோபர் 17 :பிரபல சமூக சேவகி சரோஜினி வரதப்பன் சென்னையில் காலமானார்.
அக்டோபர் 18 : தூத்துக்குடி அருகே பிடிபட்ட அமெரிக்க ஆயுத கப்பலில் இருந்த 33 பேர் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டனர்.
அக்டோபர் 22 : கூடங்குளம் அணுமின் நிலையத்தில் மின் உற்பத்தி தொடங்கியதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. முதல் கட்டமாக தயாரான 160 மெகாவாட் மின்சாரம் மத்திய மின் தொகுப்புக்கு அனுப்பப்பட்டது.
அக்டோபர் 24 : இலங்கை காமன் வெல்த் மாநாட்டை புறக்கணிக்க வேண்டும் என்று தமிழக சட்டசபையில் முதல் அமைச்சர் ஜெயலலிதா கொண்டுவந்த தீர்மானம் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது.
அக்டோபர் 26 : கச்சத்தீவு அருகே நடுக்கடலில் மீன்பிடித்த ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் துப்பாக்கி சூடு.
அக்டோபர் 28 : 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் சி.பி.ஐ தரப்பின் 21 வது சாட்சியான தயாளு அம்மாளிடம் சென்னை பெருநகர தலைமை நீதிபதி 3 1/2 மணி நேரம் விசாரணை.
அக்டோபர் 30 : பரமக்குடி கலவர சம்பவத்தில் துப்பாக்கி சூடு நடத்தியது சரிதான் என்று சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்ட நீதிபதி சம்பத் அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
தமிழக அமைச்சரவையில் சுகாதாரத்துறை அமைச்சராக விஜய் பாஸ்கர் நியமிக்கப்பட்டார். இதுவரை அந்த இலாக்காவை கவனித்து வந்த கேசி வீரமணி பள்ளி கல்வித்துறை மந்திரியாக நியமனம் செய்யப்பட்டது.
அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் மன்னர் ஜவகர் ஓய்வு பெறுவதற்கு முதல் நாள் இடை நீக்கம் செய்யப்பட்டார்.
அக்டோபர் 31 : நடிகர் சந்தானம் உள்பட சென்னையில் சினிமா பிரபலங்களின் வீடுகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை.
நவம்பர் 1 : கும்பகோணம் அருகே உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 9 பேர் பலி.
நவம்பர் 6 : ரூ.14,600 கோடியில் செயல்படுத்தப்படும் மெட்ரோ ரயில் சோதனை ஓட்டத்தை கோயம்பேட்டில் முதல்வர் ஜெயலலிதா தொடக்கி வைத்தார்.
தஞ்சையில் இலங்கை இறுதிக்கட்ட போரை விளக்கும் வகையிலான முள்ளிவாய்க்கால் முற்றத்தை பழ.நெடுமாறன் திறந்து வைத்தார்.
நவம்பர் 7 : சென்னையில் முதல் முறையாக உலக சதுரங்க போட்டியை முதல்வர் ஜெயலலிதா தொடங்கிவைத்தார்.
நவம்பர் 10 : பிரபல எழுத்தாளர் புஷ்பா தங்கதுரை மரணம்.
நவம்பர் 11 : தமிழக நிதி அமைச்சர் ஒ.பன்னீர் செல்வத்துக்கு கூடுதலாக பொதுப்பணித்துறை வழங்கப்பட்டது.
நவம்பர் 12 : தமிழக சட்டசபை அவசர கூட்டம் நடந்தது. இதில் இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டை முற்றிலுமாக புறக்கணிக்க வேண்டும். இந்தியா சார்பில் யாரும் செல்லக்கூடாது என்று முதல்வர் ஜெயலலிதா கொண்டுவந்த தீர்மானம் நிறைவேறியது.
நவம்பர் 13 : தஞ்சையில் முள்ளிவாய்க்கால் முற்றம் சுவர் ஆக்கிரமிப்பு பூங்காவை நெடுஞ்சாலைத்துறையினர் இடித்தனர்.
நவம்பர் 25 : தமிழகத்தில் ஏழு மாவட்டங்களில் விவசாய நிலங்கள் வழியாக கெயில் நிறுவனம் எரிவாயு அமைக்க சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியது.
நவம்பர் 26 : கூடங்குளம் அணுமின் நிலையம் அருகே இடிந்த கரை சுனாமி குடியிருப்பில் உள்ள வீட்டில் குண்டு வெடித்ததில் 7 பேர் பலி
சென்னை காமராஜர் சாலையில் உள்ள நடிகர் திலகம் சிவாஜி கணேசன் சிலை போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பதாகவும் எனவே அதை அகற்ற வேண்டும் என்றும் கோரி தொடரப்பட்ட போது நல வழக்கில், சிலையை மெரீனா கடற்கரைக்கு முன்பு மாற்றி அமைத்தால் வாகன் போக்குவரத்துக்கு வசதியாக இருக்கும் என்று போலீஸ் தரப்பில் சென்னை உயர்நீதி மன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
நவம்பர் 27 : சங்கர ராமன் கொலை வழக்கில் ஜெயேந்திரர், விஜயேந்திரர் உள்பட 24 பேரை விருதலை செய்து புதுச்சேரி நீதிமன்றம் உத்தரவு.
நவம்பர் 30 : 1000 படங்களுக்கு மேல் நடனம் அமைத்த நடன இயக்குனர் ரகுராம் சென்னையில் மரணம்.
டிசம்பர் 4 : ஏற்காடு எம்.எல்.ஏ., பெருமாள் மறைவை அடுத்து, அங்கு டிச., 4ல் இடைத்தேர்தல் நடந்தது. அ.தி.மு.க., சார்பில் பெருமாள் மனைவி சரோஜா - தி.மு.க., சார்பில் மாறன் போட்டியிட்டனர். இதில் 78,116 ஓட்டுகள் வித்தியாசத்தில் அ.தி.மு.க.வின் சரோஜா வெற்றி பெற்றார்.
டிசம்பர் 5 : ஜப்பான் மன்னர் அஹிட்டா, ராணி மெஸிகோ ஆகியோர் சென்னை வந்தனர். அவர்களை சிறப்பிக்கும் விதமாக சிறப்பு தபால் தலை வெளியிடப்பட்டது.
டிசம்பர் 9 : தமிழக அமைச்சரவை 13வது முறையாக மாற்றம். அமைச்சராக இருந்த கே.வி.ராமலிங்கம் நீக்கப்பட்டு, புதிய அமைச்சராக ஆர்.பி.உதயகுமார் பொறுப்பேற்பு. இவர் ஏற்கனவே அமைச்சராக இருந்து நீக்கப்பட்டவர்.
டிசம்பர் 10 : நான்கு முறை அமைச்சர், 7 முறை எம்.ஏல்.ஏ.,வாக இருந்த பண்ருட்டி ராமச்சந்திரன், அரசியலில் இருந்து ஓய்வு பெற்றார். தே.மு.தி.க., ஆலந்தூர் தொகுதி எம்.எல்.ஏ., வாக இருந்தார். எம்.எல்.ஏ., மற்றும் கட்சிப்பதவி என அனைத்தையும் ராஜினாமா செய்தார்.
டிசம்பர் 11 : தமிழக அனைத்து மாவட்ட கலெக்டர்கள், போலீஸ் அதிகாரிகள் பங்கேற்கும் 3 நாள் மாநாடு முதல்வர் ஜெயலலிதா தலைமையில் நடந்தது.
டிசம்பர் 12 : ஆஸ்திரேலிய ஆயில் நிறுவனம், இந்தியாவில் தொழில் தொடங்குவதற்கு பரிந்துரை வழங்குவதற்காக, 11 எம்.பி.,க்கள் லஞ்சம் கேட்டதாக, "கோப்ரா போஸ்ட்' இணையதளம் செய்தி வெளியிட்டது. இதில் 2 பேர் அ.தி.மு.க., எம்.பி.,க்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
டிசம்பர் 20 : 2013ம் ஆண்டுக்கான "சாகித்ய அகாடமி' விருது அறிவிப்பு. தமிழில் "கொற்கை' என்ற புதினத்தை எழுதியதற்காக ஜோ.டி.குரூஸ்க்கு விருது.
டிசம்பர் 21 : தனிப்பொறுப்புடன் கூடிய மத்திய சுற்றுச்சூழல் இணை அமைச்சராக இருந்த, ஜெயந்தி நடராஜன் ராஜினாமா. அவரது துறை பெட்ரோலிய துறை அமைச்சர் வீரப்ப மொய்லியிடம் ஒப்படைப்பு.
டிசம்பர் 24 : தமிழக உள்துறை செயலர் உள்ளிட்ட 8 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
டிசம்பர் 28 : லட்சிய திராவிட முன்னேற்றக் கழகம் கட்சித் தலைவரும், நடிகர் மற்றும் இயக்குனரான டி.ராஜேந்தர் தமது கட்சியை கலைத்துவிட்டு, மீண்டும் தி.மு.க.வில் சேர்ந்தார்.
மேட்டுப்பாளையம் அருகே நடந்து வரும் கோவில் மற்றும் திருமடங்களுக்குச் சொந்தமான யானைகள் சிறப்பு நல வாழ்வு முகாமில் காட்டுயானை புகுந்து தாக்கியதில் இரு யானைகள் காயமடைந்தன.
டிசம்பர் 30 :குடிசைகளுக்கு இலவச சி.எப்.எல் பல்புகள் வழங்கும் திட்டத்தை தொடக்கி வைத்தார் முதல்வர் ஜெயலலிதா.
இயற்கை வேளாண்மை விஞ்ஞானி நம்மாழ்வார் மரணம்.
|
|||||
by Swathi on 31 Dec 2013 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|