LOGO
  முதல் பக்கம்    உடல்நலம்    பழங்கள்-தானியங்கள் Print Friendly and PDF

பாரம்பரிய அரிசி வகைகளும் அதன் அற்புதமான பயன்களும்!!

மாப்பிளை சம்பா :

உடலை பலபடுத்தும் மாமருந்து . திருமணதிற்கு தயாராகும் மணமகன்கள் தொடர்ச்சியாக 41 நாட்கள் இதன் நீராகாரத்தை உண்டு வந்தால் உடல் பலம் அதிகரிக்கும்.

கவுணி அரிசி :

புது மாப்பிள்ளைகான விருந்துணவு அரிசி. இதன் கஞ்சி குடித்தால் குதிங்கால் வலி நீங்கும் .

சிவப்பு கவுணி அரிசி :

புது மண தம்பதியர் உண்ண வேண்டிய அரிசி . இது ஒரு பலகார அரிசி. இட்லி,ஆப்பம், பணியாரம் செய்ய ஏதுவானது . குழந்தைகளுக்கு நோயெதிர்ப்பு சக்தி தரும் .கருவில் குழந்தை நல்ல ஆரோக்கியத்துடன் உருவாகும் .

சேலம் சன்னா :

கர்ப்பகாலத்தில் உண்ண வேண்டிய அரிசி . குழந்தை பேரு நன்முறையில் நடக்கும் . களைப்பில்லாமல் வேலை செய்ய உதவும் . இது நாய் கடி விஷத்தை முறிக்கும் .

பூங்காற் அரிசி :


மகப்பேறு காலங்களில் உண்ண வேண்டிய அரிசி . தாய்பால் சுரக்கும் .

கட்ட சம்பா அரிசி :

நோய் எதிர்ப்பு சக்தி தரும் .

சிங்கினி கார் அரிசி :

எல்லா விதமான நோயாளிகளும் உண்ண வேண்டிய அரிசி. உடல் நலம் பெற உதவும் .

இலுப்பைபூ சம்பா அரிசி :

சர்க்கரை நோய் வராமல் தடுக்கும். மூட்டு வலி,பக்க வாதம் போன்ற நோய்க்கான மருந்து . நரம்பு பிரச்சனையின் மருந்து .

காட்டுயானம் அரிசி :

இந்த அரிசியில் காஞ்சி வைத்து கறிவேப்பில்லை போட்டு மூடி வைத்து , மறுநாள் காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும் . இப்படி தொடர்ச்சியாக செய்தால் புற்றுநோயால் ஏற்படும் புண்கள் ஆறும் . இதுவே புற்று நோய்க்கு மருந்தாக இருக்க வேண்டும் என ஆய்வுகள் நடைபெற்று வருகிறது .

சூரகுருவை அரிசி :

நோய் எதிர்ப்பு சக்தி தரும் .

பனங்காட்டு குடவாழை அரிசி :

தொழிலாளர்களின் தோழன் இந்த அரிசி . அந்த அளவிற்கு நோய் எதிர்ப்பும், உடல் வலிமையையும் தரும் .

கருடன் சம்பா :

நோய் எதிர்ப்பு சக்தி தரும். சாப்பாடு மற்றும் பலகார அரிசி .

கருங்குறுவை அரிசி :

இதன் நெல் கரு நிறம். அரிசி செந்நிறம்  இது ஒரு மாமருந்து. இந்த அரிசியுடன் மூலிகை மருந்து சேர்த்தால் லேகியம் செய்ய முடியும் . அது யானைக்கால் நோய்க்கான மருந்து . குஷ்டதிற்க்கும் , விஷகடிக்கும் மாமருந்து. உடலை வலுவாக்கும் காயகல்ப சக்தி கொண்டது . இந்த அரிசி ஒரு பங்கும், தண்ணீர் மூன்று பங்கும் சேர்த்து மண்பானையில் ஊரவைத்து ஆறுமாதம் கழித்து எடுத்தால் பால் போல் இருக்கும் . இதற்க்கு 'அன்ன காடி 'என்று பெயர் .இது காலராவிர்க்கான மருந்து . இது கிரியா ஊக்கியாக உள்ளது .

கார் அரிசி :
    
சர்க்கரை நோய்க்கும், வாதம் சம்பந்தமான நோய்க்கும், கரப்பான் களுக்கும் மருந்தாகும்.

தங்க சம்பா :

இந்த அரிசியை தொடர்ந்து உணவிலும் , பலகாரத்திலும் சேர்த்து வந்தால் முகம் பொலிவுடன் ஜொலிக்கும். நோய் எதிர்ப்பு திறனும் கொடுக்கும்.

தூயமல்லி அரிசி :

மேல குறிப்பிட்ட எல்லா அரிசிகளும் சிவப்பரிசி . கட்ட சம்பா தவிர்த்து . தூய மல்லி அரிசியானது இன்னும் மல்லிகை போல் பளபள வென இருக்ககூடியது .மக்கள் எதிர்ப்பார்க்கும் எல்லா குணங்களும் கொண்ட ஒரு அரிசி . தெவிட்டாத , நோய் எதிர்ப்பு சக்தி தரும் அரிசி .

இந்த பாரம்பரிய அரிசி எதுவும் உரமோ, பூச்சி கொல்லி மருந்தோ இல்லாமலேயே வளரக்கூடியது. மேற்காணும் அரிசி வகைகள் தானாக வளரக்கூடியது . தானே எதிர்ப்பு திறனுடன் வளர்வதால் இந்த அரிசியை உன்னுபவர்களுக்கும் அதே எதிர்ப்பு சக்தியை கொடுக்கும் வல்லமை கொண்டது .

பாரம்பரிய அரிசி உண்போம் . ஆரோக்கியத்தை பேணி, ஆயுளை அதிகரிப்போம்.

(தொகுப்பாளர் ரா. பொன்னம்பலம் அவர்களின் 'நெல் அதிகாரம் 'என்ற புத்தகத்தில் இருந்து தொகுக்கப்பட்டது )

மேற்காணும் அரிசி வகைகள் அனைத்தும் , எல்லா இயற்கை உணவு அங்காடிகளில் கிடைக்கிறது . விலை சற்று அதிகம் . மருத்துவரிடம் கொடுப்பதில் பாதியை விவசாயிக்கும் கொடுக்கலாமே !

by Swathi   on 25 May 2017  17 Comments
Tags: Traditional rice varieties   Tamilnadu Traditional Rice Varieties   mapillai samba rice benefits   kavuni rice benefits   Garudan Samba Rice Benefits   karunguruvai rice benefits   மாப்பிளை சம்பா மருத்துவ பயன்கள்  

Disclaimer:
Medical Articles and Medical Tips are for information and knowledge purpose only. If you are on medication for any illness, we strongly advise you to continue the medication and follow your doctor advice. We do not advise you to stop the medication or change the dosage of medication without your Doctors’ advice. We are not a doctor or promoting doctors. We are not responsible for any side effects, reactions in your body directly or indirectly any other monetary or non-monetary losses incurred in using/trying the articles, videos, tips from this site. இந்தத் தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகள்,கட்டுரைகள், காணொலிகள் நோயின்றி வாழவும், வருமுன் காக்கவும் , இயற்கை மருத்துவ முறைகளை தெரிந்துகொள்ள மட்டுமே. நீங்கள் நோய்க்கு மருந்து சாப்பிடுபவராக இருந்தால் உங்கள் மருந்துகளை உடனே நிறுத்துவதோ, உங்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி குறைப்பதையோ இந்த தளத்தில் உள்ள தகவல்களை அடிப்படையாகக் கொண்டு செய்யவேண்டாம். இந்த தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகளை பயன்படுத்தி உங்களுக்கு ஏதும் பின்விளைவு ஏற்பட்டாலோ,மருத்துவப் பிரச்சினை ஏற்பட்டாலோ அதற்கு வலைத்தமிழ் பொறுப்பில்லை.

 தொடர்புடையவை-Related Articles
பாரம்பரிய அரிசி வகைகளும் அதன் அற்புதமான  பயன்களும்!! பாரம்பரிய அரிசி வகைகளும் அதன் அற்புதமான பயன்களும்!!
கருத்துகள்
25-Dec-2020 15:20:24 Gee Aarr said : Report Abuse
நீரிழிவு நோயைக் குணப்படுத்தும் பாரம்பரிய அரிசி தேவை
 
08-Oct-2020 17:13:42 அருள் நாதன் said : Report Abuse
பாரம்பரிய அரிசி வகைகள் விற்பனை நிலையம் வைத்துள்ளேன். கோவை மாவட்டம் சிங்காநல்லூர் பகுதியில் விற்பனை நிலையம் உள்ளது. எனக்கு பாரம்பிய அரிசி வகைகள் தேவை contact: 9842251901. செந்தூர் இயற்கை அங்காடி, கோவை.
 
13-Sep-2020 06:18:50 Balakumaran said : Report Abuse
அருபதாங்குறுவை மற்றும் கருங்குருவை விதை நெல் தேவை 9655181842
 
08-Sep-2020 12:09:48 கிருஷ்ணன் said : Report Abuse
காலம் மாறிவிட்டது.இனி பாரமபரிய உணவே ...நான் ஆர்கானிக் கடை ராசிபுரத்தில் வைத்துள்ளோம் உழவர் குழு சார்பாக..பாரம்பரிய அரிசி விற்பனைக்கு தேவை...cell.9842586819
 
22-Jun-2020 23:19:59 Sundar N said : Report Abuse
Thooyamalli rice vendum 9524262797
 
22-Jun-2020 05:28:19 ராஜசேகரன் said : Report Abuse
நாங்கள் அரிசி மண்டி வைத்துள்ளோம் நேரடி கொள்முதல் செய்ய விரும்புகிறேன் பாரம்பரிய அரிசியை மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு செல்ல என்னுகிறேன்
 
10-Jun-2020 18:37:45 குமரேசன் said : Report Abuse
சர்க்கரை நோய் வராமல் தடுக்கும் அரிசி சாப்பிட வேண்டும் அது தான் அனைத்து மக்களுக்கும் நல்லது
 
07-May-2020 16:20:21 சரண்யா said : Report Abuse
என்னிடம் கருங்குறுவை விதை நெல் உள்ளது. தேவைப்படுவோர் தொடர்பு கொள்ளவும் 9941955955
 
16-Mar-2020 09:00:13 வெங்கடேசன் said : Report Abuse
பாரம்பரிய அரிசி - பாரம்பரிய அரிசி தெவைபடுவோர் -9994032328
 
20-Nov-2019 09:44:16 Sebatin said : Report Abuse
Mappillai samba rice available Direct sale by farmer. contact 7094587101
 
10-Jun-2019 08:40:40 நந்தகுமார் said : Report Abuse
வணக்கம் பாரம்பரிய நெல் மற்றும் அரசி தேவை என்றால் தொடர்பு கொள்ளவும்.. அமுதகம் 9003232187 (புலனம்) திருஅண்ணா மலை மாவட்டம்..
 
23-Mar-2019 00:11:05 குமாரவேல் said : Report Abuse
பாரம்பரிய அரிசி, நெல் தேவை படுவோர் தொர்புக்கு : 9443027646
 
17-Feb-2019 06:18:10 Ayyappan said : Report Abuse
விதை நெல் சாகுபடி செய்ய தேவை தஞ்சாவூர் மாவட்டம்
 
16-Dec-2018 14:51:45 manogari said : Report Abuse
Car அரிசி எங்கு கிடைக்கும் .
 
21-Sep-2018 09:52:03 kumar said : Report Abuse
karu kulai adipu patri thangal sollungal, athavathu karu kulai sariyaga mara maruthuva kuripu thangal சொல்லுங்கள்
 
02-Apr-2018 07:32:52 சுகி ராசேந்திரன் said : Report Abuse
அன்பு நண்பரகளே, மிக அருமையான மிக்க பயனுள்ள பதிவுகள் இவை. நமது இன்றைய தலைமுறையில் அனைவருக்கும் பயனளிக்கும் பதிவு. அடுத்த தலைமுறைக்கும் அவசியம் கொண்டுசெல்லவேண்டும். நன்றி. சுகி ராசேந்திரன்
 
02-Apr-2018 07:05:28 சுகி ராசேந்திரன் said : Report Abuse
அன்பு நண்பரகளே, மிக அருமையான மிக்க பயனுள்ள பதிவுகள் இவை. நமது இன்றைய தலைமுறையில் அனைவருக்கும் பயனளிக்கும் பதிவு. அடுத்த தலைமுறைக்கும் அவசியம் கொண்டுசெல்லவேண்டும். நன்றி. சுகி ராசேந்திரன்
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.