|
|||||
குடிமைப்பணித் தேர்வில் தமிழக இளைஞர்கள் சாதனை!-நம்பிக்கையூட்டும் நான் முதல்வன் திட்டம்! |
|||||
![]() 2016-க்கு பிறகு மத்தியக் குடிமைப்பணித் தேர்வில் தமிழக இளைஞர்களின் எண்ணிக்கை படிப்படியாகக் குறைந்து வந்துள்ளது. 2021-ல், மட்டும் 27 தமிழர்கள் மட்டுமே மத்திய அரசின் குடிமைப் பணிகள் தேர்வில் வெற்றி பெற்றார்கள். இந்த நிலைமையை மாற்ற வேண்டுமென்ற நோக்கத்தோடு தமிழக அரசு, 2022-ம் ஆண்டு நான் முதல்வன் திட்டத்தை உருவாக்கியது. சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறையின்கீழ் செயல்படும் இந்தத் திட்டத்தின் குடிமைப்பணி பிரிவுக்காக முதல்வர் 10 கோடி ரூபாய் நிதியை ஒதுக்கீடு செய்து கொடுத்தார். இதன்மூலம் குடிமைப்பணி முதல்நிலைத் தேர்வுக்குத் தயாராகும் 1,000 மாணவர்களுக்கு மதிப்பீட்டுத் தேர்வின்மூலம் 10 மாதங்களுக்குத் தலா 7,500 ரூபாயும், பிரதானத் தேர்வுக்குத் தயாராகும் மாணவர்களுக்குத் தலா 25,000 ரூபாயும் ஊக்கத் தொகையாக வழங்கப்பட்டு வருகிறது. இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்ட முதல் ஆண்டிலேயே, (2023-2024) 47 தமிழக மாணவர்கள் குடிமைப்பணித் தேர்வில் வெற்றி பெற்றார்கள். முந்தைய ஆண்டுகளைவிடக் கிட்டத்தட்ட இது 30 சதவிகிதம் அதிகம். அதன் தொடர்ச்சியாக, இந்த ஆண்டு தமிழ்நாட்டிலிருந்து 57 மாணவர்கள் தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள். 57 மாணவர்களில் 50 மாணவர்கள் ‘நான் முதல்வன்’ திட்டத்தின்கீழ் ஊக்கத் தொகை பெற்றவர்கள். அவர்களில் 18 பேர் ‘நான் முதல்வன்’ உறைவிடப் பயிற்சித் திட்டத்தால் பயன் பெற்றவர்கள். இத்திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்ற சிவச்சந்திரன், தமிழ்நாடு அளவில் முதல் இடத்தையும், அகில இந்திய அளவில் 23-ஆவது இடத்தையும் பிடித்திருக்கின்றார். மோனிகா, அகில இந்திய அளவில் 39-ஆவது இடத்தைப் பிடித்துள்ளார். குடிமைப்பணி முதல்நிலை மற்றும் பிரதானத் தேர்வுகளில் வெற்றி பெற்றவர்கள் நேர்முகத் தேர்விற்காக புதுடெல்லி செல்ல வேண்டும். அப்படிச் செல்கின்ற தமிழக மாணவர்களின் பயிற்சி மற்றும் பயணச் செலவிற்காகத் தலா 50,000 ரூபாய் ஊக்கத் தொகை வழங்கப்படும் என்று இந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது. நான் முதல்வன் திட்டம் மாணவர்கள் மத்தியில் உற்சாகத்தையும் நம்பிக்கையையும் உருவாக்கியிருக்கிறது! 2016-க்கு பிறகு மத்தியக் குடிமைப்பணித் தேர்வில் தமிழக இளைஞர்களின் எண்ணிக்கை படிப்படியாகக் குறைந்து வந்துள்ளது. 2021-ல், மட்டும் 27 தமிழர்கள் மட்டுமே மத்திய அரசின் குடிமைப் பணிகள் தேர்வில் வெற்றி பெற்றார்கள். இந்த நிலைமையை மாற்ற வேண்டுமென்ற நோக்கத்தோடு தமிழக அரசு, 2013-ம் ஆண்டு நான் முதல்வன் திட்டத்தை உருவாக்கியது. சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறையின்கீழ் செயல்படும் இந்தத் திட்டத்தின் குடிமைப்பணி பிரிவுக்காக முதல்வர் 10 கோடி ரூபாய் நிதியை ஒதுக்கீடு செய்து கொடுத்தார். இதன்மூலம் குடிமைப்பணி முதல்நிலைத் தேர்வுக்குத் தயாராகும் 1,000 மாணவர்களுக்கு மதிப்பீட்டுத் தேர்வின்மூலம் 10 மாதங்களுக்குத் தலா 7,500 ரூபாயும், பிரதானத் தேர்வுக்குத் தயாராகும் மாணவர்களுக்குத் தலா 25,000 ரூபாயும் ஊக்கத் தொகையாக வழங்கப்பட்டு வருகிறது. இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்ட முதல் ஆண்டிலேயே, (2023-2024) 47 தமிழக மாணவர்கள் குடிமைப்பணித் தேர்வில் வெற்றி பெற்றார்கள். முந்தைய ஆண்டுகளைவிடக் கிட்டத்தட்ட இது 30 சதவிகிதம் அதிகம். அதன் தொடர்ச்சியாக, இந்த ஆண்டு தமிழ்நாட்டிலிருந்து 57 மாணவர்கள் தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள். 57 மாணவர்களில் 50 மாணவர்கள் ‘நான் முதல்வன்’ திட்டத்தின்கீழ் ஊக்கத் தொகை பெற்றவர்கள். அவர்களில் 18 பேர் ‘நான் முதல்வன்’ உறைவிடப் பயிற்சித் திட்டத்தால் பயன் பெற்றவர்கள். இத்திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்ற சிவச்சந்திரன், தமிழ்நாடு அளவில் முதல் இடத்தையும், அகில இந்திய அளவில் 23-ஆவது இடத்தையும் பிடித்திருக்கின்றார். மோனிகா, அகில இந்திய அளவில் 39-ஆவது இடத்தைப் பிடித்துள்ளார். குடிமைப்பணி முதல்நிலை மற்றும் பிரதானத் தேர்வுகளில் வெற்றி பெற்றவர்கள் நேர்முகத் தேர்விற்காக புதுடெல்லி செல்ல வேண்டும். அப்படிச் செல்கின்ற தமிழக மாணவர்களின் பயிற்சி மற்றும் பயணச் செலவிற்காகத் தலா 50,000 ரூபாய் ஊக்கத் தொகை வழங்கப்படும் என்று இந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது. நான் முதல்வன் திட்டம் மாணவர்கள் மத்தியில் உற்சாகத்தையும் நம்பிக்கையையும் உருவாக்கியிருக்கிறது! |
|||||
by hemavathi on 30 Apr 2025 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|