|
|||||
தமிழர்கள் உலகமெங்கும் சாதிக்கிறார்கள் - ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு பாராட்டு |
|||||
![]()
மத்திய அரசு பல்வேறு மாநிலங்களில் மும்மொழிக் கொள்கையை அமல்படுத்தியுள்ளது. ஆனால் மும்மொழிக் கொள்கையை அமல்படுத்தத் தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. ஆனால் மும்மொழிக் கொள்கை கல்வித் திட்டத்தை அறிமுகப்படுத்தினால் மட்டுமே தமிழகத்திற்கான கல்வி நிதியை வழங்க முடியும் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்தார்.
இதற்குத் தமிழகத்தில் கடும் எதிர்ப்பு எழுந்தது. பல்வேறு அரசியல் கட்சிகளும் இந்தித் திணிப்பை ஏற்க முடியாது எனவும் கருத்து தெரிவித்து வந்தன. பாஜக ஆளும் மாநிலங்கள் மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகள் மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. இந்நிலையில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றும் ஆந்திர மாநில முதல்வரும் தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு மும்மொழிக் கொள்கை குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
மேலும் தமிழக அரசையும் பாராட்டியுள்ளார் சந்திரபாபு நாயுடு. தமிழ்நாட்டிலிருந்து பலரும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்குச் செல்கிறார்கள். அவர்கள் ஆங்கிலம் கற்று மிகச் சிறப்பாகச் செயல்படுகின்றனர். வெளிநாடுகளில் உள்ள நிறுவனங்களில் உயர் பதவிகளில் இருக்கும் பலர் தமிழர்கள்தான். கூகுள் நிறுவன தலைமை அதிகாரி கூட ஒரு தமிழர்தான்.
ஐ.ஏ.எஸ் தேர்வுகளுக்கு பயிற்சி பெற டெல்லி வருபவர்களில் அந்திமானோர் தமிழர்கள்தான். பொதுவாக ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் என்றால் அது தமிழ்நாடுதான் என்ற நிலை உள்ளது. தமிழர்கள் உலகம் முழுவதும் சாதித்துக் கொண்டிருக்கிறார்கள்" எனப் புகழ்ந்துள்ளார் சந்திரபாபு நாயுடு. தமிழ்நாட்டில் இரு மொழிக் கொள்கை உள்ளபோதே தமிழர்கள் சாதித்துக் காட்டுகிறார்கள் எனவும் பாராட்டியுள்ளார் சந்திரபாபு நாயுடு.
"ஒருவருடன் தொடர்பு கொள்ள மட்டுமே மொழி தேவைப்படுகிறது. அறிவுசார்ந்த படிப்புகள் தாய்மொழியில் தான் கிடைக்கும். தெலுங்கு, தமிழ், கன்னடம் உள்ளிட்ட மொழிகள் கற்றவர்கள் உலகளவில் சிறந்து விளங்குகிறார்கள்" என்று கூறிய சந்திரபாபு நாயுடு, மொழி என்பது வேறு.. எத்தனை மொழிகளை வேண்டுமானாலும் படிக்கலாம் என்றும் தான் 10 மொழிகளைப் படிக்க ஊக்குவிக்க உள்ளதாகவும் தெரிவித்தார்.
|
|||||
by hemavathi on 07 Mar 2025 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|