|
||||||||
மதிப்பிற்குரிய தமிழ்ச்சங்க நிர்வாகிகளுக்கு, |
||||||||
![]() மதிப்பிற்குரிய தமிழ்ச்சங்க நிர்வாகிகளுக்கு, வணக்கம், திருக்குறள் பரவலாக்கத்தில் மிகப்பெரிய வரலாற்றுத் தேவையாக இதுவரை இருந்த உலக மொழிகளில் திருக்குறள் மொழிபெயர்ப்பு சார்ந்த கேள்விக்கு விடை கிடைத்துள்ளது. வலைத்தமிழ் நிறுவனர் ச.பார்த்தசாரதி முன்னெடுப்பில் அமெரிக்காவில் 2018 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட "உலக மொழிகளில் திருக்குறள் மொழிபெயர்ப்புத் தொகுப்புத் திட்டம்" ஆய்வுக்குழுவில் திரு.இளங்கோ தங்கவேலு (மிசௌரி) தலைமையில் முனைவர். N.V.K அஷ்ரப், திரு.சி இராஜேந்திரன்,IRS (ஓய்வு), திரு.செந்தில்செல்வன்(டெக்சாஸ்), திரு.அஜய்குமார் உள்ளிட்டோர் அங்கம் அங்கம் வகித்தனர். உலக அளவில் திருக்குறள் இதுவரை எத்தனை மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது? எத்தனை முறை ? யாரால்? எந்த ஆண்டு மொழிபெயர்க்கப்பட்டது? எந்தெந்த மொழிகளில் இன்னும் மொழிபெயர்த்தால் உலகின் அங்கீகரிக்கப்பட்ட அலுவல் மொழிகள் அனைத்திலும் திருக்குறளைக் கொண்டு சேர்த்த பெருமையை ஏற்படுத்தலாம்? என்ற கேள்விகளுக்கு விடைகண்டுள்ள இக்குழு அதன் இறுதி அறிக்கையை நூலாக 212 பக்கங்களில் , முழு வண்ணத்தில் "Thirukural Translations in World Languages" என்ற ஆங்கில நூலாக வெளியிட்டுள்ளது. இது மட்டுமல்லாமல், இத்திட்டத்தின் ஒரு பகுதியாக 50-க்கும் மேற்பட்ட நாடுகளைத் தொடர்புகொண்டு அந்தந்த நாடுகளின் மொழிகளில் திருக்குறள் வெளிவந்துள்ளதா என்பதை ஆராய்ந்து அவற்றைத் தமிழ்நாட்டிற்கு ஒரு பிரதி கொண்டுவந்து ஆவணப்படுத்துவதை வெற்றிகரமாகச் செய்துமுடிக்கப்பட்டுள்ளது. இத்தொகுப்பு இதுவரை உலகில் எங்கும் சிந்திக்காத முதல் முயற்சியாகும். மேலும், உலக நாடுகளில் வெளியிடப்பட்ட திருக்குறள் நூல்கள் தமிழ்நாட்டிலும், அந்தந்த மொழி பேசும் நாடுகளிலும் அச்சில் தடையின்றிக் கிடைக்கச் செய்ய "வலைத்தமிழ் பதிப்பகம்" என்ற ஓர் ஒருங்கிணைந்த பதிப்பகத்தையும் உருவாக்கியுள்ளது (https://www.estore.valaitamil.com/). முதல் கட்டம் வெற்றிகரமாக முடிந்ததைத் தொடர்ந்து, இரண்டாவது கட்டமாக "திருக்குறள் 2030" என்று அறிவித்து பல பரவலாக்கல் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. இதை அடுத்த கட்டத்திற்குக் கொண்டுசெல்ல இந்த வரலாற்றுப்பணியில் தங்கள் தமிழ்ச்சங்கம் கைகோர்த்து தங்களுக்கு வழங்கப்படும் இந்நூலைப் பெற்று உங்கள் பகுதியில் ஒரு அறிமுக நிகழ்ச்சி/சந்திப்பு நடத்தி திருக்குறள் மொழிபெயர்ப்புகள், பரவலாக்கல், தேசிய நூல் கோரிக்கை, யுனெசுகோ அங்கீகாரம் குறித்து உங்கள் சங்க உறுப்பினர்கள் பேசவும், உங்களால் முடிந்த ஓரிரு புதிய மொழிபெயர்ப்புகளுக்குத் துணைநிற்கவும் அன்புடன் கோருகிறோம். மேலும், உலகத் திருக்குறள் முற்றோதல் இயக்கம் உங்கள் தமிழ்ச்சங்கத்திற்கு "திருக்குறள் முற்றோதல்" பயிற்சியை வழங்கத் தயாராக உள்ளது. பயன்படுத்தி திருக்குறள் மக்களிடம் பரவ துணைநிற்கவும். மேலும் விவரங்களுக்குத் தொடர்புகொள்ளவும். பேரன்புடன், |
||||||||
by Swathi on 21 Nov 2024 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|