|
||||||||
வட அமெரிக்கத் தமிழ் எழுத்தாளர்கள் மன்றம் - கூடல் 5 சிறப்பாக நடைபெற்றது |
||||||||
வட அமெரிக்கத் தமிழ் எழுத்தாளர்கள் ஐந்தாவது கூடல் வலைத்தமிழ் வலைத்தளம் மற்றும் வட அமெரிக்கத் தமிழ் எழுத்தாளர்கள் மன்றம் சேர்ந்து ஜூலை 28-ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை அன்று நடத்தியது. வட அமெரிக்கத் தமிழ் எழுத்தாளர்களை அடையாளம் கண்டு ஒருங்கிணைக்கும் முயற்சியில் வலைத்தமிழ் ச. பார்த்தசாரதி, ஆரூர் பாஸ்கர், கவிஞர் மருதயாழினி மற்றும் சுபா காரைக்குடி ஆகியோரின் அர்ப்பணிப்புக்களின் மூலம் தொடர்கின்றன. கனடா, ஐக்கிய அமெரிக்கா, மெக்சிகோ நாடுகளில் உள்ள தமிழ் எழுத்தாளர்களை அடையாளம் காண வட அமெரிக்க தமிழ் எழுத்தாளர்கள் மன்றம் ஒன்றை நிறுவி வட அமெரிக்கர்களின் தமிழ் உணர்வைத் தூண்டி எழுத்தாளர்களாக அவதானிக்க எல்லா முனைப்புக்களையும் நிகழ்த்தி ஊக்குவிக்கிறனர். ஐந்தாவது கூடல் நிகழ்ச்சியில் முனைவர் கோ. ஒளிவண்ணன், எழுத்தாளர், பதிப்பாளர், ஏமாரால்டு பதிப்பகம் சென்னை சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். ஒரு எழுத்தாளராகா எப்படி தம்மைச் செழுமை படுத்திக் கொள்வது, இன்றைய வாசிப்பாளர்களைக் கவர்வது எப்படி, செயற்கை நுண்ணறிவு உதவிக் கொண்டு புத்தகத்தை வாசிப்பது எப்படி என்று முதல் தலைமுறை, சென்ற தலைமுறை வரும் தலைமுறை அனைவருக்கும் பிடித்தமான எழுத்தாளராக ஆவது எப்படி என்று நீண்ட உரை ஆற்றினார். வட அமெரிக்கத் தமிழ் எழுத்தாளர்கள் மன்றத்தில் இம்முறை ஆறு தமிழ் எழுத்தாளர்கள் சேர்க்கப்பட்டனர் அவர்களும் உரை ஆற்றினார். அதன் விவரம் இங்கே:
முனைவர் சித்ரா மகேஷ் , Texas தமிழை ஏன் படிக்க வேண்டும்? அதை தாய்ப் பால் போல் குடிக்க வேண்டும்! என்று கூறி தன் உரையை ஆரம்பித்தார். நிரையப் படியுங்கள் ஒரு பக்கமாவது எழுதுங்கள் என்பதில் நம்பிக்கை வைத்திருக்கிறார். வேள்ப்பாரி நூலிற்குப் பிழை திருத்தம் செய்திருக்கிறார்.
நறுமுகை, மதிவதனி சாந்தி-ஈஸ்வரன், Ohio புத்தக வாசிப்பு என்பதின் அவசியம் தான் படித்த புத்தகத்தைப் பற்றி பிறரிடம் விவாதிக்க வேண்டும் என்ற ஆவல் உள்ளவர். "நறுமுகை" எனும் பெயரில் எழுதும் மதிவதனி சாந்தி-ஈஸ்வரன்-க்கு சிறு வயதில் ஏற்பட்ட வாசிப்பு பழக்கம் எழுத்தாக மாறி இன்று இவரை இயக்கிக் கொண்டிருக்கிறது. அந்த வாசிப்பில் விரிந்த கற்பனைகளும், கதாபாத்திரங்களுக்கும் இவருடைய எழுத்துப் பயணத்துத்திக்கு உரம் சேர்த்ர்துத்க் கொண்டிருக்கின்றன. 2010-ம் ஆண்டு ‘விகடன் மாணவர்’-ர் இல் இருந்த இவர் கடந்த 2019-ம் ஆண்டிலிருந்து வலைத்தளத்தில் சிறுவர்களை மையப்படுத்திக் கதைகளையும், புதினங்களும் எழுதி வருகிறார்.ர் 2020-ம் ஆண்டிலிருந்து கொலம்பஸ் தமிழ்ச் சங்கம் நடத்தி வரும் ‘சாரல்’ காலாண்டு மின் இதழின் ஆசிரியர் குழுவில் ஒரு அங்கமாக இருக்கிறார்.
முருகவேலு வைத்தியநாதன் , Maryland தமிழில் எழுதவேண்டும் என்ற உணர்வு இருந்தாலே போதும் நீங்கள் ஒரு எழுத்தாளராக ஆகலாம் என்று கூறுகிறார் முருகு. முருகவேலு வைத்தியநாதன், "புதுவை முருகு" என்றும் அழைக்கப்படுகிறார். பாண்டிச்சேரி பொறியியல் கல்லூரியில் தொழில்நுட்ப இளங்கலை படிப்பையும், கனடாவின் டொராண்டோவில் முதுநிலைப் பொறியியல் படிப்பையும் முடித்துள்ளார். அவர் இந்தியா, கனடா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளில் இயந்திரப் பொறியாளராகவும், தரவு பகுப்பாய்வாளராகவும், தகவல் தொழில்நுட்ப வல்லுநராகவும், தரவு அறிவியலாளராகவும், தொழில் ஆலோசகராகவும் மற்றும் மொழியியல் ஆர்வலராகவும் அனுபவம் பெற்றவர். முருகு தமிழ் மொழி, தமிழ்ப் பண்பாடு, மனித நலன் ஆகியவற்றில் மிகுந்த ஈடுபாடு கொண்டு தமிழ் அமைப்புகளுக்குத் தன்னார்வத் தொண்டும் செய்து வருகிறார். முருகு சைக்கிள் ஓட்டுவதில் அதீத ஆர்வம் உடையவர், மேலும், அமெரிக்காவில் அவரது நண்பர்களுடன் சேர்ந்து சைக்கிள் ஓட்டிகளை ஊக்கப்படுத்த "Fun Cycle Riders" என்ற ஒரு தொண்டு அமைப்பை நிறுவி அமெரிக்காவின் கிழக்கு மாகாணங்களில் உள்ள சைக்கிள் ஓடு பாதைகளில் சைக்கிள் ஓட்டுகிறார். மேரிலாந்தின் எலிகாட் சிட்டி தமிழ்ப்பள்ளியில் ஆசிரியராக இருந்தபோது மீண்டும் தமிழில் எழுதும் முயற்சியைத் தொடங்கினார். சிறு கவிதைகள், கட்டுரைகள் என எழுதத் தொடங்கியவர் இப்பொழுது தமிழ் ஊடகங்களிலும் எழுதுகிறார். தினமலர் நாளிதழின் மேரிலாந்து, அமெரிக்கச் சிறப்பு நிருபராகவும் உள்ளார். மேலும் வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச் சங்க தென்றல் முல்லை ஆசிரியர் குழுவிலும் இடம் பெற்றுள்ளார். அவர் முதன் முதலில் எழுதிய "தயங்குவது ஏன் இன்னும்?" என்ற புத்தகம் பாரதி புத்தகாலயம் பதிப்பகத்தார் மூலம் சென்ற ஆண்டு நவம்பர் மாதம் வெளியிடப்பட்டது. மேரிலாந்து ஹோவர்ட் மாவட்டத்தில் உள்ள அனைத்து நூலகங்களிலும் இப்புத்தகம் இடம் பெற்றுள்ளது.
நெல்லை அன்புடன் ஆனந்தி , Michigan செல்லுமிடம் எதுவாயினும் நாம் வெல்லும் மொழி தமிழாக இருக்கட்டும் என்று கூறி தன் உரையை ஆரம்பித்தார். தமிழ் ஆர்வலர், கவிதாயினி, எழுத்தாளர், தன்னார்வல தமிழ் ஆசிரியர், நிகழ்ச்சித் தொகுப்பாளர் / தயாரிப்பாளர், கவியரங்கத் தலைமை, கட்டுரையாளர், பட்டிமன்ற பேச்சாளர். கவிதை நூல்கள்: 10 சிறார் இலக்கியம்: 4 கட்டுரை: 1 தொகுத்த நூல்கள்: 8 பங்கேற்ற தொகுப்பு நூல்கள்: 20 மரபுக் கவிதைகள், புதுக்கவிதைகள் & கட்டுரைகளை, கடந்த 15 வருடங்களாக எழுதி வருகிறேன். அன்புப்பாலம், கதம்பம், தென்றல், முத்துக்கமலம், வளரி, வல்லினச் சிறகுகள், இனிய உதயம், மக்கள் முரசு, தாரகை, நெல்லை டைம்ஸ், ஆனந்த சந்திரிகை, ஆக்கம், தமிழ்ப்பல்லவி, கொக்கரக்கோ, சித்திரகுப்தன் ஆகிய இதழ்களில் படைப்புகள் வெளிவருகின்றன.
சுகந்தி நாடார் ,Pennsylvania தன்னை நம்பா விட்டாலும் தமிழை நம்பு! சுகந்தி நாடார் ஒரு பாடத்திட்ட வடிவமைப்பாளர், வழக்கறிஞர், எழுத்தாளர் மற்றும் கருத்தோவியர், கடந்த முப்பது ஆண்டுகளாக அமெரிக்காவில் வசித்து வருகிறார். இவர் பென்சில்வேனியாவின் மெக்கானிக்ஸ்பர்க்ர் க் நகரில் தனது குடும்பத்துடன் வசித்துத்வருகிறார். இவரும் இவரது கணவர் வெங்கடேஷ் நாடாரும் தமிழ் வரம்பற்ற எல்.எல்.சியை இணையத்தில் கற்பிப்பதற்கும் வளங்களை உருவாக்குவதற்கும் நிறுவினர்.ர் தமிழ் மீதும், கல்வித் தொழில்நுட்பத்தின் மீதும் அவர் கொண்டிருந்த அக்கறை காரணமாக, தமிழ்நாட்டுத் தமிழ்ப் பேராசிரியர்களுக்கு கல்வியியல் தொழில்நுட்பங்களில் பயிற்சி அளிக்கத் தொடங்கினார். ர் தமிழில். இவர் தமிழ்க் கணித்துத்றையில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். ர் தமிழ் மொழி மீதான அவரது அன்பும் அர்ப்ர்ப்ணிப்பும் அவரை ஒரு எழுத்தாளராகவும் கருத்தோவியமாகவும் மாற்ற உதவியது. சட்டம் மீதான அவரது ஆர்வர் ம் இந்தியாவில் சட்டம் பயிற்சி செய்ய இந்தியா திரும்ப வழிவகுத்தது. ஹாரிஸ்பர்க்ர்க் பல்கலைக்கழகத்தில் முதுகலை மற்றும் வாசிங்டன் பல்கலைக்கழகத்தில் எல்.எல்.எம் பெற்ற பிறகு, தன் கணவரின் நிறுவனமான தமிழ் அநிதம் என்று தமிழில் அழைக்கப்படும் Tamilunlimited Mechanicsburgல் உள்ள பதிப்பகம் வழி தமிழ் பரப்புரைப் பணி செய்து வருகிறார்.
மேனகா நரேஷ் , New Jersey அமுதே தமிழை அழகிய மொழியே எனதுயிரே என்பது அவரின் தாரக மந்திரம். இயன்முறை மருத்துவத்துறையில் பட்டம் பெற்றிருக்கிறார். உளவியல் துறையில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்கிறார். கர்நாடக சங்கீதத்தில் முதுகலை பட்டப்படிப்பு படித்துத்க்கொக்கொண்டிருக்கிறார். இசையின் மீதுள்ள நாட்டம் காரணமாக “சாயி குருகுலம்” என்னும் இசைப்பள்ளியை நியூஜெர்சியில் நடத்திவருகிறார்.
வட அமெரிக்கத் தமிழ் எழுத்தாளர்கள் ஐந்தாவது கூடல் இனிதே நடைபெற்றது. வட அமெரிக்கத் தமிழ் எழுத்தாளர்கள் முழு விவரம்: https://www.valaitamil.com/literature_tamil-writers
நீங்கள் வட அமெரிக்காவில் வாழும் நபராக தமிழ் எழுத்தாளர் ஆவதற்கு ஊக்கம் வேண்டும் என்றால் தொடர்பு கொள்ளவும் http://tamilwritersna.org/
– முருகவேலு வைத்தியநாதன்
|
||||||||
by Swathi on 29 Jul 2024 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|