|
||||||||
அமெரிக்கக் கச்சா எண்ணெய்க்கு 10% , நிலக்கரிக்கு 15% வரி - சீனா பதிலடி |
||||||||
அமெரிக்கக் கச்சா எண்ணெய்க்கு 10% வரியும் நிலக்கரிக்கு 15% சதவீதம் வரியும் விதித்துள்ளது சீனா அரசு. சீன பொருட்களுக்கு அமெரிக்கா வரிவிதித்ததற்குப் பதிலடியாகச் சீனா இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
அமெரிக்க அதிபராக டொனால்ட் ட்ரம்ப் கடந்த மாதம் பொறுப்பேற்றார். இதனை தொடர்ந்து பிறப்பின் அடிப்படையில் அளிக்கப்படும் குடியுரிமையை ரத்து செய்வது, சட்டவிரோதக் குடியேற்றவாசிகளை நாட்டைவிட்டு வெளியேற்றுவது, அண்டை நாடான கனடா மற்றும் மெக்ஸிகோவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்கள் மீது 25 சதவீதம் கூடுதல் வரி விதிப்பது, சீன இறக்குமதி பொருள்கள் மீது கூடுதலாக 10 சதவீத வரி எனப் பல உத்தரவுகளை பிறபித்தார். அமெரிக்க நலன்களைப் பாதுகாப்பதற்காக இந்த வரி விதிப்பை மேற்கொள்வதாக ட்ரம்ப் கூறினார்.
இதனை அடுத்து சீனா மீது அமெரிக்க அரசு கூடுதல் வரி விதிப்பு நடவடிக்கைகளை எடுத்துள்ள நிலையில், அதற்குப் பதிலடியாகச் சீன அரசும் வர்த்தகக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. அதன்படி, அமெரிக்காவிலிருந்து இறக்குமதியாகும் நிலக்கரி, இயற்கை எரிவாயு பொருள்கள் மீது 15 சதவீத வரியும், கச்சா எண்ணெய், வேளாண் உபகரணங்கள், குறிப்பிட்ட ரக வாகனங்கள் உள்பட இன்னும் சில பொருள்கள் மீது 10 சதவீத வரியும் கூடுதலாக விதிக்க முடிவெடுத்துள்ளதாகச் சீன அரசு தெரிவித்துள்ளது. இந்த வரி விதிப்பு நடவடிக்கைகளைப் பிப்ரவரி 10-ஆம் தேதி முதல் அமல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|
||||||||
by hemavathi on 04 Feb 2025 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|