LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

இன்றைய சினிமாவின் நிலை படுமோசமாக இருக்கிறது : ராதிகா சரத்குமார் !!

இன்றைய தமிழ் சினிமாவின் நிலை படுமோசமாக இருப்பதாக நடிகை ராதிகா சரத்குமார் கூறியுள்ளார்.

 

ஸ்ரீப்ரியா இயக்கியுள்ள மாலினி 22 பாளையங்கோட்டை படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில், நடிகர் கமலஹாசன், விஜய் சேதுபதி, சூர்யா, இயக்குனர் கே.பாலச்சந்தர், நடிகைகள் நித்யா மேனன், ராதிகா சரத்குமார், பாடலாசிரியர் நா.முத்துக்குமார் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். 

 

விழாவில் நடிகை ராதிகா சரத்குமார் பேசும்போது, இப்படத்தின் மூலம் இயக்குனராக அவதாரம் எடுத்திருக்கும் ஸ்ரீப்ரியாவும் நானும் குழந்தை பருவம் முதலே நண்பர்கள். சினிமாவில் அவர் ஒரு நடிகையாக நன்றாக நடித்திருந்தார். தற்போது இந்த படத்தின் மூலம் இயக்குனராக களமிறங்கியிருக்கிறார். தமிழ் சினிமாவில் ஒரு புத்திசாலி பெண் என்று அவரை குறிப்பிடலாம். ஆனால், அவர் அதையெல்லாம் காட்டிக் கொள்ளமாட்டார். ஒரு பெண்ணாக இருந்து சினிமாவில் செலவு பண்ணுவது என்பது ரொம்பவும் கஷ்டம். அதை நானும் அனுபவித்திருக்கிறேன். இப்போது ஸ்ரீப்ரியாவும் அதையெல்லாம் சமாளித்து, சமூக உணர்வோடு இந்த படத்தைக் கொடுத்திருக்கிறார். இன்று வரும் பெரும்பாலான படங்களில் டாஸ்மாக் காட்சிகளும், ஹீரோ காலையில் எழுந்ததும் எந்த பெண்ணை சைட் அடிப்பது என்று பேசுவது, அப்பாவை மகன் இழிவாக பேசுவது போன்ற வசனங்கள் நிறைந்த படங்களாகவே வருகின்றன. முன்பெல்லாம் சில்க் ஸ்மிதா பாட்டு ஒன்று கட்டாயம் இருக்க வேண்டும் என தமிழ் சினிமாவில் சொல்வார்கள். இப்போது அது டாஸ்மாக் காட்சியாக வருகிறது. டாஸ்மாக்கில் குடிக்கிற மாதிரி ஒரு காட்சியாக வைக்கவேண்டும் என்பது விதியாகிவிட்டது. அவற்றையும் தமிழ் ரசிகர்கள் ரசிக்கிறார்கள். இருந்தாலும், வித்தியாசமான படங்களும் அவ்வப்போது வெளிவந்து கொண்டுதான் இருக்கின்றன என ராதிகா பேசினார். 

Balachander and Sripriya in Malini 22 Palayamkottai Audio Launch
by Swathi   on 09 Nov 2013  1 Comments
Tags: Radhika Sarathkumar   Malini 22 Palayamkottai   Tasmac   Tamil Cinema   ராதிகா சரத்குமார்   டாஸ்மாக்     
 தொடர்புடையவை-Related Articles
தரம் குறைந்து வரும் தமிழ்த் திரை நகைச்சுவை ! தரம் குறைந்து வரும் தமிழ்த் திரை நகைச்சுவை !
தமிழ் சினிமாவில் மீண்டும் காமெடி சீசன் தொடங்குமா.... தமிழ் சினிமாவில் மீண்டும் காமெடி சீசன் தொடங்குமா....
விஜய் படத்தில் ராதிகா.... விஜய் படத்தில் ராதிகா....
தொடர்ந்து முதலிடத்தில் இருக்கும் நயன்தாரா !! தொடர்ந்து முதலிடத்தில் இருக்கும் நயன்தாரா !!
ஒரே படத்தில் பல கதை - இது தான் தமிழ் சினிமாவின் புதிய ட்ரென்ட் !! ஒரே படத்தில் பல கதை - இது தான் தமிழ் சினிமாவின் புதிய ட்ரென்ட் !!
3 படத்தில் நடிகர், ஒரு படத்தில் இயக்குனர் - இது பாரதிராஜாவின் தற்போதைய நிலவரம் !! 3 படத்தில் நடிகர், ஒரு படத்தில் இயக்குனர் - இது பாரதிராஜாவின் தற்போதைய நிலவரம் !!
சமூக ஆர்வலர் ஜாகீர் உசேன் டாஸ்மாக் மதுக்கடைக்கு எதிரான போராட்டத்தின்போது தாக்கப்பட்டார் சமூக ஆர்வலர் ஜாகீர் உசேன் டாஸ்மாக் மதுக்கடைக்கு எதிரான போராட்டத்தின்போது தாக்கப்பட்டார்
டாஸ்மாக்குக்கு எதிராக உருவாகி வரும் தமிழ் படம் !! டாஸ்மாக்குக்கு எதிராக உருவாகி வரும் தமிழ் படம் !!
கருத்துகள்
22-Feb-2014 03:01:06 eennocent said : Report Abuse
முதலில் ராதிகா சீரியல் மூலம் நல்ல கதை சொல்லட்டும்,தானே இயக்கும் சீரியலில் நல்ல விழிப்புணர்வை முக்கியமாக பெண்களுக்கு கொடுக்கவில்லை, தான் மட்டுமே எல்லாம் அறிந்தவராக நடிப்பார் மற்ற பெண்கள், எதற்கும் பயனல்லாதவர் போல் சித்தரிக்கப்படுகிறார்கள். இத்தனைக்கும் திறமையான்,நல்ல நடிகை. இவருடன்,குஷ்பூ,ரம்யா கிருஷ்ணன் கூட அப்படியே. முதலில் இவர்கள் மாற்றத்தை கொண்டு வரட்டும்.
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.