பள்ளி ஆசிரியர்கள் வருடத்தில் 365 நாட்களில், 42 நாட்கள் மட்டுமே மாணவர்களுக்கு கல்வி கற்பிக்க பயன்படுத்துகின்றனர். அதாவது 365 நாட்களில் சட்டப்படி 220 நாட்கள் மாணவர்களுக்கு கல்வி கற்பிக்க வேண்டிய இவர்கள் 19% மட்டுமே அதாவது 42 நாட்கள் மட்டுமே கல்வி கற்பித்துள்ளனர். மீதமுள்ள நாட்களை ஆசிரியர்கள் மேல் வருமானம் பெற்றுக்கொண்டு தேர்தல் பணியாற்றுவதற்கும், சர்வே எடுப்பதற்கும், போலியோவிற்கு சொட்டு மருந்து கொடுப்பது பற்றிய விளம்பரம், மதிய உணவு தொடர்பான விசயங்களை பதிவிடுவதற்கும் செலவழிக்கின்றனராம்.. இது போன்ற கல்வி அல்லாத செயல்பாடுகளில் பெரும்பாலும் ஈடுபடுவதால் தற்போதைய கல்வியின் தரம் மிகவும் குறைந்துவிட்டதாக மனிதவள மேம்பாட்டுத் துறையின் கீழ் இயங்கும் தேசிய கல்வி திட்டமிடல் மற்றும் நிர்வாகத் துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. ஆசிரியப் பணியை விடுத்து இவர்கள் கிராம நிர்வாக அதிகாரிகளாக வேறு பணியாற்றியுள்ளார்களாம்..
|