LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    தமிழ் மொழி - மரபு Print Friendly and PDF
- தமிழ் இலக்கணம் (Tamil Grammar )

சென்னையில் தூய தமிழ் பேசுவோர் சங்கம் இனிதே தொடங்கியது

நேற்று ஞாயிறு மாலை, தூய தமிழ் பேசுவோர் சங்கத்திற்கு முகநூல் நட்புகள் வந்திருந்தனர். பலரும் வருவதற்கு விருப்பம் தெரிவித்து இருந்தாலும் சிலர் மட்டுமே நேரில் வரும் வாய்ப்பை பெற்றனர். வந்திருந்த அனைவரும் தூய தமிழில் பேச எந்த வித பயிற்சியும் இல்லாதவர்கள் ஆனால் தூய தமிழில் பேச வேண்டும் என்ற தீராத வேட்கை உடையவராக இருந்தனர். அவர்களுக்கு சில போட்டிகள் வைத்து தூய தமிழில் பேச ஊக்கம் கொடுக்கப்பட்டது. 


முதல் சுற்று அறிமுக சுற்று: தங்களை தாங்களே இரண்டு நிமிடத்திற்குள் தூய தமிழில் அறிமுகம் செய்து கொள்ள வேண்டும். இரண்டாம் சுற்று : தமிழில் கலந்துள்ள ஆங்கில சொற்களுக்கு இணையான தமிழ் சொற்களை கண்டறிய வேண்டும்.  மூன்றாம் சுற்று : தமிழ் கலந்துள்ள வடமொழி சொற்களுக்கு இணையான தமிழ் சொற்களை கண்டறிய வேண்டும் . நான்காம் சுற்று சூழ்நிலை சுற்று : இரு நபர்களுக்கு ஒரு சூழ்நிலையை உருவாக்கிக் கொடுத்து அந்த சூழ்நிலையில் அவர்கள் தூய தமிழில் உரையாட வேண்டும். இதில் ஒருவர் அலைப்பேசி வாடிக்கையாளர் சேவைக்கு தொடர்பு கொண்டு தன்னுடைய அலைபேசி எண் அட்டை தொலைந்து போய்விட்டது என்று புகார் அளிக்கிறார். இன்னொருவர் புகார் பெரும் வாடிக்கையாளர் சேவை முகவராக நடிக்கிறார். இவர்கள் இருவரும் சிறப்பாக தூய தமிழில் பேசியதற்கு பரிசு பெற்றனர். 


நிகழ்ச்சியின் முடிவில் சிறப்பாக தூய தமிழில் பேசியதற்கு திரு.சுந்தர் மூவை, மருத்துவர் செந்தமிழ்ச்செல்வன் மற்றும் ஆசைத் தம்பி ஆகியோர் தமிழர் மென் ஆடைகளை பரிசாக பெற்றனர். தூய தமிழ் பேசுவோர் சங்கம் மீண்டும் அடுத்த மாதம் கூடுவதாக உள்ளது. வருகை தந்த அனைவரும் தங்களால் இயன்ற வரை இனி பொதுவில் தூய தமிழில் பேச உள்ளதாக உறுதி அளித்தனர். தூய தமிழில் பேசுவோம் , தமிழ் மொழியை காப்போம்.
நன்றி:இராசகுமார் பழனிசாமி

தமிழ்-1
by Swathi   on 06 Jan 2014  0 Comments
Tags: Pure Tamil   Pure Tamil Speakers   Pure Tamil Speakers Organization   Nalla Thamil   Tamil   Thamil   Thamizh  
 தொடர்புடையவை-Related Articles
தூர் தூர்
கண் பார்வை குறைபாடுகளை நீக்கும் நேத்ரா | Nethra for cure all your Eye problems கண் பார்வை குறைபாடுகளை நீக்கும் நேத்ரா | Nethra for cure all your Eye problems
இந்த வார நட்சத்திர பலன்கள் (24 – 06 – 2018 முதல் 30 - 06 – 2018 வரை) இந்த வார நட்சத்திர பலன்கள் (24 – 06 – 2018 முதல் 30 - 06 – 2018 வரை)
தற்சாற்புப் பொருளாதாரம்.. தற்சாற்புப் பொருளாதாரம்..
நட்சத்திர வார பலன்கள் (27 – 05 – 2018 முதல் 02 – 06  – 2018 வரை) நட்சத்திர வார பலன்கள் (27 – 05 – 2018 முதல் 02 – 06 – 2018 வரை)
தமிழ் சினிமாவில் தற்போது விவசாய சீசன்... தமிழ் சினிமாவில் தற்போது விவசாய சீசன்...
தமிழ் இலக்கியங்களில் தமிழ் இசைக் கருவிகள் தமிழ் இலக்கியங்களில் தமிழ் இசைக் கருவிகள்
தமிழ் ஸ்டுடியோ - பாலுமகேந்திரா விருது 2018 - (குறும்படங்களுக்கு மட்டும்) தமிழ் ஸ்டுடியோ - பாலுமகேந்திரா விருது 2018 - (குறும்படங்களுக்கு மட்டும்)
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.