தமிழகம் உலகின் தலைசிறந்த ஆன்மீக பூமியாகத் திகழ்வதற்க்குக் காரணம் நம்மிடம் உள்ள தலைசிறந்த கோயில்களாகும். இன்றும் பல ஊர்களுக்கு கோவில்களே அடையாளங்களாக உள்ளது. நம்மிடம் இல்லாத தெய்வங்கள் இல்லை எனும் அளவில் தமிழன் கடவுளை அந்நியப்படுத்தி அதை நமக்கு அப்பாற்பட்ட சக்தியாக மட்டும் பார்க்காமல், கருப்பன்ன சாமியாக, காவல் தெய்வமாக, சொக்காயி அம்மனாக தன் வாழ்வின் ஒரு அங்கமாக வாழ்ந்துவருவதை காண்கிறோம்.
மதுரை, சிதம்பரம், கும்பகோணம், திருக்கடையூர், வைத்தீஸ்வரன்கோவில் என திரும்பிய இடம் எல்லாம் தமிழன் கோயிலைக் கட்டி நம் வருங்காலத் தலைமுறையின் ஆன்மீக வாழ்விற்கு அடித்தளம் அமைத்துள்ளான். தமிழகத்தில் உள்ள கோயில்களை, கடவுள்களை, மாவட்ட வாரியாக தொகுத்து வழங்கும் சிறு முயற்சியே இது.
|