|
|||||
தமிழ்நாட்டு வணிகர்களின் தலைவர் த.வெள்ளையன் அவர்கள் மறைவுக்கு அஞ்சலி |
|||||
![]() தமிழ்நாட்டு வணிகர்களின் தலைவர் த.வெள்ளையன் அவர்கள் மறைவுக்கு அஞ்சலி செலுத்துவோம்...
தமிழ்நாட்டு வணிகர்களின் தலைவர் த.வெள்ளையன்(வயது 76) உடல்நலக்குறைவு காரணமாக காலமானார்.
தமிழ்ப்பற்று மிக்கவர், உள்நாட்டு வணிகர்களின் உரிமை காவலர். வணிகமான ஆங்கில வழிக் கல்வியை எதிர்த்தார். தாய்த்தமிழ் நாட்டில் தமிழில் பெயர் வைப்பதே முறை, தமிழ் வழியில் கற்றலே முறை என்பதை வலியுறுத்தியவர்.அந்நிய நேரடி முதலீடு, இணையவழி வணிகம், சிறுவணிகத்தில் பெருமுதலீட்டாளர்களின் ஆக்கிரமிப்பு போன்றவற்றைத் தொடக்கநிலையிலேயே கடுமையாக எதிர்த்தவர்.
பொதுவாழ்வில் சமரசமில்லாமல் தன்னை ஈடுபடுத்திக்கொண்டவர். வணிகர்களின் நலன்களுக்காக மட்டுமின்றி ஒட்டுமொத்த தமிழ்மக்களுக்காகவும் குரல் கொடுத்தவர்.
அவருடைய மறைவு வணிகர்களுக்கு மட்டுமின்றி அனைத்துத் தரப்பினருக்கும் நேர்ந்த பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் அனைவருக்கும் எமது ஆழ்ந்த இரங்கல்..
|
|||||
|
|||||
|
|||||
|
|||||
|
|||||
|
|||||
by Swathi on 10 Sep 2024 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|