|
||||||||
தகர ஒகர வருக்கம் |
||||||||
தொழுவெனும் பெயரே யிரேவதி நாளும்
உழலைத் தொழுவு முரைத்தனர் புலவர். ....911
தொடுவெனும் பெயரே தோட்டமும் வஞ்சமும்
மருத நிலமும் வழங்கப் பெறுமே. ....912
தொய்யி லெனும்பெயர் சேறும் இன்பமும்
துயிரு முலைமேற் றொய்யிலு முழுவுமாம். ....913
தொத்தெனும் பெயர்பூங் கொத்துந் தொழும்புமாம்....914
தொறுவெனும் பெயரே தோழமு நிரையும்
தொகுதியு மெனவே சொல்லுவர் புலவர். ....915
தொடியெனும் பெயர்கை வளையு மோர்பலமும்
கங்கணப் பெயருங் கருதப் பெறுமே. ....916
தொங்க லெனும் பெயர்பீலிக் குஞ்சமும்
வெண்குடைப் பெயரு மாலையுந் தூக்கமும். ....917
தொண்டை யெனும்பெயர் யானைத் துதிக்கையும்
ஆதொண்டை யினொடு கோவையு மாமே. ....918
தொண்டெனும் பெயரே தொழும்பும் பழமையும்
ஒன்பது நுழைவழிப் பெயரு மோதுவர். ....919
தொட்ட லெனும்பெயர் தோண்டுதற் பெயரும்
தொடுதற் பெயரும் உணவும் சொல்லுவர். ....920
தொடுத்தல் எனும்பெயர் பிணித்தலும் வளைத்தலும்
பற்றுத லெனவும் பகரப் பெறுமே. ....921
தொழுதி யெனும்பெயர் புள்ளொலியுங் கூட்டமும்....922
தொழுவெனும் பெயரே யிரேவதி நாளும் உழலைத் தொழுவு முரைத்தனர் புலவர். ....911
தொடுவெனும் பெயரே தோட்டமும் வஞ்சமும் மருத நிலமும் வழங்கப் பெறுமே. ....912
தொய்யி லெனும்பெயர் சேறும் இன்பமும் துயிரு முலைமேற் றொய்யிலு முழுவுமாம். ....913
தொத்தெனும் பெயர்பூங் கொத்துந் தொழும்புமாம்....914
தொறுவெனும் பெயரே தோழமு நிரையும் தொகுதியு மெனவே சொல்லுவர் புலவர். ....915
தொடியெனும் பெயர்கை வளையு மோர்பலமும் கங்கணப் பெயருங் கருதப் பெறுமே. ....916
தொங்க லெனும் பெயர்பீலிக் குஞ்சமும் வெண்குடைப் பெயரு மாலையுந் தூக்கமும். ....917
தொண்டை யெனும்பெயர் யானைத் துதிக்கையும் ஆதொண்டை யினொடு கோவையு மாமே. ....918
தொண்டெனும் பெயரே தொழும்பும் பழமையும் ஒன்பது நுழைவழிப் பெயரு மோதுவர். ....919
தொட்ட லெனும்பெயர் தோண்டுதற் பெயரும் தொடுதற் பெயரும் உணவும் சொல்லுவர். ....920
தொடுத்தல் எனும்பெயர் பிணித்தலும் வளைத்தலும் பற்றுத லெனவும் பகரப் பெறுமே. ....921
தொழுதி யெனும்பெயர் புள்ளொலியுங் கூட்டமும்....922
|
||||||||
by Swathi on 20 Dec 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|