கௌதம் மேனன் இயக்கத்தில் நடித்து வரும் என்னை அறிந்தால் படத்தை தொடர்ந்து, நடிகர் அஜீத், வீரம் படத்தை இயக்கிய சிவா இயக்கத்தில் நடிக்க உள்ளார்.
இப்படத்தில் இரண்டு ஹீரோயின்கள் நடிக்க உள்ளதாகவும் அதில் ஸ்ருதி ஹாசன், சமந்தா உள்ளிட்டோரின் பெயர்கள் பரிசீலனையில் இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்தன.
ஆனாலும் இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் சிவா தரப்பில் இருந்தோ, அல்லது அஜித் தரப்பிலிருந்தோ இன்னும் வரவில்லை. இது குறித்து சமீபத்தில் பதிலளித்த இயக்குநர் சிவா படத்தின் கதாநாயகிகள் மற்றும் இதர நடிகர்கள் குறித்தோ, மேலும் இசை உள்ளிட்ட தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்தோ இன்னும் முடிவாகவில்லை என கூறியுள்ளார்.
ஆனால் படம் ரூ .86 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாக உள்ளதாக கூடுதல் தகவல்களை மட்டும் தெரிவித்துள்ளார் இயக்குனர் சிவா.
|