நடிகர் அஜித் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அஜீத்துடன் சேர்ந்து ஸ்ருதி ஹாசன், லட்சுமி மேனன், சூரி உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.
இந்த படத்திற்கு அனிருத் இசை அமைக்கிறார். படத்தின் தலைப்பு இதுவரை அறிவிக்கப்படவில்லை. தற்போது விஜய்யின் புலி டீஸர் வெளியாகி இணையத்தில் ஹிட்டடித்து புது சாதனையை எதிர்நோக்கி வரும் நிலையில் அஜித் ரசிகர்கள் இப்போது அஜித்தின் டீஸர் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டருக்காக காத்திருக்கிறார்கள்.
படத்தின் டீஸர் அக்டோபர் 1ம் தேதியும், அதே மாதம் இறுதியில் படத்தின் பாடல்களும் வெளியாகும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
படம் தீபாவளி சிறப்பாக வெளியாகும் என படக்குழு முன்பே தகவல் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது. தற்போது படக்குழு இத்தாலியில் படப்பிடிப்பை நடத்தி வருகிறார்கள்.
|