LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

சினிமா நிருபரின் அறுவை சிகிச்சைக்கு உதவிய அஜீத் !!

ஐந்நூறு ரூபாய்க்கு உதவி செய்தால் ஐயாயிரம் ரூபாய்க்கு பப்ளிசிட்டி தேடிக்கொள்ளும் திரையுலகில், சத்தம் இல்லாமல் உதவி செய்பவர்களுள் நடிகர் அஜீத்தும் ஒருவர். 


தனது சம்பளத்தின் ஒரு பகுதியை இப்படி உதவி செய்வதற்காக செலவு செய்யும் அஜித், யாருக்கு உதவினாலும், அதை வெளியே சொல்லக்கூடாது என்று அன்புக்கட்டளை இடுவாராம். 


இப்படி தான் சில தினங்களுக்கு முன் மூத்த சினிமா நிருபர் ஒருவர் இதயநோய் காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு இதய அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் கூறிவிட்டனர். ஆபரேஷனுக்கு சில நாட்களுக்கு முன், இந்த விஷயம் அவரது மானேஜர் மூலம் அஜித்தின் கவனத்துக்கு வந்தது.


குறிப்பிட்ட அந்த தனியார் மருத்துவமனை நிர்வாகத்தினர் தயாரித்த படத்தில் ஏற்கனவே அஜித் நடித்திருக்கிறார். அந்த வகையில் மருத்துவமனை நிர்வாகத்திடம் பேசிய அஜித், மூத்த சினிமா நிருபரின் ஆபரேஷன் செலவை தானே ஏற்றுக்கொள்வதாக சொல்லிவிட்டார். அதுமட்டுமல்ல, அந்த நிருபரிடமிருந்து ஒரு பைசா கூட வாங்கக்கூடாது என்று சொல்லியதோடு, தன் உதவியாளரை அனுப்பி சில லட்சங்களை முன்பணமாக அந்த மருத்துவமனையில் கட்டிவிட்டாராம். இந்த விஷயத்தை அறிந்ததும் அந்த நிருபர் அஜித்துக்கு போன் செய்து கண்ணீர் மல்க நன்றி தெரிவித்திருக்கிறார். 


எப்பவும் போல அஜீத், இப்போதும், இந்த விஷயத்தை வெளியே சொல்ல வேண்டாம் என்று பெருந்தன்மையாக கூறினாராம். 

by Swathi   on 03 Oct 2014  0 Comments
Tags: அஜீத்   Thala Ajith   தல அஜீத்   சினிமா நிருபர்   Cinema Journalist        
 தொடர்புடையவை-Related Articles
திருக்குறளில் மறைமொழி - கி. ஆ. பெ. விசுவநாதம் திருக்குறளில் மறைமொழி - கி. ஆ. பெ. விசுவநாதம்
திருக்குறளில் சொல்லும் செயலும் - கி. ஆ. பெ. விசுவநாதம் திருக்குறளில் சொல்லும் செயலும் - கி. ஆ. பெ. விசுவநாதம்
திருக்குறளில் மெய்வேல் பறியா நகும்! - கி. ஆ. பெ. விசுவநாதம் திருக்குறளில் மெய்வேல் பறியா நகும்! - கி. ஆ. பெ. விசுவநாதம்
திருக்குறளில் உடையர் எனப்படுவது...! - கி. ஆ. பெ. விசுவநாதம் திருக்குறளில் உடையர் எனப்படுவது...! - கி. ஆ. பெ. விசுவநாதம்
குடியும் குறளும் - கி. ஆ. பெ. விசுவநாதம் குடியும் குறளும் - கி. ஆ. பெ. விசுவநாதம்
திருக்குறளில் இரந்து வாழும் வாழ்வு - கி. ஆ. பெ. விசுவநாதம் திருக்குறளில் இரந்து வாழும் வாழ்வு - கி. ஆ. பெ. விசுவநாதம்
திருக்குறளில் கூத்தாட்டு அவைக்குழாம்? - கி. ஆ. பெ. விசுவநாதம் திருக்குறளில் கூத்தாட்டு அவைக்குழாம்? - கி. ஆ. பெ. விசுவநாதம்
திருக்குறளில் கயமை - கி. ஆ. பெ. விசுவநாதம் திருக்குறளில் கயமை - கி. ஆ. பெ. விசுவநாதம்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.