LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    கவிதை Print Friendly and PDF
- கருமலைத்தமிழாழன்

தலைகீழான தமிழன்

நாடிழந்த   இலங்கைமன்னன்   மான   வர்மன்

நாடுதன்னை   மீட்டளிக்கக்   கையை   ஏந்தி

நாடிவந்து   தமிழ்நாட்டுக்    காஞ்சி   மன்னன்

நரசிம்ம    பல்லவனை   வணங்கி   நின்றான்

தேடியவன்    வந்தபோது    காஞ்சி    மீது

தெவ்வரான   சாளுக்கியர்   படையெ    டுக்கக்

கூடியவர்   திட்டமிட்ட    செய்தி   தன்னைக்

கூரறிவு   ஒற்றனவன்   உரைத்த   நேரம் !

 

தன்படையை   அணியமாக    வைத்தி    ருக்க

தடந்தோளன்   நரசிம்ம   பல்ல   வன்தான்

தன்வீரப்    படைகளினைப்   பார்வை   யிட்டுத்

தகுவுரையால்    எழுச்சியினை    ஊட்டி   விட்டு

மன்னுபுகழ்    மாமல்ல   புரத்தை   நோக்கி

மானவர்மன்    பின்தொடரச்    செல்லும்    போது

நன்பகலாம்   கடும்வெயிலில்    சாலை   யோரம்

நல்லிளநீர்   விற்பதினைப்   கண்டு   நின்றான் !

 

இளநீரின்   காயொன்றை   வெட்டச்    சொல்லி

இதழ்களிலே   வைத்தபோதோ    உப்பாய்   கரிக்க

இளநீரைக்   கீழ்வீச    முனைந்த    போதோ

இருகையால்   மானவர்மன்    அதனைப்   பெற்றே

உளம்மகிழப்    பருகியதைக்   கண்ட   மன்னன்

உளம்துடிக்க   என்எச்சில்   உப்பு   நீரை

இளவரசே   நீர்எதற்காய்    பருகி   னீர்கள்

இனியகாய்கள்   உள்ளபோதே   என்று   கேட்டார் !


அரசிழந்தே   உதவிக்காய்   ஏங்கி   யிங்கே

அண்டியுள்ள   நானிதனைப்    பார்க்க   லாமா

இரக்கமுடன்   எனைப்பேணும்   நீங்கள்   தந்த

இளநீரை   எறிவதுவும்    முறையோ   என்று

சிரம்தாழ்ந்தே    அவனுரைத்த    பதிலில்   மானம்

சிதைந்ததாழ்வு    மனப்பான்மை    தனையு   ணர்ந்த

நரசிம்ம    பல்லவன்தான்   உளம்நெ   கிழ்ந்தே

நட்புகரம்   நீட்டுதற்கு    முடிவு   செய்தான் !

 

காஞ்சிமீது   சாளுக்கியன்   படையெ   டுக்கக்

காத்துள்ளான்   என்பதினை   அறிந்தி    ருந்தும்

காஞ்சிதன்னைக்   காத்திருந்த   படைகள்   தம்மைக்

கருணையுடன்   இலங்கைக்கே   அனுப்பி   வைத்துப்

பூஞ்சோலை    போல்இயற்கை   சூழ்ந்தி    ருந்த

புகழ்பூத்த   அநுராத   புரத்தை   மீட்டு

வாஞ்சையுடன்   தானளித்த   வாக்கிற்   கேற்ப

வர்மனுக்கு   முடிசூட்டி   அமர   வைத்தான் !

 

எச்சிலினை   உண்டவன்தான்    தமிழர்   தம்மை

எச்சில்நாய்   போலின்று   நடத்து   கின்றான் !

பிச்சையாக   நாடுதன்னைப்   பெற்ற   வன்தான்

பிச்சையெனத்    தமிழரினை   விரட்டு   கின்றான் !

உச்சரிக்கும்   இலங்கையென்றும்    தமிழர்   தம்மின்

உரிமையுடை   நாடென்றே   தோள்கள்   தட்டிப்

பச்சைரத்தத்    தமிழரெல்லாம்    எழுந்தால்    போதும்

பாரினிலே    தோன்றிவிடும்    தமிழர்   நாடு !

 

(பல்லவர் காலச்  செப்பேடுகளில்  இதற்கான  குறிப்பு  உள்ளது)

 

பாவலர்  கருமலைத்தமிழாழன்

 

by Swathi   on 21 Oct 2014  0 Comments
Tags: Thamizhan   Thamizhan Kavithaigal   Thamizhan Kavithai   தமிழன்   கருமலைத்தமிழாழன்   தமிழன் கவிதைகள்     
 தொடர்புடையவை-Related Articles
மூளியாக்கி வைத்தோம்!- பாவலர்  கருமலைத்தமிழாழன் மூளியாக்கி வைத்தோம்!- பாவலர் கருமலைத்தமிழாழன்
ஊனமாகி  வீழ்கின்றான் - பாவலர் கருமலைத்தமிழாழன் ஊனமாகி வீழ்கின்றான் - பாவலர் கருமலைத்தமிழாழன்
மகளின்  மாண்பு - பாவலர் கருமலைத்தமிழாழன் மகளின் மாண்பு - பாவலர் கருமலைத்தமிழாழன்
தமிழின் அடைமொழிகள் !! தமிழின் அடைமொழிகள் !!
வருமோ  இப்புதிய   உலகு.. வருமோ இப்புதிய உலகு..
உண்மைத் தமிழனாய் உயர்வானோ! உண்மைத் தமிழனாய் உயர்வானோ!
தலைகீழான  தமிழன் தலைகீழான தமிழன்
என்னவைத்தோம் என்னவைத்தோம்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.