LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- காந்திமதியம்மை பிள்ளைத்தமிழ்

தாலப்பருவம்

308     ஒல்குங் கொடிநுண் ணுசுப்பொசிய வுளருஞ் சுரும்பர் விரும்புமது
      வுண்டி தெவிட்டி யுவட்டெடுப்ப வூற்றும் பசுந்தே னசும்பூறிப்
பில்கு நறுந்தார் குழல்செருகிப் பேதை மாதர் பயின்மறுகு
      பெரும்பொற் றகடு படுத்திருளின் பிழம்பை மழுக்கி யடிக்கினிதே
நல்குங் குணத்தா யினும்புலவி நண்ணு மடவார் சிதறுதல
      நவமா மணிகள் பரந்துகுறு நடையே யெவருங் கொளக்காணு
மல்குஞ் செல்வத் திருவுறையூர் வாழ்வே தாலோ தாலேலோ
      மறைநான் காற்றும் பெருங்கருணை வடிவே தாலோ தாலேலோ.     (1)

309     கூட முயருங் குன்றனதங் கொம்மை முலைக்குப் புறங்கொடுத்த
      குருமார் பகத்திற் புயத்தினறுங் குஞ்சித் தலத்தி லஞ்சிறைய
கீடமிரியப் பகன்முழுதுங் கிள்ளை மொழியா ரலத்தகந்தோய்
      கிளர்தாட் சிலம்பி னொலியெழுப்பக் கெழுமு மிரவின் மைந்தர்மலர்ப்
பீட மருவு மம்மடவார் பெருங்கா ழல்குன் மிசைக்கிடந்து
      பிறழ்மே கலைபி¢ னொலியெழுப்பிப் பெருகுங் களிப்பிற் ற்ளைத்துவளர்
மாட மலியுந் திருவுறையூர் வாழ்வே தாலோ தாலேலோ
      மறைநான் காற்றும் பெருங்கருணை வடிவே தாலோ தாலேலோ.     (2)

310     பண்ணுங் கனியுங் கனிமொழியார் பயின்மே னிலத்திந் திரநீலம்
      பதித்து விதித்த செய்குன்றப் பரப்பில் வரப்பில் கொழுந்தோடி
நண்ணுஞ் சுடரி லறமுழுகி நாடற் கரிதா யுயிர்க்குபிரா
      நம்மான் றிருக்க ணீபுதைத்த நாளோ வென்று ளயிர்த்துநெடு
விண்ணுந் திசையு மிகமயங்கி விரகா னாடி யாய்தோறும்
      விலகி விலகி வில்லுமிழும் விதத்தா லி·திற் றெனத்தெளியும்
வண்ணம் பொலியுந் திருவுறையூர் வாழ்வே தாலோ தாலேலோ
      மறைநான் காற்றும் பெருங்கருணை வடிவே தாலோ தாலேலோ.     (3)

311     கருமால் யானை யனந்தனுளங் கலங்கக் கலக்கி விளையாடுங்
      கார்க்குண் டகழி கடலெனவக் களிற்றை யினமென் றுளத்துநினைந்
திருமா லெழிலிப் படலமவ ணிழிந்து குழிந்த வகடெடுப்ப
      விரைத்துத் திரைத்த நீர்கொடுவிண் ணேறும் பொழுதவ் விபப்பாகர்
பொருமால் களிறென் றதனெருத்திற் பொள்ளென் றேறிப் பொன்னுலகம்
      புரப்பான் போல்விண் புகுந்துணராப் பொருக்கேன் றயற்சோ பானவழி
வருமா ளிகைசூழ் திருவுறையூர் வாழ்வே தாலோ தாலேலோ
      மறைநான் காற்றும் பெருங்கருணை வடிவே தாலோ தாலேலோ.     (4)

312     ஊற்றும் பசுந்தேன் முளரிமுகை யுளர்வண் டடைய முறுக்குடைய
      வோதக் கடலின் முகம்புழுங்க வுதயமெழுந்து சிதையவிருள்
பாற்றுங் கடவுட் கதிர்கடவும் பசுமா வுருளைத் தனிவையம்
      பகைகொண் டிளைஞர் மிகைகடவும் பைம்பொற் கொடிஞ்சித் தேர்முழக்குங்
கூற்றும் வெருவப் பொருங்களிறு பிளிறு மொலியும் குளிறொலிமான்
      குரற்கிண் கிணியி னெழுமொலியுங் குழுமி யெழுமா முகின்முழக்கை
மாற்று மறுகார் திருவுறையூர் வாழ்வே தாலோ தாலெலோ
      மறைநான் காற்றும் பெருங்கருணை வடிவே தாலோ தாலெலோ.     (5)

வேறு.

313     பொங்கும் பாற்கடன் முழுதுங் கொளுவு புழைக்கை யடக்கியெழூஉப்
      பூமக ணான்முகன் மால்சிவ னேயுயிர் போயின மெனமுறையிட்
டெங்குஞ் சிதறி விழப்பின் விடுத்தலை யெறிதரு மக்கடல்விட்
      டேனைக் கடலு முழக்கிக் குலவரை யெட்டையு முட்டிநிறந்
தங்குங் குலவொரு கோட்டாற் குத்திச் சாய்த்துப் பிலநுழையாத்
      தாதை யெனப்பணி பூண்டு வருஞ்சிறு தந்திக் கன்றருளுஞ்
செங்குங் குமநிறை கொங்கை சுமந்தெழு சிறுபிடி தாலெலோ
      செல்வத் திருவுறை யூரில் விளங்கு செழுங்குயில் தாலெலோ.     (6)

வேறு.

314     உதைய மெழுங்கதி ரெதிரெழு செங்கே ழொழுகொளி முழுமணியே
      யோண்பவ ளத்திரு வோங்கலை நீங்கலி லோங்கொளி மரகதமே
இதைய நெகிழ்ந்துரு குங்களி யன்பின ரெய்ப்பகல் கற்பகமே
      யெம்முள மூடிரு ளோடி மலங்க விலங்கும் விளக்கொளியே
குதைவரி விற்புரு வத்தர மகளிர்கள் கும்பிடு கோமளமே
      குழைபொரு கட்கரு ணைப்பெரு வெள்ளக் கொள்ளைப் பேராறே
ததையு மலங்கன் மிலைந்த குழற்கொடி தாலோ தாலெலோ
      தருமம் பொலிதிரு வுறையூ ருறைபவள் தாலோ தாலெலோ.     (7)

வேறு.

315     தருவிற் பொலிமலர் மாமுடி மேல்விழ வானோரேனோருந்
      தகைபொற் சிகைம¨ர் தாள்விழ மீளவிண் ணாள்வார்வாழ் வாரே
யுருவிற் பறவைகள் பூமக ணாமகள் சேர்வாரூர்வாரே
      யொருவிற் குமரனை நீயுர வாவிடின் மாதாவேயோவென்
றிருவிற் புவனமெ லாமலர் போலடி மீதேதாழ்தோறு
      மினிதுற் றருள்வர தாபய மேவுகை யாயேயோயாதே
கருவிற் படுமெனை யாளுடை நாயகி தாலோ தாலெலோ
      கழகத் திருவுறை யூரமர் மாமயில் தாலோ தாலெலோ.     (8)

வேறு.

316     குருமருவுசெம்பொன் வரைவில்கைசுமந்து கூடாரூர்தீயே
      குடிபுகமுனிந்த சிவபரனைவென்றி டாதேயேகேன்யான்
மருமருவுதொங்கன் முடியமரர்வந்து பாரீர்போய்மோதா
      வருவலனவந்த வொருமதனனங்கம் வேவாநீறாக
வுருமருவுவெம்பு மழல்விழிதிறந்த கோமான்மாமோக
      வுததியிலழுந்த விளநகையெழுஞ்சே வாய்மானேதேனே
திருமருவுகொண்ட றிகழவருதங்கை தாலோதாலெலோ
      செழிதமிழுறந்தை தழைதருகரும்பு தாலோதாலெலோ.     (9)

வேறு.

317     தெளிதருமறைய னைத்தையுமெழுதி டாதேயேர்தாமே
      தெறுகழுவொருகு லச்சிறைநிறுவி வீணேபோகாமே
யளியறுபறித லைச்சமணிருளி லேபார்மூழ்காமே
      யழலுருவிறைய வர்க்குடல்குளிரு மூண்வேறாகாமே
வளியெறிபொதியி னற்றவர்களிய லாவாறேகாமே
      மடரறையுளமு நெக்கிடமுலையின் வாய்வார்தேனார்பால்
குளிர்தருபுகலி யர்க்கினிதுதவு தாயேதாலேலோ
      கொழிதமிழ்கெழிய குக்குடநகரின் வாழ்வேதாலேலோ.     (10)

3 - தாலப்பருவம் முற்றிற்று.
4 - சப்பாணிப்பருவம்.
318     எண்கொண்ட தலையிரண் டிட்டமுப் ப·தற மிருக்குமா லயமென்றும்வா -
      னெம்பிரா னாயவொரு தம்பிரான் கைக்கமல மேந்துசெங் காந்தளென்றுங்,
கண்கொண்ட விருசுட ரடங்கித் தடைப்படு கடுஞ்சிறைக் கூடமென்றுங் -
      காமரயி ராணிமங் கலநா ணளித்தசேய் கண்படைகொள் பள்ளியென்றும்,
பண்கொண்ட வஞ்சொற் கிளிக்குஞ்சு துஞ்சுதல்செய் பஞ்சரம தென்றுமறைகள் -
      பாடித் துதித்துவகை தூங்கவெஞ் ஞான்றும் பரிந்துபா ராட்டுசீர்த்தித்,
தண்கொண்ட தாமரை முகிழ்த்தொளி ததும்பவொரு சப்பாணி கொட்டியருளே -
      தண்ணளி தழைந்துவளர் புண்ணியவுறந்தைமயில் சப்பாணி கொட்டியருளே.     (1)

319     காயா நிறத்தவன் சுதரிசன மொடுமரைக் கண்ணனெண் றொருபெயருமுக் -
      கண்ணவ னிடம்பெறச் செய்தபே ருதவியைக் கைவிட் டிருட்பகையைமுன்,
னாயாது ஞாட்பிடை மறைத்ததை யறிந்துமவ னமுதைப் பரித்தல்செயுமே -
      யம்மைநின் னொருகையை யிருகைகொடு தாங்குவ தறிந்தலை கடற்றோன்றுமத்,
தூயாடவத்தளென நறுமுளரி யென்றுஞ் சுமக்குமா லென்றுகூறிச் -
      சூராமடந்தையர்கள் பாராட்டு கையொளி துளூம்பவெளி யேங்களூக்குத்,
தாயா யிருப்பதுமெ யானான் மகிழ்ந்தின்றோர் சப்பாணி கொட்டியருளே -
      தண்ணளி தழைந்துவளர் புண்ணிய வுறந்தைமயில் சப்பாணி கொட்டியருளே.     (2)

320     பாராட்டு நின்சிறு சிலம்பிற் சிலம்பினப் பார்ப்புநா லைந்துதருவேம் -
      பயில்குதலை நினதுவாய்ப் பவளமுத் தங்கொளப் பைங்கிளிக் குஞ்சுதருவேங்,
காராட்டு கந்தரத் தெம்மா னிடத்திருக் கைமானு மினிது தருவேங் -
      கவினுடைப் பாவையைக் கைபுனையும் வண்ணமுங் கற்கப் பயிற்றிவிடுவேஞ்,
சீராட் டுடன்குலவு வண்டற் பிணாக்களுஞ சேர்ப்பே மிதன்றியாமென் -
      செய்யினுங் கைம்மா றெனக்கருத லகவிதழ்ச் செங்கையொளி பொங்கநறவத்,
தாராட்டு கூந்தலெம தெய்ப்பாற விப்போழ்தொர் சப்பாணி கொட்டியருளே -
      தண்ணளி தழைந்துவளர் புண்ணிய வுறந்தைமயில் சப்பாணி கொட்டியருளே.     (3)

321     ஆனநெய் தெளித்துநறு நானமு மளாய்ச்சூழி யணிபெற முடித்து மொளிசே -
      ரரிக்குரற் கிண்கிணியொ டம்பொற் சிலம்புநி னடித்தளிர் திருத்தியம்பாய்,
மீனநெடுநோக்கினுக் கஞ்சனந் தீட்டியும் விளங்குபுண் டரநுதற்கண் -
      விலகிவில் லுமிழ்மணிச் சுட்டியது கட்டியும் வியன்கதிர் விழும்பொழுதுபொற்,
கானநிறை தொட்டிவிற் கண்வளரு மாறுபல கண்ணேறு போக்கியுமுளங் -
      களிகொள்ளும் யாமுவகை மீக்கூர வன்பிற் கணக்கில்புவ னங்கணோக்கத்,
தானமருள் கைத்தலனை நோக்கிநிற் கின்றேமோர் சப்பாணி கொட்டியருளே -
      தண்ணளி தழைந்துவளர் புண்ணிய வுறந்தைமயில் சப்பாணி கொட்டியருளே.     (4)

322     சிலையெடுத் தன்னநின் றிருநுதலி னுண்டுளி செறிந்திடா மற்செறிந்த -
      செழுநிறக் குருகுக ணெரிந்திடா மற்றிளிர்ச் செங்கரங் கன்றிடாமன்,
முலையெடுத் துயர்மார்பி நமுதூற்று திருவாய் முகிழ்த்தநகை நிலவுகொட்ட -
      முனிவின்றி நின்கரங் கண்ணொத்தி முத்திட்டு மோந்துயா முவகைகொட்ட,
அலையெடுத் துயர்கங்கை மங்கைதன் நெஞ்சகமு மஞ்சித் தடாரிகொட்ட -
      வம்மவிம் மிதமுறீஇ யவிர்முடி துளக்கிநம் மம்மான் குடங்கைகொட்டத்,
தலையெடுத் துயரறமு மாவலங் கொட்டவொரு சப்பாணி கொட்டியருளே -
      தண்ணளி தழைந்துவளர் புண்ணிய வுறந்தைமயில் சப்பாணி கொட்டியருளே.     (5)

வேறு.

323     கருநிற வெழிலி முழக்கென வெம்மான் கயிலையின் மயிலாலக்
      காயு மடங்கன் முழக்கென மகலான் களிறும் பிளிறியிட
வுருமின் முழக்கென வரவிறை யுள்ள முளைந்திட வரமாத
      ரூடல் வெறுத்து வெரீஇத்தம் மகிழ்ந ருரங்குழை யத்தழுவத்
திருமறு மார்பன் றுண்ணென வளர்துயி றீர்ந்தெவ னெனவினவத்
      திகழண் டங்கள் குலுங்கக் குணில்பொரு செழுமுர சொலிகெழுமுங்
குருமணி வெயின்மறு காருறை யூர்மயில் கொட்டுக சப்பாணி
      குழவி மதிச்சடை யழக ரிடத்தவள் கொட்டுக சப்பாணி.     (6)

324     பூணைப் பொருமுலை மங்கையர் பயிலும் பொங்கொளி வெண்மாடம்
      புதுநில வொழுகொளி முழுகியு மெழுகழல் போகட் டதுபோற்கற்
றூணைப் பொருமுட் டிருகரு முருகத் தோன்றுழு வற்பிரியத்
      தூயோ ருருவத் திருவப் பேரொளி தோய்ந்துங் கழைசுளியா
மாணைப் பெறுமிரு வெள்வே ழத்தினை வாயிரு பாலுநிறீஇ
      மதமால் யானைகள் கற்பக் குளகுகொள் வண்கோ டொருநால்வெண்
கோணைக் களிறென வருமுறை யூர்மயில் கொட்டுக சப்பாணி
      குழவி மதிச்சடை யழக ரிடத்தவள் கொட்டுக சப்பாணி.     (7)

வேறு.

325     மடலவிழ்நறுமுட் டாழையில் வாழையின் மணமலிபிரசக் காவியில்
            வாவியின் மதிகதிர்தவழ்பொற் சோலையின் மாலையி னச்சுவடிப்பார்வை -
      வரிவளையவர்நெய்த் தோதியில் வீதியி லகவிதழ்வனசப் பூவினின்
            மாவினில் வடிவுடையலரிக் கூடையி லோடையின் மற்பசுமைப்பூக,
மிடறருளிளநற் பாளையில் வாளையில் வினைஞர்கள்சிகையிற் பூவிரி
            காவிரி வியலியல்குலையிற் சாலியின்வேலியின் மைக்கவரிபபால்பாய் -
      விரிதருகுளனிற் கூவலி லோவலில் வளனருள் புறவப் பாரினில் வேரினில்
            விழைமதுநுகரப் போயுறவாயுற மொய்த்தசுரும்பேபோ,
லடலிளைஞர்கள்பட் டாடையி லோடையி லறவளைதனுவிற் றூணியினாணியி
            லவிர்கரமலரிற் றோளினில் வாளினில் விற்பொலிமுத்தாரத் -
      தகலமதனின்மெய்ச் சேயினில் வாயினி லொழுகொளிமுகினிற் றாழ்குழை
            வாழ்குழை வமர்தருசெவியிற் றேரினி லேரினில் வைத்தமுடிப்பூணிற்,
றொடர்படுபொருணட் பால்விலை மாதர்க ளரிமதர்நயனக் காரளி
            போய்விழு துரிசறுவளமைக் கோழியில் வாழ்மயில் கொட்டுகசப்பாணி -
      துயல்வருமிதழித் தாமம் விராவிய புயமுதலவருக்கோர்துணை யாயவ
            டுகளறுகருணைக் கோயிலின் மேயவள் கொட்டுகசப்பாணி.     (8)

வேறு.

326     பரவு நெடும்புவ னந்தரு மைந்தன் விரித்தபடப்பாயற்
      பகவன் மதம்பொழி வெண்கரி வந்தருள் கட்படி வத்தேவ
னுரக ரருந்தவ ரெண்டிசை நின்றவர் முப்பது முக்கோடி
      யுறுதொகை யண்டர்கள் செங்கதிர் வெண்கதிர் சித்தகணத்தோர்கள்
கரமுடி கொண்டொரு நந்தி பிரம்படி பட்டும் விருப்பாகிக்
      கவின வணங்க வுகுத்த மிகுத்த முடிப்பொன் மணித்தூள்டா
யரவொலி பொங்கு முறந்தை யிருந்தவள் கொட்டுக சப்பாணி
      யழகமர் கொங்கை சுமந்த விளங்கொடி கொட்டுக சப்பாணி.     (9)

வேறு.

327     ஒலிகட லமுதன மூவர்கள் வாயரு மைத்தமிழ் நற்பாட
      லுடலுறு பிடகரை மோதிய சோதிவி ரித்தசு வைப்பாடல்
பொலிதரு சமையந னூலியல் யாவும யக்கமறத்தேறிப்
      புறமத மறமெறி நூல்களு மோதியு ணர்ச்சிமிகுத்தோவா
வலியுறு பதிபசு பாசமு மீதிதெ னத்தெளிவுற்றாராய்
      மயலறு விழிமணி வாள்வட நீறையெ ழுத்துமதித்தோகை
மலிதர வொளிருவர் சேருறை யூர்மயில் கொட்டுகசப்பாணி
      மலர்தலை யுலகமெ லாமரு ணாயகி கொட்டுகசப்பாணி.     (10)

by Swathi   on 21 Dec 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.