|
||||||||
அமெரிக்காவின் வாசிங்டன் பல்கலைக் கழகத்தில் தமிழிசைக்கான பாடநூல் வெளியிடப்பட்டது.. |
||||||||
![]() அமெரிக்காவின் வாசிங்டன் பல்கலைக் கழகத்தில் தமிழிசைக்கான பாடநூல் வெளியிடப்பட்டது.. தமிழகத்தில் பாடிவரும் செவ்விசை வேர்கள் இரண்டாயிரம் ஆண்டு பழமையானது என்றாலும் தமிழிசைக்கென முறைப்படுத்தப்பட்ட பாட நூல் இல்லை. இதை உணர்ந்து அமெரிக்காவில் உள்ள “தமிழ் நிகழ் கலைக் கழகம் (Institute of Tamil Performing arts – ITPA)” என்ற அமைப்பு தமிழ் அறிஞர்களை ஒருங்கிணைத்து பாடத்திட்டத்தை உருவாக்கியது. இந்தப் பணி முழுமையாக நிறைவுற்று சமீபத்தில் அமெரிக்காவின் மிசோரி மாகாணத்தில் உள்ள வரலாற்றுச் சிறப்பு வாயிந்த வாசிங்டன் பல்கலைக்கழகத்தில் மிகப்பெரிய தமிழிசை விழாவில் வெளியிடப்பட்டது. இந்தப் பாடங்களை தமிழகத்தின் முன்னணி இசைக்கலைஞர் திருபுவனம் குரு. ஆத்மநாதன் அவர்கள் எழுதியுள்ளார். இவர் தமிழ், சமஸ்கிரதம், தெலுங்கு ஆகியவற்றில் ஆயிரக்கணக்கான மேடைகளைக் கண்டவர். இவரது மாணவர்கள் இன்று உலகம் முழுதும் பிரபலமான இசை ஆசிரியர்களாக பல அரங்கேற்றங்களை செய்து வருகிறார்கள். இதை இசையியல் வரலாற்றை கலைக் காவிரி முன்னாள் முதல்வர் மார்கரெட் பாஸ்டின் அவர்கள் எழுதியுள்ளார். தமிழிசைத்துறை ஆய்வாளர் திரு.மம்மது அவர்கள் இந்த நூலுக்கு அணிந்துரை வழங்கி, ஆய்வு தொடர்பான வழி காட்டுதலை செய்ய இசைந்துள்ளார்கள். . இதனை தஞ்சைத் தமிழ்ப்பல்கலைக் கழகம் மூன்று ஆண்டு பட்டையக் கல்விக்கான பாடமாக அங்கீகரித்துள்ளது. இதை சிறப்பாக வெளியிட தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழக முன்னாள் துணை வேந்தர் வெளியிட , அமெரிக்காவின் பாரம்பரியமிக்க வாசிங்டன் பல்கலைக் கழக இசைத்த துறைத் தலைவர், முனைவர் டாட்.டெக்கர் பெற்றுக்கொண்டார். தொடர்ந்து மிசௌரி தமிழ்ச் சங்கம் நடத்திய தமிழிசை விழாவில் நூற்றுக்கணக்கான குழந்தைகள் தமிழிசை பாடினர். இன்னும் சில ஆண்டுகளில் பல மாணவர்கள் தமிழ் நிகழ் கலைக் கழகத்தின் மூலம் தமிழிசை பட்டயம் பெற இது ஒரு நம்பிக்கையை விதித்துள்ளது. இன்று தமிழிசை, கர்நாடக இசையை வீட்டில் கற்பவர்களுக்கு ஒரு முறையான அங்கீகாரம் பெறுவதற்கு இந்த பல்கலைக்கழக அங்கீகாரம் பெற்ற பட்டயம் உதவும் என்று இதன் ஒருங்கிணைப்பாளர் திரு.பொற்செழியன் இராமசாமி குறிப்பிட்டார். அவர் மேலும் குறிப்பிடுகையில் இதைக் குறித்த மேலும் விவரங்களைப் பெற itpastl@gmail.com என்ற மின்னஞ்சலை தொடர்புகொள்ளமுடியும் என்றும், ஏற்கெனவே இசை பயிலும் மாணவர்கள் தங்கள் இசை ஆசிரியரிடம் பாட நூலிலுள்ள பாடங்களை பயின்று தேர்ச்சி பெறலாம் என்றும் திருபுவனம் குரு.ஆத்மநாதன் அய்யா அவர்களின் மேற்பார்வையில் புதிதாக இசை கற்க விரும்பும் மாணவர்கள் இசைக்கடல் பண்பாட்டு அறக்கட்டளை வலைத்தமிழ்.காம் -வுடன் இணைந்து இணையம் வழி (ஸ்கைப்) நடத்தும் இசை வகுப்புகளில் பங்கு பெற்று இசைப் பாடங்களை பயிற்சி எடுக்கலாம் என்றும் தெரிவித்தார். திரு.ஆத்மநாதன் அவர்களின் ஒருங்கிணைப்பில் நடைபெறும் வகுப்புகள் மூன்று ஆண்டுகளில் குழந்தைகள் முழுமையாக இசையின் அடிப்படைகளையும், பல்வேறு சங்க இலக்கிய பாடல்களையும் கற்று மேடை நிகழ்ச்சிகளை செய்யும் அளவு தயார் செய்து அவர்கள் அரங்கேற்றம் செய்யும் வாய்ப்புகளை உருவாக்கித் தர திட்டமிடப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். இந்த வகுப்பில் சேர: www.ValaiTamil.com/music என்ற சுட்டியில் பதிவு செய்யலாம். உலகின் எந்த நாட்டில் வசித்தாலும் உங்கள் நாட்டின் நேரத்திற்கு ஏற்ப வகுப்புகள் ஏற்பாடு செய்யப்படும்.
இசையியல் பாடங்களுக்கு தமிழ் நிகழ்கலைக் கழகம் பட்டைய வகுப்பில் பதிவு செய்தவர்களுக்கு மூன்று மாதங்களுக்கு ஒரு முறை தொலைபேசி மூலமாகவோ, வேறு இணையவழியிலோ இசை நுட்ப ,இசை வரலாறு பாடங்களை பல்கலைக்கழகத்திலிருந்து ஆசிரியர்கள் வகுப்புகளை நடத்துவார்கள். ஒவ்வோர் ஆண்டு முடிவிலும் ஒரு தேர்வு இருக்கும். தேர்வுமுறை குறித்த விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும். மூன்றாம் ஆண்டு மட்டும் நேர்மிகத் தேர்வு அவசியம் இருக்கும். அதற்கான இடம், நேரம் பின்னர் அறிவிக்கப்படும். இந்தத் தேர்வை நடத்த தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகத்தால் அங்கீகரிக்கப்பட்ட வல்லுநர்கள் இங்கு வந்து அதை நடத்துவார்கள். உலகின் எந்த நாட்டில் வசித்தாலும் தமிழிசையை , நம் சங்க இலக்கியங்களை இசையாக முறைப்படுத்தி கற்க, இது மிகப்பெரிய வாய்ப்பாக அமைந்துள்ளது. இதை அனைவரும் பயன்படுத்தி நம் குழந்தைகளை இசையும், நாட்டியமும் அனைவரும் கற்கவேண்டும் என்பதும், அவர்கள் என்ன கல்வியை கற்றாலும், இந்த கலைகள் அவர்களின் உயர்வுக்கு பயன்படும் , அவர்களை வாழ்வில் மேம்படுத்தும் என்பதை உணர்ந்து இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்வோம். -வலைத்தமிழுக்காக மிசௌரியிலிருந்து பூபதி சாமிக்கண்ணு |
||||||||
![]() ![]() |
||||||||
![]() ![]() |
||||||||
![]() ![]() |
||||||||
![]() ![]() |
||||||||
![]() ![]() |
||||||||
by Swathi on 31 Aug 2018 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|