LOGO
  முதல் பக்கம்    சிறுவர்    சிறுவர் விளையாட்டு - kids Game Print Friendly and PDF

தமிழோடு விளையாடு

ந.செல்லம்மாள் ஜானகிராமன், ஃபார்மிங்டன் ஹில்ஸ், மிச்சிகன்.

புதிர் - 1

1.செய்திக்கும் உண்டு, சேலைக்கும் உண்டு. அது எது?
2.கற்காலப் போக்குவரத்து, இலக்கியத்திற்கும் தேவை. அது யாது?
3.பண்ணிலும் உண்டு, பெண்ணிலும் உண்டு. அது என்ன?
4.வினா மொழி. விடை மொழி. எந்த மொழி?

புதிர் - 2

1.உயிரில் நான்காவேன். மெய்யில் நானோருயிர்! நான் யாரோ? என்ன பேரோ?
2.வினையும் நானே வானொலியும் தானே! நான் எது?
3.இருவொரு மொழி கொண்டவள். ஐந்தோடொன்றாக. ஐக்கியமாவாள். விரைபவளுக்கு விரைவு வண்டியிலும் விலாசம் உண்டு! யார் அவள்?
4.தமிழிலும் ஆங்கிலத்திலும் கலந்து செய்த கலவை நான். இணைக்கும் பணியை செவ்வனே செய்வேன். நீரற்ற நிலத்திலும் கப்பலாவேன். நான் யார்?
5.உலகமே திரும்பிப் பார்க்கும். பேரழகி நான். அதிகாரமிக்கவர்களாலும் அதிகாரம் செலுத்த முடியாக் கார(ண)மானவள் வண்ணமயமான என் வாழ்க்கைப் பயணம் முழுவதும் முட்களுடனே! நான் யார்?

புதிர் - 3

1.ஒளிவேன், ஒளிர்வேன், ஒழியேன்! நான் யார்?
2.சிறையில் உணவு, சிந்தையின் உணர்வு. அது எது?
3.கூட்டிய ஒலியுடன், கூரிய ஆயுதமொன்று. அது என்ன?
4.வெண்பாவில் சேராப் பா(ல்) வகை! கரிய விலங்கின் கருணை மழை! அப்பால் எப்பால்?
5.ஒலி பரப்பும் பறவை! ஒளி பரப்பிய ஆங்கிலப் பெண்மணி. முழுப் பெயரில் மணம் பரப்புவார். யார் அந்தப் பெண் மலர்?
6.உருளையில் துளை, உயிர்மெய் கலந்தால் மெல்லிசை! என்ன அது?

தமிழோடு விளையாடு விடைகள்:

புதிர் - 1
தலைப்பு
நடை
சங்கதி/பல்லவி
எம் மொழி? எம்மொழி (தமிழ்!)

புதிர் - 2

இடி
வைகை
ஒட்டகம்
கடிகாரம்

புதிர் - 3
சூரியன்
களி
கத்தி
எருமைப் பால்
ஃப்ளாரன்ஸ் நைட்டிங்கேல் அம்மை
புல்லாங்குழல்

by Swathi   on 22 Jan 2020  1 Comments
 தொடர்புடையவை-Related Articles
தமிழோடு விளையாடு தமிழோடு விளையாடு
அத்திலி புத்திலி -1. உரியடி அறிவோம்... அத்திலி புத்திலி -1. உரியடி அறிவோம்...
அத்திலி புத்திலி - அறிமுகம் அத்திலி புத்திலி - அறிமுகம்
அத்திலி புத்திலி - புதிய சிறுவர் விளையாட்டுத் தொடர் .. அத்திலி புத்திலி - புதிய சிறுவர் விளையாட்டுத் தொடர் ..
மாவளியோ மாவளி (கார்த்திகைச் சுளுந்து) .... மாவளியோ மாவளி (கார்த்திகைச் சுளுந்து) ....
பூசணிக்காய் இருக்கா? பூசணிக்காய் இருக்கா?
மீன்சட்டி மீன்சட்டி
வதந்தி வதந்தி
கருத்துகள்
17-Feb-2020 09:43:59 இரா.கணேசன் said : Report Abuse
அருமை. மிக அருமை.
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.