|
|||||
நீண்ட நாட்களுக்குப் பின் தஞ்சையில் தமிழ்க்கூடல்…வருக... நவம்பர் 23, 24 |
|||||
![]() நீண்ட நாட்களுக்குப் பின் தஞ்சையில் தமிழ்க்கூடல்…வருக... அனைத்திந்தியத் தமிழ்ச்சங்கப் பேரவையும் தஞ்சாவூர், தமிழ்ப் பல்கலைக்கழகமும் இணைந்து 2024, நவம்பர்த் திங்கள் 23, 24(காரி,ஞாயிறு) ஆகிய நாள்களில் தமிழ்க்கூடல் நிகழ்வினைத் தஞ்சாவூரில் நடத்துகின்றன. இதில் 50க்கும் மேற்பட்ட இந்தியச் தமிழ்ச்சங்கங்கள் கலந்துகொண்டு தமிழ்வளர்ச்சி குறித்து சிந்திக்கிறார்கள். இதில் நானும் கலந்துகொண்டு "இன்றைய சூழலில் தமிழ்ச்சமூகம் சந்திக்கும் சவால்களும் தீர்வுகளும்" என்று தலைப்பில் உரையாற்றுகிறேன். கலந்துகொள்ளும் அனைத்துத் தமிழ்ச்சங்கங்களுக்கும் ஐந்து ஆண்டுகள் உலக அளவில் நடைபெற்ற ஐந்தாண்டு ஆய்வுத்திட்டமான "உலக மொழிகளில் திருக்குறள் மொழிபெயர்ப்புத் தொகுப்புத் திட்டம்" இறுதி அறிக்கையாக வெளியிட்ட "Thirukkural Translations in World Languages" நூலின் ஒரு பிரதியை 50 தமிழ்ச்சங்கங்கள் , ஆளுமைகளுக்கு பரவலாக்கல் நோக்கில் வழங்கத் வலைத்தமிழ் பதிப்பகம் திட்டமிட்டுள்ளது. இந்த நிகழ்வில் மாண்பமை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு. பெ. சாமிநாதன் அவர்களும், தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் அவர்களும், தவத்திரு குமரகுருபர அடிகளார் அவர்களும் கலந்துகொண்டு சிறப்பிக்க உள்ளனர். தமிழ்நாட்டு அரசின் மாண்புமிகு உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன், மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் சா. மு. நாசர், தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் மாண்பமை துணைவேந்தர் வி. திருவள்ளுவன், முன்னைத் துணைவேந்தர்கள் முனைவர் சி. சுப்பிரமணியம், முனைவர் இ. சுந்தரமூர்த்தி, பேராசிரியர் ப. மருதநாயகம், அருள்தந்தை ஜெகத் கஸ்பார் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டு நிகழ்வினைச் சிறப்பிக்க உள்ளனர். தமிழ் ஆசிரியர்கள், பேராசிரியர்கள் இதுபோன்ற ஆண்டின் மிகப்பெரிய கூடல்களை தமிழ்ப்படிக்கும் மாணவர்களுக்கு கொண்டுசென்று கல்லூரி வகுப்பறைகளில் இதுகுறித்து பகிர்ந்து முடிந்தவர்கள் நேரில் கலந்துகொள்ளவும், முடியாதவர்கள் இணையவழியில் கண்டு அறிவைப் பெறவும் வலியுறுத்துவார்கள். அனைவரும் கலந்துகொண்டு பயன்பெறவும்...
|
|||||
![]() ![]() |
|||||
![]() ![]() |
|||||
![]() ![]() |
|||||
![]() |
|||||
by Swathi on 19 Nov 2024 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|