|
|||||
தமிழ் பரப்புரைக் கழகத்தை தொடங்கிவைத்து 24 மொழிகளில் தமிழ் பாடநூல்களை தமிழ்நாடு முதல்வர் திரு.ஸ்டாலின் வெளியிட்டார். |
|||||
![]() தமிழ் பரப்புரைக் கழகத்தை தொடங்கிவைத்து 24 மொழிகளில் தமிழ் பாடநூல்களை தமிழ்நாடு முதல்வர் திரு.ஸ்டாலின் வெளியிட்டார். உலகில் ஏறத்தாழ 90 நாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் வாழும் தமிழர்களுக்கும் இளந்தலைமுறையினருக்கும் தமிழ்மொழியைக் கற்பிக்கவும், பண்பாட்டுக் கூறுகளைக் கொண்டு செல்லவும் பல முயற்சிகளைத் தமிழ்நாடு அரசு எடுத்து வருகிறது. இதன் ஒருபகுதியாக தான் தமிழ் பரப்புரைக் கழகம் உருவாக்கப்படும் என அரசு ஆணை வெளியிட்டது. இதன் ஒருபகுதியாக தமிழை எளிமையாகக் கற்பதற்கான தமிழ்ப் பாடநூல்கள், வெளிநாடுகள் வெளி மாநிலங்களில் தமிழைக் கற்பிக்கும் அமைப்புகளுக்கு மற்றும் வெளி நிதியுதவி வழங்குதல், தமிழைத் திறம்பட கற்பிக்க ஆசிரியர்களுக்கான பயிற்சி வழங்குதல் முதலான நடவடிக்கைகள் மேற்கொள்ள தமிழ்ப் பரப்புரைக் கழகம் திட்டமிடப்பட்டது. முதற்கட்டமாக இத்திட்டத்திற்கு ரூ.1 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. தமிழை எளிமையாகக் கற்பதற்கான தமிழ்ப் பாடநூல்கள், வெளிநாடுகள் வெளி மாநிலங்களில் தமிழை கற்பிக்கும் அமைப்புகளுக்கு மற்றும் வெளி நிதியுதவி வழங்குதல், தமிழை திறம்பட கற்பிக்க ஆசிரியர்களுக்கான பயிற்சி வழங்குதல் முதலான நடவடிக்கைகள் மேற்கொள்ள நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது. இந்நிலையில் தான் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் இன்று தமிழ் பரப்புரை கழகத்தை துவக்கி விழா நடந்தது. முதல்வர் ஸ்டாலின் பங்கேற்று தமிழ் பரப்புரை கழகத்தை துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:
24 மொழிகளில் தமிழ் பாடநூல் இதற்கு மகுடம் வைப்பது போல் தமிழ் பரப்புரை கழகம் துவங்கப்பட்டுள்ளது. 30 நாடுகளில் அதிகமாகவும், 60 நாடுகளில் குறைந்த எண்ணிக்கையிலும தமிழர்கள் வாழ்கிறார்கள். சில நாடுகளில் எழுதவும், படிக்கவும் மறந்த தமிழர்கள் உள்ளனர். இவர்களுக்கு தமிழ் சொல்லிக்கொடுக்கத்தான தமிழ் பரப்புரை கழகம் துவங்கப்பட்டுள்ளது. இவர்களுக்காக 24 மொழிகளில் தமிழ் பாடநூல்கள் வெளியிடப்பட்டுள்ளன. சாதி, மதத்தால் பிரிக்க முடியாது 30 நாடுகள், 20 மாநிலங்களை சேர்ந்த தமிழ் அமைப்பின் பொறுப்பாளர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் இணைய வழியில் பங்கேற்றுள்ளனர். உணர்வால், உள்ளத்தால் தமிழால் நாம் அனைவரும் இணைந்துள்ளோம். அமெரிக்கா, குவைத், நார்வே உள்ளிட்ட நாடுகளை சேர்ந்தவர்களும் இணைந்துள்ளனர். மொழியால் இணைந்தவர்களை சாதி, மதத்தால் பிரிக்க முடியாது. தமிழால் ஒன்றிணைய வேண்டிய காலக்கட்டத்தில் தமிழ் பரப்புரை கழகம் துவங்கப்பட்டுள்ளது.
இந்த நேரலை நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து பதிவிட்டுள்ள சப்பான் தமிழ்ச்சங்கம் கூறியதாவது: குறிப்பிட்ட நேரத்தில் (மாலை 6.30) சரியாக ஆரம்பித்து, சுருக்கமாக (50 நிமிடங்களுக்குள்) ஆனால் கச்சிதமாக நடத்தப்பட்ட அரசு விழாவில் இணையவழியாக கலந்துகொண்டது மிக்க மகிழ்ச்சி.
சிறந்த முறையில் ஒலி, ஒளி, காணொளி ஏற்பாடுகளைச் செய்திருந்தார்கள் - பல நாடுகளிலிருந்து ஜும் மூலம் பலரும் பார்த்துக் கொண்டிருந்ததை நாம் காண பெரிய திரை இரண்டு பக்கமும் தெரியும் மாதிரி வைக்கப்பட்டிருந்தது. வெளி நாடுகளில் இருந்த சிலர் சில நிமிடங்கள் பேசினார்கள் - அந்த பேச்சுக்களை நேரடி ஒளிபரப்பு செய்தால் தரம் இருக்காது, இடைஞ்சல்கள் இருக்கும் என்பதால் அவற்றை முன்கூட்டியே பதிவு செய்து திருந்திய வடிவில் செய்து கோர்வையாக ஓடவிட்டார்கள்.
இவ்விழாவில் வெளியிடப்படும் படைப்புகளைப் பற்றி பக்கம் பக்கமாக பேசாமல் தெளிவான அசைந்தாடும் ஒளிப்பதிவாக காட்சிப்படுத்தியிருந்தார்கள். இதுகாறும் கேள்விப்பட்ட அரசு நிகழ்ச்சிகள் போலல்லாமல்- மிக நேர்த்தியாக ஏற்பாடு செய்தவர்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்.
புலம்பெயர்ந்த தமிழர்கள் அவர்களின் பிள்ளைகளுக்குச் சிறந்த, எளிய முறையில் தமிழைக் கற்பிக்க, அவர்களுக்குத் தேவையான பாடத்தரவுகளை, புத்தகங்களை, அசைந்தாடும் படங்களை (Animation) தயாரிக்கும் நோக்கத்தில் தொடங்கப்பட்டுள்ள இப்பாடப்புத்தகங்கள் உலகெங்கிலுமுள்ள 90நாடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. நாம் வாழும் சப்பான் நாட்டில் உள்ள நம் தமிழுறவுகள் பயன்பெறும் நோக்கிலும் சப்பானியர்களும் தமிழ்கற்றுக்கொள்ளும் வகையிலும் தயாரிக்கப்பட்டுள்ள “தமிழ்-சப்பானிய மொழி”பாடநூல்கள் நம்முடைய சப்பான் தமிழ்ச்சங்கத்திற்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது என்பதை மிகுந்த மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
தமிழர்கள் அதிகம் குடியிருக்கும் நிசிகசாய்,ஓசிமா,யோக்கோஃகமா போன்ற பகுதிகளில் தமிழ்கற்றுக்கொடுக்க நம் சப்பான் தமிழ்ச்சங்கத்தின் சார்பாக முன்னெடுப்பு எடுக்கப்படவுள்ளது.
உலகத்தமிழர்களிடத்தில் தாய்த்தமிழைக்கொண்டு சேர்க்க ஏற்படுத்தப்பட்டுள்ள இப்பரப்புரைக்கழகம் பெருவெற்றிபெற நெஞ்சார்ந்த நல்வாழ்த்துகளையும் தமிழ்நாடு அரசிற்கு சிரம்தாழ்ந்த நன்றியினையும் கூறிக்கொள்கிறோம்.
|
|||||
![]() ![]() |
|||||
![]() ![]() |
|||||
![]() ![]() |
|||||
![]() |
|||||
by Swathi on 26 Sep 2022 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|