LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

தமிழ் உரிமை மீட்பு எழுச்சி மாநாடு கோவையில் நடைபெற்றது. அதில் முக்கிய 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

கோயம்புத்தூர்த் தமிழ்ச் சங்கம் தமிழ்க் காப்புக் கூட்டியக்கம் இணைந்து நடத்தும் தமிழ் உரிமை மீட்பு எழுச்சி மாநாடு 2022 கோவை இலட்சுமி திருமண மண்டபம், தெக்குபாளையத்தில் செப்டம்பர் 25,2022 அன்று தமிழ் மிகச்சிறப்பாக நடைபெற்றது. இம்மாநாட்டின் நோக்கமானது சங்ககாலம் முன்தொட்டு தமிழ்பெற்று இருந்த ஏற்றத்தை இழந்து இருக்கின்ற நிலையில் அந்த உரிமையை மீட்டு எடுப்பதற்கு உண்டான முயற்சிதான் இந்த மாநாட்டின் மைய நோக்கம். தற்போதைய இளைய தலைமுறையினரிடம் நமது சங்ககாலத் தமிழை கொண்டு சேர்ப்பது.எங்கும் தமிழ், எதிலும் தமிழ், வழிபாட்டு தலங்கள், சடங்குகள், வாழ்வில் சடங்குகளில் தமிழ், பள்ளி, கல்லூரி, நீதிமன்றங்கள் ஆகியவற்றில் தமிழையே பயன்படுத்த வேண்டும் போன்ற பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி இந்த மாநாடு நடைபெறுகின்றது. இந்த மாநாடு கோவை மாவட்டத்தை சேர்ந்த அனைத்துத் தமிழ் சங்கங்கள், மாநில மற்றும் அகில இந்தியத் தமிழ்ச்சங்கங்களின் ஒருங்கிணைப்போடு நடைபெறுகின்றது.

இந்நிகழ்ச்சியில் மின்சாரதுறை அமைச்சர் செந்தில் பாலாஜி சிறப்பு விருந்தினரராகக் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளார்கள்.பேரூர் ஆதீனம் தவத்திரு. சாந்தலிங்க மருதாசல அடிகளார் மற்றும் சிரவை ஆதீனம் தவத்திரு. குமரகுருபர சுவாமிகள் ஆகியோரின் அருளாசியோடும் விழா நடைபெறவுள்ளது. தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழக மேனாள் துணைவேந்தரும், ஏவிபி பள்ளி தலைவருமான முனைவர் சி. சுப்பிரமணியம் இம்மாநாட்டின் நெறியாளாராக உள்ளார்.துவக்க விழாவில் முன்னாள் நீதிபதி ந. கிருபாகரன் தொடக்கவுரையாற்றுகிறார். மேலும் கோவை, பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் பெ. காளிராசு கருத்துரையாற்றுகிறார், பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் செகநாதன் வாழ்த்துரை வழங்கிறார் தமிழ்ப் பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர் வி. திருவள்ளுவன் சிறப்புரையாற்றுகிறார். மேலும் விழாவில் தமிழ் மற்றும் கல்வித்துறை இயக்குனர்கள் மற்றும் அனைத்துநிலைத் தமிழ் அறிஞர்கள் கலந்து கொள்ள உள்ளார்கள்.

மாநாட்டின் ஒருங்கிணைப்பாளராக தஞ்சை தமிழ் பல்கலை முன்னாள் துணைவேந்தர் சுப்பிரமணியம் அவர்கள் பங்காற்றினார். மேலும் மாநாட்டில் தமிழ்ச் சங்கமம் தலைவர் செ. துரைசாமி, தமிழ்க்காப்புக் கூட்டியக்கம் தலைவர் கா. ச. அப்பாவு, அமைப்புச் செயலாளர் பூ. அ. இரவீந்திரன், மாநாட்டுப் பொருளாளர் கவிஞர் இல. மணி, சமூக செயற்பாட்டாளர் லி. கனகசுப்பிரமணி ஆகியோர் கலந்துகொண்டனர்.

மாநாட்டில் கீழ்காணும் 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

1. உலகில் பல நாடுகளில் இருப்பதைப்போலவும், இந்தியாவின் பல நாடுகளில் இருப்பதைப்போலவும் பள்ளிக்கல்வி முழுதும் தாய்மொழியிலேயே கற்பிக்கப்படவேண்டும்.
2. மாநில பாடத்திட்டம், தேசியப் பாடத்திட்டம் , பன்னாட்டுப் பாடத்திட்டம் ஆகிய தமிழ்நாட்டில் இயங்கிவரும் அனைத்திலும் தமிழே பயிற்றுமொழியாக இருக்கவேண்டும். அனைத்து விதமான கல்லூரி பாடத்திட்டத்தில் தமிழ் ஒரு பாடமாக வைக்கப்படவேண்டும். மேலும் போதிய கலைச்சொற்கள் உள்ள துறைகளில் பாடத்திட்டங்களை தமிழில் உருவாக்கவேண்டும். தொடர்ச்சியாக கலைச்ச்சொல்லாக்கப் பணிகள் உருவாக்கப்பட்டு தமிழிலிலேயே கல்லூரிப் பாடங்கள் அமையவேண்டும்.
3. அனைத்து துறைகளிலும் தொடர்புகள், கடிதப்போக்குவரத்துகள் , தொடர்பு ஆவணங்கள் தமிழில் அமையவேண்டும்.
4. வழக்காடு மொழியாக தமிழே இருக்கவேண்டும்.
5. 8-வது அட்டவணையில் உள்ள அனைத்து மொழிகளையும் ஆட்சிமொழியாகவும், அலுவல் மொழியாகவும் ஆக்கவேண்டும்.
6. வழிபாட்டு மொழியாக தமிழ் மொழி இருக்கவேண்டும் என்று அரசாணை வெளியிட்டு நடைமுறைப்படுத்த கேட்டுக்கொள்கிறது.
7.தமிழர்களின் அனைத்து வாழ்வியல் சடங்குகளும் தமிழில் இருக்கவேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது.
8. வணிக நிறுவனங்களின் முகப்புப் பலகைகள் தமிழில் இருக்கவேண்டும் என்று உறுதிசெய்து அதை கண்காணிக்கும் பொறுப்பை உள்ளாட்சி அமைப்புகளுக்குக் கொடுக்கவேண்டும்.
9. திருக்குறளை உலகப் பொதுமறையாக அறிவிக்குமாறு ஐக்கியநாடுகள் கல்வி-பண்பாட்டு அமைப்பான யுனெஸ்கோ -வை கேட்டுக்கொள்கிறோம். அதற்கான முயற்சியை ஒன்றிய அரசும் , தமிழ்நாடு அரசும் மேற்கொள்ளவேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறது.
10.1330 திருக்குறளையும் ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள சங்ககிரி மலையில் ஒவ்வொரு குறளையும் தனித்தனியாக பதிவுசெய்ய நிதி ஒதுக்கி செயல்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
11. பல தமிழ் ஆளுமைகளுக்கு ஒன்றிய அரசு அஞ்சல் தலை வெளியிட்டுள்ளது. தொல்காப்பியருக்கும் சித்திரை 1 அன்று அஞ்சல்தலை வெளியிடவேண்டும் என்று இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.
12. சித்திரை முழுமதி நாளில் தொல்காப்பியர் சிலைகளுக்கு மாலை அணிவிக்க அரசு ஆணை வெளியிட்டுள்ளதுபோல் உள்ளதுபோல் சித்திரை மாதத்தை தொல்காப்பியர் மாதமாக அறிவிக்க வேண்டுகிறோம்.
13. தமிழ்நாடு அரசின் வேலைவாய்ப்புகளில் தமிழ் வழியில் கல்விகற்றோருக்கு 80% தனி ஒதுக்கீடு செய்ய தமிழ்நாடு அரசை கேட்டுக்கொள்கிறது.
14. ஊடகங்களில் கலப்பற்ற தமிழ் பேசுவதற்கு மலேசியா , சிங்கப்பூர் ஆகியவற்றில் இருப்பதுபோல் ஒரு தரக்கட்டுப்பாட்டு அமைப்பை ஒன்றிய மாநில அரசுகள் உருவாக்குமாறு இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.
15. தமிழில் பெயர் சூட்டுதல், பெயரின் முதல் எழுத்தை தமிழில் எழுதுதல் , தமிழில் பெயர் தாங்கி பள்ளிகளில் சேரும் குழந்தைகளுக்கு ஊக்கத்தொகை வழங்கலாம் எனவும் அரசுக்கு பரிந்துரை செய்யப்படுகிறது.
16. தமிழகத்திலிருந்து புறப்படுகிற, தமிழகத்திற்கு வந்துசேர்கிற அனைத்து வானூர்திகளிலும் தமிழில் கட்டாயமாக அறிவிப்புகள் இடம்பெறவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறது.

by Swathi   on 27 Sep 2022  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
சென்னையில் முனைவர் மு. இளங்கோவனின் இசைத்தமிழ்க் கலைஞர்கள் நூல் வெளியீட்டு விழா சென்னையில் முனைவர் மு. இளங்கோவனின் இசைத்தமிழ்க் கலைஞர்கள் நூல் வெளியீட்டு விழா
இலக்கியவாதிகளா?  வணிகர்களா? யார் முன்னிற்பது - இரண்டு வணிக நிறுவனங்களின் இலக்கிய ஊக்குவிப்பு இலக்கியவாதிகளா? வணிகர்களா? யார் முன்னிற்பது - இரண்டு வணிக நிறுவனங்களின் இலக்கிய ஊக்குவிப்பு
தஞ்சையில் இணையை தமிழ் மாநாடு நிறைவுவிழா தஞ்சையில் இணையை தமிழ் மாநாடு நிறைவுவிழா
மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் பேத்தி திருமதி.லலிதா பாரதி அவர்கள் வயது முதிர்வின் காரணமாக  இயற்கை எய்தினார் மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் பேத்தி திருமதி.லலிதா பாரதி அவர்கள் வயது முதிர்வின் காரணமாக இயற்கை எய்தினார்
கீச்சுக்குரலில் இருந்து கம்பீர குரலுக்கு மாற சிறப்பு சிகிச்சை மறுத்த்துவர் குமரேசன்  எழுதிய புத்தக வெளியீட்டு விழாவில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேச்சு கீச்சுக்குரலில் இருந்து கம்பீர குரலுக்கு மாற சிறப்பு சிகிச்சை மறுத்த்துவர் குமரேசன் எழுதிய புத்தக வெளியீட்டு விழாவில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேச்சு
பத்மஸ்ரீ  முனைவர் ஔவை நடராசன் அவர்கள் மறைவுக்கு புகழஞ்சலி பத்மஸ்ரீ முனைவர் ஔவை நடராசன் அவர்கள் மறைவுக்கு புகழஞ்சலி
வலைத்தமிழ் அமைப்புகளும் அரசுப்பள்ளி மாணவர்களுக்கான  பல்வேறு முன்னெடுப்புகளும் வலைத்தமிழ் அமைப்புகளும் அரசுப்பள்ளி மாணவர்களுக்கான பல்வேறு முன்னெடுப்புகளும்
"தமிழ் வளர்ச்சியில் சைவ ஆதீனங்களின் பங்கு" தேசியக் கருத்தரங்கம் 2022 என்னும் தலைப்பில் நடைபெற்ற தேசிய கருத்தரங்க நிகழ்வில் 20 ஆதீனங்களும் ஒரே மேடையில்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.