|
||||||||
தமிழைத் தமிழியாய் பேசுவோம்-உங்கள் ஊரில் இலவச பயிற்சி நடத்த ,பயிற்சிபெற |
||||||||
இன்றைய இளம் பெற்றோர்கள் , ஆசிரியர்கள், பன்னாட்டு நிறுவனங்களில் பணியாற்றும் சூழலில் வசிப்பவர்கள் , வெளிநாட்டில் வசிப்பவர்கள் என்று பலரும் தங்கள் பேச்சில் எத்தனை விழுக்காடு தமிழ் , ஆங்கிலம், பிறமொழி கலந்துள்ளது என்று சோதித்துப் பார்க்கவும்.
மிகப்பெரிய வியப்பாக இருக்கும். ஆம், வாய்ப்புள்ளபோது மேடையில் பேசிப்பாருங்கள், உங்களுக்கு தமிழில் பேச விரும்பினால்கூட உரிய தமிழ் வார்த்தையைத் தேடும் அளவுக்கு ஆங்கிலம் நம்மை ஆக்கிரமித்திருக்கும்.
என்ன தீர்வு? எங்கே சென்று இதற்குப் பயிற்சி எடுப்பது? ஒழுங்கு செய்யப்பட்ட வழிமுறை உள்ளதா?
தமிழைத் தமிழாய் பேசுவோம்.. வரும் 21ந்தேதி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உங்கள் நாட்டில், உங்கள் ஊரில், உங்கள் பகுதியில் , நம் பேச்சுத்தமிழை சரிசெய்வோம் வாருங்கள்..
இளையதலைமுறை பெற்றோர்கள் நாம் சரியான தமிழை தமிழாகவும், ஆங்கிலத்தை ஆங்கிலமாகவும் பேசுவது மட்டுமே நம் அடுத்த தலைமுறை பிள்ளைகளை சரியான தமிழ் பேச ஊக்கப்படுத்தும்.
தமிழ்ப் பள்ளிக்கு சென்று தமிழ் பேசவேண்டியது நம் குழந்தைகள் மட்டுமல்ல , நாமும்தான்.. வாருங்கள்.. வழிமுறை வகுப்போம்.
இதற்கு வாழ்காட்டுதல் குழு , தமிழறிஞர் குழு, வார்த்தைகளைத் தொகுத்த கையேடு, இணையதளம், ஒரு மணி நேரப் பயிற்சி ஆகியவை ஏற்படுத்தப்பட்டு ஆர்வமுள்ள தன்னார்வ ஒருங்கிணைப்பாளருக்கு இலவசப் பயிற்சிகள் வழங்கப்படும்..
உங்கள் ஊரில் இலவச பயிற்சி நடத்த /பயிற்சிபெற தொடர்புகொள்ளவும்..
-59 மணித்துளிகள் ஒவ்வொரு வாரமும்
- 5 மணித்துளிகள் நிகழ்ச்சி தொடக்கம்
- தலைப்பு கொடுக்கப்படும். உடன் மனதில் பட்டதை தயாரிப்பு இல்லாமல் பேசவேண்டும்.
- ஒவ்வொருவரும் 3 மணித்துளிகள் பேச, மற்றவர்கள் அந்தப் பேச்சில் கலந்துள்ள ஆங்கில , பிறமொழி வார்த்தைகள் , அதற்கு இணையான பயன்பாட்டில் உள்ள தமிழ் வார்ந்தைகளை குறித்துக்கொள்ளுதல்.
- 2 நிமிடம் பேசியவரின் பேச்சை மீளாய்வு செய்து , வார்த்தைகளை சுருக்கமாகக் குறிப்பிடுதல்.
- 10 பேர் × 5 மணித்துளிகள் = 50 மணித்துளிகள்
- 5+50+4(நிறைவு செயல்பாடுகள்).
-ஏதும் புதிய வார்த்தைகள் , பயன்பாட்டில் உள்ள வார்த்தைகளை குழுவால் அறிந்துகொள்ள முடியாவிட்டால் "தமிழைத் தமிழாய் பேசுவோம்" வழிகாட்டுகள் குழுவிற்கு இணையம் வழி தெரிவிக்கலாம். அவை தமிழறிஞர் குழுவுக்கு தெரிவிக்கப்பட்டு ஐயங்கள் தெரிவிக்கப்படும்.
|
||||||||
by Swathi on 02 Jun 2023 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|