LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    வலைத்தமிழ் சேவைகள்-Services Print Friendly and PDF
- தமிழைத் தமிழாய்ப் பேசுவோம்

தமிழைத் தமிழாய் பேசுவோம்! கையேடு

"தமிழைத் தமிழியாய் பேசுவோம்" இயக்கம் கடந்த ஆகஸ்ட் 2021 -ல்  வட அமெரிக்காவில் தொடங்கப்பட்டது.

பன்னாட்டு சூழலில் ஆங்கிலமும்,பிற மொழிகளின் பயன்பாடும் தவிர்க்க முடியாத நிலையில், 100க்கும் மேற்பட்ட நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் ,தாய்மொழி தெரிந்தவர்களிடையே பிறமொழி கலப்பின்றி தூய தமிழில் பேசும் நிலையை ஏற்படுத்த விழிப்புணர்வும், பழக்கமும், பயிற்சியும் அவசியமாகிறது.  

தமிழை பிறமொழி கலப்பில்லாமல் குறிப்பாக  ஆங்கிலத்தின் தாக்கத்திலிருந்து விடுவிக்க, இளம் தலைமுறையினர், குறிப்பாக பெற்றோர்கள் முயற்சிக்கவேண்டும் என்ற நோக்கில்,  அதுகுறித்தான புரிதலை ஏற்படுத்த, 3 முதல் 6 மாதம் சுயமாக பயிற்சி எடுத்து உரிய கையேடு, இணையவழி பயிற்சிக்கட்டமைப்பு  ,தமிழறிஞர்கள் வழிகாட்டுதலுடன் பயிற்சிவழங்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. 


இதன் தேவை தெரிந்தாலும், இதை நடைமுறைப்படுத்தி வெற்றிகாண உரிய உத்திகளை வகுப்பதில் தொடர்ந்து கலந்துரையாடி, இந்த முக்கிய அமைப்பின் தலைமைப்பொறுப்பை உரியவர் ஏற்று தொடர்ந்து செயலாற்றவேண்டும் என்ற இலக்கில் தேடிவந்தோம்.  இதற்கு பொருத்தமான ஆளுமையாக நமக்குக் கிடைத்தவர் கடனாவில் வசிக்கும் பேராசிரியர் முனைவர். இரா.செல்வகுமார்.  தூய தமிழ் ஆர்வலர், உலகம் அறிந்த தூய தமிழ் பற்றாளர், இதே சிந்தனையில் தொடர்ந்து இயங்குபவர். 

அமைப்பு தொடங்கப்பட்டுவிட்டது, செயல்திட்டங்கள் முடிவுசெய்யப்பட்டுவிட்டன , தலைமைபொறுப்பு  , தமிழறிஞர்களைக் கொண்ட கருத்துரைஞர் குழு, தன்னார்வக் குழுவினர் அடையாளம் காணப்பட்டுவிட்டனர், அடுத்து செயலில் இறங்கவேண்டியதுதான்..

முதல் அடியாக,  இன்று தமிழர்களின் பயன்பாட்டில் உள்ள ஆங்கில, பிறமொழி வாக்கியங்களைத் தொகுத்து அதற்கு இணையான பயன்பாட்டுத் தமிழ் வாக்கியங்களை சேர்த்து ஒரு கையேடு உருவாக்குதல். இதுவே , இந்த மூன்று முதல் ஆறு மாத கால பயிற்சியின் கையேடாக அமையும்.

நண்பர்களே, நீங்கள் தமிழில் பேசும்போது இந்த வார்த்தை, இந்த வாக்கியம் அதிகம் ஆங்கிலம், பிறமொழியில் வந்துவிடுகிறது என்று நினைப்பவற்றை, பிறர் பேசும்போது தமிழ் பேசுவதாக நினைத்து இப்படி ஆங்கிலம் கலந்து பேசுகிறார்களே என்று உணர்த்தவற்றை கீழ்காணும் சுட்டியில் சேர்க்கவும்.  இணையான தமிழ்வார்த்தை தெரியாவிட்டால் விட்டுவிடவும்.  

நாம் பயன்பட்டு வார்த்தைகளுடன் விரைவில் ஒரு கையேடு வெளியிட்டு, அடுத்ததாக பயிற்சி வகுப்புகளை உலகெங்கும் தமிழர்கள் வாழும் நாடுகளில் தன்னார்வ முயற்சியாக அவரவர் எடுக்க பயிற்றுநரை பயிற்றுவிக்கும் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

நம் அன்றாட பயன்பாட்டில் உள்ள பிறமொழி வார்த்தைகளை, வாக்கியங்களை இங்கே சேர்க்கவும்.
https://docs.google.com/forms/d/e/1FAIpQLSecVmD_Pk8micSMvKS-u75AGgWV73XHRcpVOi6Zcd5laXikGw/viewform?usp=sf_link
பேரன்புடன், 
தமிழைத் தமிழாய் பேசுவோம் இயக்கம்,
மின்னஞ்சல்: thamizhaaipesu.valaitamil@gmail.com  
இணையம் :https://thamizhaaipesu.valaitamil.com/
by Swathi   on 03 Jun 2023  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
தமிழ் வளர்ச்சியில் வலைத்தமிழின் கவனம். தமிழ் வளர்ச்சியில் வலைத்தமிழின் கவனம்.
வலைத்தமிழ் சேவைகள் எப்படி திட்டமிடப்படுகிறது? வலைத்தமிழ் சேவைகள் எப்படி திட்டமிடப்படுகிறது?
பிப்ரவரி 11-ம் தேதி திருக்குறள் ஐம்பெரும் விழாவில் Thirukkural Translations in World Languages பிப்ரவரி 11-ம் தேதி திருக்குறள் ஐம்பெரும் விழாவில் Thirukkural Translations in World Languages" நூல் வெளியீடு
தூய தமிழ்ப்பெயரை நம் பிள்ளைக்கு சூட்டுவோம். தமிழ் அடையாளம் காப்போம்.. தூய தமிழ்ப்பெயரை நம் பிள்ளைக்கு சூட்டுவோம். தமிழ் அடையாளம் காப்போம்..
தமிழைப் பிறமொழி கலப்பில்லாமல் பேச - தமிழைத் தமிழாய்ப் பேசுவோம் தமிழைப் பிறமொழி கலப்பில்லாமல் பேச - தமிழைத் தமிழாய்ப் பேசுவோம்
தமிழைத் தமிழியாய்ப் பேசுவோம் - தமிழர்களின் பயன்பாட்டில் உள்ள ஆங்கிலம், பிறமொழி சொற்றொடர்களைத் தொகுக்கிறது.. தமிழைத் தமிழியாய்ப் பேசுவோம் - தமிழர்களின் பயன்பாட்டில் உள்ள ஆங்கிலம், பிறமொழி சொற்றொடர்களைத் தொகுக்கிறது..
தமிழ் மொழியில் பேசுவதை ஊக்குவிக்கும் விதமாக தன் கடையில் பதாகையை வைத்திருக்கும் சிங்கப்பூர் Madras Jeweller Sdn. Bhd  நிறுவனத்தை வாழ்த்துவோம்.. தமிழ் மொழியில் பேசுவதை ஊக்குவிக்கும் விதமாக தன் கடையில் பதாகையை வைத்திருக்கும் சிங்கப்பூர் Madras Jeweller Sdn. Bhd நிறுவனத்தை வாழ்த்துவோம்..
உலகத் தமிழ்ப் பெயர்கள் பேரியக்கத்தை மாண்புமிகு தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் தொடங்கி வைத்தார் உலகத் தமிழ்ப் பெயர்கள் பேரியக்கத்தை மாண்புமிகு தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் தொடங்கி வைத்தார்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.